சிங்கள மக்களே என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

பதவிப்பிரமாணத்தையடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு

0 1,604

”இலங்­கையின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக வர­லாற்று சிறப்­பு­மிக்க ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில் பத­வி­யேற்­றதன் பின்னர், துட்­ட­கை­முனு மன்­னனின் உரு­வச்­சி­லைக்கு அரு­கி­லி­ருந்து நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­வ­தை­யிட்டு பெரு­ம­கிழ்­சி­ய­டை­கின்றேன். சிங்­கள மக்களின் ஆத­ர­வி­லேயே முழு அளவில் வெற்­றி­பெற்­றுள்ளேன்” என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவைக் கோரி­யி­ருந்த போதிலும் எதிர்­பார்த்­த­ளவு அவர்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. இருப்­பினும், அனைத்து மக்­களின் ஜனா­தி­பதி என்ற வகையில் எதிர்­கா­லத்­தி­லேனும் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வரு­மாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கின்றேன் எனவும் குறிப்­பிட்டார்.

அநு­ரா­த­புரம், -ருவன்­வ­லி­சா­யவில் நேற்று திங்­கட்­கி­ழமை ஜனா­தி­ப­தி­யாக பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்­டதன் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்ந்தும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்­றி­பெற முடியும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்தேன். எமது வெற்­றியில் தமிழ், முஸ்லிம் மக்­களும் பங்­கு­கொள்ள வேண்­டு­மென்று அழைப்பு விடுத்தேன். ஆனால், எதிர்­பார்த்­த­ளவு அவர்­களின் ஆத­ரவு கிடைக்கப் பெற­வில்லை. இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து அனை­வரும் செயற்­ப­டு­வ­தற்கு மீண்டும் அழைப்பு விடுக்­கின்றேன்.

கிடைக்கப் பெற்­றுள்ள அமோக வெற்­றிக்கு மகா­நா­யக்க தேரர்­களின் ஆசிர்­வா­தமே பிர­தா­ன­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இன்று நான் முப்­படை தள­ப­தி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் நாட்டு மக்கள் அனை­வ­ரது பாது­காப்­பையும் பொறுப்­பேற்­கின்றேன். அனைத்­தின மக்­க­ளுக்கும் சிறந்த தலை­வ­ராக செயற்­ப­டுவேன். தெற்கில் பிறந்த நான் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரியில் பௌத்­த ­ம­த­க் கோட்­பா­டு­க­ளுக்­க­மைய கல்வி கற்­ற­மையால் பௌத்த மதம் என்னுள் பிரிக்க முடி­யாத ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது.

பௌத்­த­மதக் கோட்­பா­டு­களும், கலா­சா­ரங்­களும் முழு­மை­யாக பாது­காக்­கப்­படும். அதற்கு முழு­மை­யான என்றும் நிலை­யான அரச ஆத­ரவை வழங்­குவேன். நாட்டில் வாழும் ஏனைய பிர­ஜை­களின் மதமும், அவர்­களின் பாரம்­ப­ரிய தனித்­து­வமும் எவ்­வித பாதிப்­பு­மின்றிப் பாது­காக்­கப்­படும்.

எனது பதவிக் காலத்­திற்குள் பௌத்த மதத்­தினை பாது­காத்து அதனை தொடர்ந்து வளர்ச்­சி­பெ­றவும் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டு­வ­துடன், நெடுநாள் கலா­சா­ரத்தைக் கொண்­டுள்ள பௌத்த மதம் தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­படும். வர­லாற்று காலம் தொடக்கம் இலங்­கையர் என்ற கொள்­கையின் கீழ் வாழ்ந்த மற்றும் வாழும் மக்கள் தொடர்ந்து இலங்­கை­யர்­க­ளா­கவே மதிக்­கப்­ப­டு­வார்கள். அதில் எவ்­வி­தம மாற்­றமும் கிடை­யாது.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து இன்­று­வரை எனக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு மன­தார நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். பொது­ஜன பெர­மு­னவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக் ஷ மற்றும் கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் உட்­பட நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புதிய அர­சியல் கலா­சாரம், தேர்தல் காலத்தில் பிற­ருக்கு சேறு­பூசாமை, பொலித்தீன் பாவனை நிரா­க­ரிப்பு, சுற்­று­சூழல் பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்கள் அனைத்தும் வெற்­றி­க­ர­மான முறையில் முன்­னெ­டுத்து செல்­லப்­பட்­டன. இவை அனைத்தும் இனி­வ­ரும் காலங்­களில் தொடர்ந்து முறை­யாக முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும்.

எதிர்­பார்த்த இலக்­கினை அடைந்து விட்டோம். இனி, தேசியம் என்ற அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து முன்­னோக்கிச் செல்ல வேண்­டி­யது மாத்­தி­ரமே மிகு­தி­யாக காணப்­ப­டு­கின்­றது.

சுபீட்­ச­மான எதிர்­காலம் என்ற தேர்தல் கொள்கைப் பிர­க­ட­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே மக்­க­ளா­ணையை பெற்­றுள்ளேன். மக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பொரு­ளா­தார முறைமை, குறிப்­பிட்­டதை போன்று 5வருட பதவிக் காலத்­திற்குள் செயற்­ப­டுத்­தப்­படும்.

ஒரு­மித்த நாடு , இறை­யா­ண்மை, தேசிய பொரு­ளா­தாரம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அரச நிர்வா செய­லொ­ழுங்கு செயற்­ப­டுத்­தப்­படும். தேசிய பாது­காப்­பிற்கே எனது ஆட்­சியில் முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டும என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் கிடை­யாது. கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பொரு­ளா­தார முறைமை நிகழ்­கா­லத்தில் உரு­வாக்­கப்­பட்டு அவை எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரு­க்கும் சாத­க­மாக அமையும் விதத்தில் மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

அனைத்து நாடு­க­ளு­ட­னான உற­வு­களும் எவ்­வித பார­பட்­சமும் இன்­றிய முறையில் முன்­னெ­டுத்து செல்­லப்­படும். சர்­வ­தேச பலம் வாய்ந்த நாடு­களின் அதி­காரப் போட்­டிக்குள் நாம் பலி­யாக வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. அனைத்து உலக நாடு­க­ளு­டனும் நடு­நி­லை­யான பக்­கச்­சார்­பற்ற கொள்­கையைப் பின்­பற்­றுவேன். அதே­போன்று நாட்டின் இறை­யாண்மை மற்றும் சுயா­தீனத் தன்­மைக்கு தாக்கம் செலுத்தும் எந்­த­வொரு விட­யத்­திற்கும் இட­ம­ளியேன். 21ஆம் நூற்­றாண்­டினை நோக்­கிய இன்­றைய வாழ்க்கை முறையில் இலங்கை மக்­களும் சவால்­களை எதிர்­கொள்ளும் அரச நிர்­வாகம் செயற்­ப­டுத்­தப்­படும்.

ஊழல் மோச­டி­யற்ற அரச நிர்­வாகம், சட்­டத்தின் ஆட்­சியின் பிர­கா­ர­மான சட்டக் கட்­ட­மைப்பு ஆகி­யவை மீண்டும் முறை­யாகப் பல­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­படும். தேசிய நிதி மோச­டி­க­ளுக்கு எந்­நி­லை­யிலும் இட­ம­ளிக்க முடி­யாது. இதற்­கான முறை­யான மார்க்­கங்­க­ளையும் இனி செயற்­ப­டுத்­துவேன். அனைத்து துறை­க­ளிலும் நவீன தொழி­நுட்ப முறை­மைகள் அமுல்­ப­டுத்­தப்­படும்.

நீதி­யா­னதும், நேர்­மை­யா­ன­து­மான அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வ­தற்­கு­மான ஒத்­து­ழைப்­பினை அனை­வரும் வழங்க வேண்டும். அனைத்து மக்­க­ளுக்­கா­கவும் செயற்­ப­டு­வதே ஜனா­தி­பதி பத­வியின் கட­மை­யாகக் காணப்­படும்.

பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து ஒரு­போதும் விடு­ப­டவும் மாட்டேன். நிறை­வு­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் எனக்கு ஆத­ரவு வழங்­கிய மற்றும் ஆத­ரவு வழங்­கா­ம­லி­ருந்த அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­க­ளையும் ஜனா­தி­பதி என்ற பதவி நிலை­யி­லி­ருந்து முழு­மை­யாகப் பாது­காப்பேன்.

தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட திட்­டங்கள் பல­மாகக் கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ளன. கண்முன் பல சவால்கள் காணப்­ப­டு­கின்­றன. அக்­க­றை­யி­ருந்தால் அனைத்து சவால்­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும். நாட்டை முன்­னேற்­று­வ­தற்­கான அனைத்து திட்டங்களும் கைவசம் உள்ளன.

இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய நான் நாட்டு மக்களின் நன்மைக்காக எந்நிலையிலும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நாட்டு மக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன். கிடைக்கப்பெற்ற மக்களாணையை முறையாக செயற்படுத்த எனது கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தை விரைவில் தோற்றுவிப்பேன்.

இது என் தாய்நாடு. என் நாட்டின் மீது எனக்கு முழுமையான உரிமை மற்றும் பற்று உண்டு. சுபீட்சமான எதிர்காலத்தை உடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் என்னுடன் ஒன்றுபட வேண்டும் என்றார்.-Vidivelli

  • அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து இ. ஹஷான்

 

Leave A Reply

Your email address will not be published.