வென்றார் கோத்தா

பொது ஜன பெரமுன வசம் 16 மாவட்டங்கள் , 6 மாவட்டங்களில் மட்டுமே சஜித் வெற்றி

0 1,388

இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய நேற்று மாலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தார்.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலின் இறுதி முடி­வுகள் நேற்று மாலை 3 மணி­ய­ளவில் தேர்தல் செய­ல­கத்தில் வைத்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டன.

இத் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டி­ருந்த நிலையில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ 6,924,255 (52.25%) வாக்­கு­களைப் பெற்று முத­லி­டத்தில் பெரு வெற்­றி­யீட்­டினார். இவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச 5,564,239 (41.99%) வாக்­கு­க­ளையே பெற்றுக் கொண்டார். இதற்­க­மைய 13 இலட்­சத்து 60 ஆயி­ரத்து 16 மேல­திகவாக்­கு­களால் கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்­றி­யீட்­டினார்.இதே­வேளை, இத் தேர்­தலில் போட்­டி­யிட்ட மற்­று­மொரு வேட்­பா­ள­ரான தேசிய மக்கள் சக்­தியின் சார்பில் போட்­டி­யிட்ட அநு­ர­கு­மார திசா­நா­யக்க,

418,553 (3.16%) வாக்­கு­களையே பெற்றுக் கொண்டார்.

அத்­துடன் ஏனைய 32 வேட்­பா­ளர்­களும் இணைந்து 345,452 (2.61%) வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டனர்.

இதற்­க­மைய இலங்­கையின் 7ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜ­பக்ச இன்­றைய தினம் பத­விப்­பி­ர­மாணம் செய்து கொள்­ள­வுள்ளார்.

16 மாவட்­டங்­களில் கோத்தா வெற்றி

இப் பெறு­பே­று­க­ளுக்­க­மைய மொத்­த­முள்ள 22 தேர்தல் மாவட்­டங்­களில் 16 மாவட்­டங்­களை வெற்றி கொண்டு கோத்­தா­பய ராஜ­பக்ச சாதனை படைத்­துள்ளார்.

இதற்­க­மைய கொழும்பு கம்­பஹா களுத்­துறை கண்டி மாத்­தளை காலி மாத்­தறை ஹம்­பாந்­தோட்டை குரு­நாகல் புத்­தளம் அநு­ரா­த­புரம் பொலன்­ன­றுவை பதுளை மொன­ரா­கலை இரத்­தி­ன­புரி காலி ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே கோத்­த­ாபய வெற்றி பெற்­றுள்ளார்.

6 மாவட்­டங்­களில் சஜித் வெற்றி 

புதிய ஜன­நா­யக முன்­னணி சார்பில் போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வடக்கு கிழக்கு உட்­பட 6 மாவட்­டங்­களில் வெற்றி பெற்­றுள்ளார்.
யாழ்ப்­பாணம், வன்னி மட்­டக்­க­ளப்பு திகா­ம­டுல்ல திரு­கோ­ண­மலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகி­ய­வற்­றி­லேயே சஜித் பிரே­ம­தாச வெற்றி பெற்­றுள்ளார்.

போதிய வாக்­கு­களைப் பெறாத அநுர இதே­வேளை இத் தேர்­தலில் மூன்­றா­வது சக்­தி­யாக களம் இறங்­கிய தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­ய­நாய சுமார் 8 இலட்சம் வரை­யான வாக்­கு­களைப் பெறுவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் 418,553 வாக்­கு­க­ளையே பெற்றுக் கொள்ள முடிந்­துள்­ளது.

மகேஷ் சேன­நா­யக்க 4 ஆவது இடத்தில்

இத் தேர்­தலில் போட்­டி­யிட்ட மற்­று­மொரு பிர­பல வேட்­பா­ள­ரான முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி மகேஷ் சேன­நா­யக்க 49655 வாக்­கு­களைப் பெற்று நான்­கா­வது இடத்தைப் பெற்­றுள்ளார்.

ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு 38  ஆயிரம் வாக்­குகள்

இத் தேர்­தலில் சுயேட்­சை­யாகப் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், 38 ஆயி­ரத்து 814 வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் அவ­ருக்கு அதிக வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு அவர் 13228 வாக்­கு­களைப் பெற்­றுள்ளார்.

பருந்­துக்கு 34 ஆயிரம் வாக்­குகள்

இத் தேர்­தலில் பருந்து சின்­னத்தில் போட்­டி­யிட்ட ஆரி­ய­வன்ச திசா­நா­யக்க எதிர்­பா­ரா­த­வி­த­மாக 34537 வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். இவ­ரது பறவைச் சின்­னத்தை அன்னம் என நினைத்து மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கலாம் என்றும் இவ­ரது பெயரில் திசா­நா­யக்க என்­றி­ருப்­பதால் அநு­ர­கு­மார திசா­நா­யக்க என நினைத்து மேலும் பலர் வாக்­க­ளித்­தி­ருக்­கலாம் என்றும் அபிப்­பி­ரா­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக இவ­ருக்கு வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் அதிக வாக்­குகள் பதி­வா­கி­யுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

அமை­தி­யான தேர்தல்

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் முன்­னெப்­போ­து­மில்­லா­த­வாறு மிகவும் நீதி­யா­கவும் நேர்­மை­யா­கவும் பாரிய வன்­மு­றை­க­ளின்­றியும் அமை­தி­யாக நடந்து முடிந்­த­தாக தேர்­தல்கள் திணைக்­க­ளமும் தேர்தல் கண்­கா­ணிப்புக் குழுக்­களும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

பிரிந்து வாக்களித்த பெரும் பான்மை சிறுபான்மை மக்கள்

இத் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒரு கட்சிக்கும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரு கட்சிக்கும் என இரு துருவங்களாக பிரிந்து வாக்களித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. இதற்கமைய பெரும்பான்மை சிங்கள மக்கள் பெருவாரியாக கோத்தாபய ராஜபக்சவை ஆதரித்துள்ளனர். மறுபுறம் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளமை.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.