அரச சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சை பரீட்சை நிலையத்தினுள் முஸ்லிம் பெண்களுக்கு அசௌகரியங்கள்

அதிகாரிகளுக்கு முறைப்பாடு

0 1,413

கடந்த 23 ஆம் திகதி சனிக்­கி­ழமை அரச சேவைக்கு ஆட்­சேர்ப்­ப­தற்­கான போட்டிப் பரீட்­சை­யொன்­றின்­போது பரீட்சை எழு­திய முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அணிந்­துள்ள ஹிஜாப் காது­களை மூடி­ய­தாக இருக்­கக்­கூ­டாது அனை­வரும் ஹிஜாபை சரி­செய்து காதுகள் தெரி­யும்­படி சரி செய்­து­கொள்­ள­வேண்­டு­மென பரீட்சை நடை­பெ­றும்­போது உத்­த­ர­வி­டப்­பட்­டதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­தாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை கடல்சார் சூழல் பாது­காப்பு அதி­கார சபை­யினால் கொழும்பு பாது­காப்பு சேவைக்­கல்­லூ­ரியில் நடை­பெற்ற முகா­மைத்­துவ உத­வி­யாளர் தரம்– III க்கு ஆட்­சேர்ப்­ப­தற்­காக நடை­பெற்ற போட்­டிப்­ப­ரீட்­சை­யின்­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் கடல்சார் சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் பொது முகா­மை­யா­ள­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது;

இப்­போட்டிப் பரீட்சை மொழி அறிவு, பொது அறிவு என இரண்டு கட்ட வினாத்­தாள்­களை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்­டது. பொது அறிவு வினாத்­தாள்கள் வழங்­கப்­பட்டு சில நிமி­டங்­களில் மண்­டப அறை –1 இன் பரீட்சைப் பொறுப்­ப­தி­காரி ஹிஜாப் அணிந்­துள்ள அனைத்துப் பரீட்­சார்த்­தி­களும் காதுகள் தெரி­யும்­ப­டி­யாக ஹிஜாபை சரி­செய்ய வேண்டும் எனப் பணித்­துள்ளார். வினாத்தாள் வழங்­கப்­பட்டு எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி பரீட்சை மேல­தி­காரி இவ்­வாறு செயற்­பட்­டதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கினர். சிலர் அவ்­வாறு சரி செய்­து­கொண்­டனர்.

ஹிஜாபை சரி செய்­யாத பரீட்­சார்த்­தி­களின் பரீட்சைச் சுட்­டி­லக்­கங்­களைக் குறித்துக் கொண்ட பரீட்சை நிலைய அதி­கா­ரிகள் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளார்கள்.

இவ்­வாறு உத்­த­ர­வி­டு­வ­தற்­கான கார­ணங்­களை பரீட்­சார்த்­திகள் வின­வி­ய­போதும் பரீட்சை நிலைய பொறுப்­ப­தி­காரி பரீட்சை விதியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவே பதில் தெரி­வித்தார்.

இவ்­வாறு ஹிஜாபை சரி செய்து காதுகள் தெரி­யும்­படி செய்­யும்­படி சட்­டத்தில் உள்­ளதா? என பரீட்­சார்த்­திகள் வின­வி­ய­போது அவர்­களின் பரீட்சை இலக்கம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு அவர்­க­ளது பரீட்சை முடி­வுகள் இரத்­துச்­செய்­யப்­படும் என பரீட்சை மேலதிகாரி அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.