வாக்களிக்கும் போது மாத்திரம் முக அடையாளத்தை காண்பித்தால் போதுமானது

முகத்திரை அணிந்து வரிசையில் நிற்கலாம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்.

0 1,384

வாக்குச் சாவ­டி­க­ளுக்கு புர்கா, நிகாப் அணிந்து செல்­வ­தற்கு எது­வித தடை­யு­மில்லை. வாக்­க­ளிப்பு நிலைய அதி­கா­ரி­க­ளுக்கு தமது அடை­யா­ளத்தைக் காட்­டு­வ­தற்­காக மட்டும் அந்த இடத்தில் அவற்றை அகற்­ற­வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

வாக்­குச்­சா­வ­டியில் வாக்­க­ளிப்­ப­தற்­காக வரி­சையில் நிற்­கும்­போ­து­கூட அவற்றை அகற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை எனவும் தெரி­வித்தார்.

வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கு புர்கா,நிக்காப் அணிந்­து­செல்­ல­மு­டி­யா­தென சில நாட்­க­ளாக சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் செய்­திகள் உலா­வ­ரு­வது தொடர்பில் சட்­டத்­த­ரணி வை.எல்.எஸ். ஹமீட், தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை தொடர்பு கொண்டு கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

” இது வழ­மை­யான நடை­மு­றை­யாகும். எனவே, பிழை­யான செய்­தி­களை யாரும் பரப்­பா­தீர்கள். அதே­நேரம், அவ்­வாறு முகத்தை மறைக்காமல் வரமுடியுமானால் அது வரவேற்கத்தக்கது” என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.