ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் காலிதா ஸியா டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 30 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரும் இரு ஊழல் வழக்குகளில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான கலிதா ஸியா நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்து, வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என காலிதாவின் வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த டாக்கா உயர்நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் இரண்டாண்டுகளுக்கு அதிகமான காலம் சிறைவாசம் விதிக்கப்பட்ட ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என்று அறிவித்துவிட்டது.
-VIdivelli