நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடனும், அரசாங்கத்துடனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்தியிருக்கிறது. நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துக்கள். இந்நிலையில் நாட்டின் பிரஜைகள் அனைவரும், குறிப்பாக, முஸ்லிம் சமூகமும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் கைகோர்ப்போம்” என்று அப்பதிவின் ஊடாக ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருக்கிறது.-Vidivelli