அன்று ஞானசாரரை விடுவித்த ஜனாதிபதி இன்று கொலையாளியை விடுவித்துள்ளார்.

அருட்தந்தை சக்திவேல் விசனம்

0 1,409

நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்­ததன் மூலம் தன்னை ஓர் இன­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொலை குற்­ற­வா­ளி­யையும் அதேபோல் விடு­வித்­த­மையின் ஊடாக சமூக விரோ­த­சக்­திக்கு துணை போகின்­ற­வ­ராக தன்னை அடை­யா­னப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார் என அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கான தேசிய இயக்­கத்தின் ஒருங்­கி­ணைப்­பாளர் அருட்­தந்தை சக்­திவேல் தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரிய ரோயல் பார்க் சொகுசு குடி­யி­ருப்­புத்­தொ­கு­தியில் கடந்த 14 வரு­டங்­க­ளுக்கு முன்னர்  இடம்­பெற்ற கொலைச்­சம்­பவம் தொடர்பில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த நபர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்டு கடந்த சனிக்­கி­ழமை விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். இது தொடர்பில் வின­வி­ய­போதே அருட்­தந்தை சக்­திவேல் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த ஞான­சார தேரரை சில மாதங்­க­ளுக்கு முன்னர் அவ­ரு­டைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி பொது­மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்தார். இந்த செய­லி­னூ­டாக தன்னை ஒரு இன­வா­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட ஜனா­தி­பதி தற்­போது சமூக விரோ­தி­யான நபரை விடு­வித்­ததன் ஊடாக சமூ­கத்­திற்கு துரோகம் இழைத்­துள்ளார். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

குறித்த இளைஞன் பாலியல் வன்­பு­ணர்­விலும் ஈடு­ப­டு­பட்­டுள்­ள­துடன், கொலையும் செய்­துள்ளார். இத்­த­கைய சமூக விரோ­தியை ஜனா­தி­பதி பொது மன்­னிப்பின் கீழ் விடு­வித்­தி­ருக்­கின்றார். சட்­டத்தை மதிக்­காத நபரைத் தண்­டிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்த வகை­யி­லேயே குறித்த சமூக விரோதி தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்ளார். அதே­வேளை, ஆனந்த சிவ­கரன் என்னும் அர­சியல் கைதியை பொது­மன்­னிப்பின் கீழ் விடு­விக்­கு­மாறு ஒரு­ச­மூ­கமே வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்­தது. ஆயினும் ஜனா­தி­பதி அவரை விடு­விக்­க­வில்லை. அந்த அர­சியல் கைதியின் பிள்­ளைகள் தாயை இழந்து அனா­தை­க­ளாக தவித்த வேளை­யி­லேயே நாம் இந்த வேண்­டு­கோளை முன்­வைத்­தி­ருந்தோம். அவ்­வா­றாயின் ஜனா­தி­பதி நாட்டின் சட்ட திட்­டங்கள் நீதி, கலா­சாரம் என்­ப­வற்­றிற்கு மதிப்­ப­ளிக்­க­வில்லை என்றே கூற முடியும். குற்­ற­வா­ளிகள் பொது­மன்­னிப்பின் கீழ் விடு­விக்­கப்­படும் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து செல்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன . இந்நிலையில் சமூகவிரோதியான கொலைக் குற்றவாளியை விடுவித்துள்ளார் எனின் இவரின் சிந்தனை என்னவாக இருக்கும் என கேள்வி எழுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.