சில பிரதம தெரிவத்தாட்சி அலுவலர்களின் நியமனங்களால் நம்பிக்கையீனம் நிலவுகிறது.

அட்டாளைச் சேனை காணி மீட்பு கூட்டத்தை தடுத்ததும் தவறு; பேராசிரியர் ஹூல்

0 1,915

 

எமது பிர­தேச தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் தேர்­தலில் வெற்றி வாய்ப்­புள்ள வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஆற்றல் மிக்­க­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். தேர்­தலின் பின்பும் இது விட­யத்தில் தங்கள் பங்­க­ளிப்­பினைச் செய்­கி­றார்கள். பதவி வெற்­றி­டங்கள் ஏற்­ப­டும்­போது வெற்­றி­பெற்­றவர் மூலம் அவற்றைப் பெற்­றுக்­கொள்­கி­றார்கள். பத­வி­யு­யர்­வின்­போது அவர்­க­ளது பத­வி­நிலை கவ­னத்­திற்­கொள்­ளப்­பட  வேண்டும். ஆனால் அர­சாங்க அதி­பர்கள் எதுவும் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது பிர­தம தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­க­ளாக நிய­மனம் பெறு­கி­றார்கள். இதனால் இந்த நடை­மு­றையில் நம்­பிக்கை இழக்­கப்­ப­டு­கி­றது என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்ன ஜீவன் ஹுல் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு ஊட­க­மொன்­றுக்கு அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது; அண்­மையில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்று அம்­பாறை மாவட்­டத்தின் காணிப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­வ­தற்­காக அட்­டாளைச் சேனையின் மனித எழுச்சி நிறு­வனம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்தது. அட்­டா­ளைச்­சே­னையில் இந்­நி­கழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நிலைமை கட்­டுப்­பாட்டை மீறி­யதால் அந்­நி­கழ்வு தடை­செய்­யப்­பட்­டது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டி­ருந்­தனர். நிகழ்வு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே உதவி தெரி­வத்­தாட்சி அதி­காரி பெரேரா கூட்ட மண்­ட­பத்தை மூடு­வ­தற்கு உத்­த­ர­விட்டார். அம்­பாறை உதவி தேர்தல் ஆணை­யா­ளரும் இதற்கு ஒத்­து­ழைத்தார். தேர்தல் சட்­டங்­களை மீறு­வ­தாகக் குறிப்­பிட்டே கூட்டம் நிறுத்­தப்­பட்­டது.

நிகழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்த மனித எழுச்­சிக்­கான நிறு­வனம் கூட்­டத்­தி­லி­ருந்து அனைத்து  அர­சியல் வாதி­க­ளையும் வெளி­யேற்­று­வ­தாக உதவி தேர்தல் ஆண­யா­ள­ரி­டமும், பெரே­ரா­வி­டமும் உறு­தி­ய­ளித்­தது. என்­றாலும் அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் கடிதத் தலைப்பில் கூட்­டத்தை நிறுத்­து­வ­தற்­கான உத்­த­ரவு வழங்­கப்­பட்­டது.  காணி உரி­மை­யா­ள­ரிடம் காரி­யா­ல­யத்தை மூடி விடு­மாறு உத்­த­ரவில் தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு கல­வ­ர­மான நிலை காணப்­பட்­டது.

இச்­சம்­பவம் குறித்து மனித எழுச்சி நிறுவனம் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பாடு செய்­தது. உட­ன­டி­யாக விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டது. அச்­சந்­தர்ப்­பத்தில் தேர்தல் ஆணைக்­குழு என்ற தலைப்பில் வழங்­கப்­பட்ட கடிதம் போலி­யா­னது என நிரூ­பிக்­கப்­பட்­டது. அத்­தோடு அரச சார்­பற்ற நிறு­வ­னத்­துக்கு உத்­த­ர­வுகள்  வழங்க எமக்கு அதி­கா­ர­மில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

என்­றாலும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தீர்­மானம் மனித எழுச்சி நிறு­வ­னத்­துக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் என்ன தீர்­மானம் எடுத்­தீர்கள் என்று என்­னிடம் விடாப்­பி­டி­யாக வின­வி­னார்கள். இந்த விப­ரங்­களே அவர்­க­ளுக்­கான எனது பதி­லாகும்.

நான் கேட்க விரும்­பு­கிறேன், பெரேரா தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­யாக இருப்­ப­தற்கு பொருத்­த­மா­ன­வரா? அவர் தொடர்ந்தும் பத­வி­யி­லி­ருந்தால் அட்­டா­ளைச்­சேனை மக்கள் எங்­க­ளது தேர்தல் நட­வ­டிக்­கையில் எவ்­வ­ளவு நம்­பிக்கை கொள்­வார்கள்?

ஆணைக்­கு­ழுவின் தீர்­மா­னத்தை ஏன் நாம் மனித எழுச்சி நிறு­வ­னத்­துக்கு அறி­விக்­க­வில்லை? நாங்கள் எமது உத்­தி­யோ­கத்­தரை பாது­காக்­கி­றோமா?

கொழும்பு பிர­தம தெரி­வத்­தாட்சி அதி­காரி சுனில் கன்­னங்­க­ராவும், பல விட­யங்­களில் தவ­றி­யுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யாக இருந்த கட்­சியை பகி­ரங்­க­மாக எதிர்த்தார். அந்தப் பிரச்­சினை நீதி­மன்றம் மூலம் தீர்க்­கப்­பட்­டதால், அவர் தப்­பினார். அமைச்சர் மங்­கள சமரவீர ஒரு வாரத்­திற்கு முன்பு ரூப­வா­ஹினி தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் கன்­னங்­க­ராவின் செயற்­பா­டுகள் பற்றித் தெரி­வித்­துள்ளார். ஒரு சந்­தர்ப்­பத்தில் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு தவ­றாக பேசி­ய­போது அவ­ரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் அவரை தாக்­கு­வ­தற்கு முயற்­சித்­துள்­ளார்கள். அப்­போது மஹிந்த தேசப்­பி­ரிய நண்பர் ஒரு­வரை அனுப்­பி­யதால் அவர் பாது­காக்­கப்­பட்டார்.

இன்னும் சில விட­யங்கள் தொடர்பில் நான் குறிப்­பிட வேண்டும். கொழும்பில் கிராம சேவை­யா­ளர்கள் ஊழல்கள் புரிந்­துள்­ளார்கள். சில வாக்­கா­ளர்­களின் பெயர்­களை வாக்­காளர் இடாப்பில் நீக்­கி­யுள்­ளார்கள். இது தொடர்பில் நான் அறி­வித்­த­தை­ய­டுத்து அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. முறைப்­பாடும் செய்­யப்­பட்­டது. தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இது தொடர்பில் ஆராய ஓய்வு பெற்ற தேர்தல் ஆணை­யாளர் ஒரு­வரை நிய­மிக்க திட்­ட­மிட்டார். அதனால் கன்­னங்­க­ராவை கண்­கா­ணிக்க முடிந்­தது.

அர­சாங்க அதி­பர்கள் தொடர்­பிலும் முறைப்­பா­டுகள் உள்­ளன. ஒரு­கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­யதால் ஒரு அர­சாங்க அதிபர் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்தும் இட­மாற்றம் செய்­யப்­பட்டார். அவர் ஆணைக்­கு­ழு­வுக்கு வந்தார். அவர் கடமை நேரத்தில் அதிக மது­போ­தையில் இருந்­ததை நான் கண்டேன். 2012 இன் பின்பு வவு­னி­யா­வுக்கு அர­சாங்க அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டவர் வவு­னி­யாவில் நாமல்­கம போன்ற சிங்­கள கிரா­மங்­களை நிறு­வினார்.

நான் கிழக்­குக்கு விஜயம் செய்து எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும் என மக்­க­ளுக்கு தெளி­வு­களை வழங்­கினேன்.வாக்­க­ளிப்பை பகிஷ்­க­ரிக்கும் குழு­வினர் மக்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது தொடர்பில் தவ­றான விளக்கங்களை வழங்­கு­கிறார்கள். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பீடா­தி­பதி ஒருவர் வாக்­கா­ளர்­க­ளுக்கு ஒரு X, 2 X மற்றும் 3 X கள் வாக்குச் சீட்டில் புள்­ள­டி­யி­டு­மாறு வேண்­டி­யுள்ளார். இந்த மூன்று விதத்தில் ஏதா­வது ஒரு முறையில் வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டி­யுள்ளார். நிச்­சயம் இந்த வாக்­குகள் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். சி.வி.விக்­னேஸ்­வரன் தனது ஊடக அறிக்­கையில் வாக்கை செல்­லு­ப­டி­யற்­ற­தாக ஆக்கும் படி கூறி­யுள்ளார். அதனால் எவரும் 50% வாக்­குகள் பெற மாட்­டார்கள் என்று கூறி­யுள்ளார் (செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கிய வாக்­குகள் எண்­ணப்­ப­டு­வ­தில்லை) ஒரு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கூறி­யுள்ளார் அவ­ரது வீடியோ பதி­வினைப் பார்­வை­யிட்டேன் எனது ஆத­ர­வா­ள­ரான வேட்­பா­ளரே வெற்றி பெறுவார். முஸ்­லிம்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் தேர்தல் முடிந்­ததும் தாக்­கப்­ப­டு­வார்கள் என்ற கருத்­துப்­பட அவர் பேசி­யுள்ளார். (அவர் இதனை மறுத்­துள்ளார். ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வீடியோ பதிவும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை)

நான் மிகவும் வருந்­து­கிறேன். பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களும் வருந்­து­வார்கள் எனக் கரு­து­கிறேன்.

நாம் சந்­தே­கத்­துக்­குள்­ளான தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள், உதவி மற்றும் பிர­தி­தேர்தல் ஆணை­யா­ளர்கள் மீது விசா­ர­ணைகள் நிலு­வையில் இருக்கும் போது இவ்­வா­றா­ன­வர்கள் பத­வி­யி­லி­ருந்து இடை நிறுத்­தப்­பட வேண்டும். தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்கும் முறைப்­பா­டுகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

வாக்காளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதியை ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அவர் தபால் மூல வாக்களிப்பில் அவர் சார்ந்தவேட்பாளருக்கு 80% வாக்குகள் கிடைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதுதேர்தல் சட்டத்தை மீறிய செயலாகும். இது தேர்தல் சட்டத்தை மீறியமை மாத்திரமல்ல எவ்வாறு வாக்களிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளமை பெரிய தவறாகும். இந்தச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. இது பொய்ச் செய்தியாகும். தபால் மூல வாக்குகள் எண்ணப்படக்கூட இல்லாத நிலையில் செய்தி ஒலிபரப்பாகியுள்ளது. அவரை எச்சரிப்பதில் எந்த பிரயோசனமுமில்லை. இலங்கையருக்கு அவர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படாமல் உள்ளது. அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எங்களது தீர்மானம் பற்றி தெரிவிக்கப்படாமை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.