முஸ்லிம்களை இலக்கு வைத்த கூற்றுக்கள்:

கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை

0 1,494

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் உப­த­லை­வரும்  முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான கருணா அம்மான் என அறி­ய­ப்படும் வினா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன், முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வெளி­யிட்­ட­தாகக் கூற­ப்படும் கருத்­துக்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் ஹூல்  அனுப்­பி­யுள்ள முறைப்­பாட்­டுக்­க­மைய இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. அதன்­படி குறித்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு பொலிஸ் தலை­மை­ய­கத்­தினால்  குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்தல்  வாக்குப் பதி­வுகள் இடம்­பெற முன்னர், கருணா அம்மான்  வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும்  கருத்­துக்­களில், முஸ்லிம், தமிழ் மக்­க­ளி­டையே சந்­தே­கங்­களை தோற்­று­விக்கும் வகையில் கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்­ட­தாக முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக,  தேர்­தலின் போது, சஜித் வெற்­றி­பெற்றால் கிழக்கில் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் தமி­ழர்­களின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கு­மென கருணா அம்மான்  தெரிவிக்கும் காணொலி வெளியாகியிருந்தது. அந்த காணொலியும் விசாரணைக்காக விசாரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.