இனவாத சக்திகளிடம் ஆட்சியை ஒப்படைத்தால் முஸ்லிம்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

1 1,698

கடந்த கால இன­வாத வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் இருந்து இயக்­கி­ய­வர்­க­ளி­டத்தில் ஆட்­சியை ஒப்­ப­டைத்தால் எவ்­வா­றான பார­தூ­ர­மான விளை­வு­க­ளுக்கு சமூகம் முகங்­கொ­டுக்க நேரிடும் என்­பதைப் பற்றி சிந்­தித்து, அவற்­றி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­காக சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளி­யுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்கும் தேர்தல் பிர­சார கூட்டம் திகா­ம­டுல்லை மாவட்­டத்தில்வரிப்­பத்­தான்­சே­னையில் நடை­பெற்­ற­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் என்ற அடிப்­ப­டையில் கடந்த சில வரு­டங்­க­ளாக நாம் சந்­தித்து வரும் நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு எமக்கு மாற்றுத் தெரி­வுகள் இருக்க முடி­யாது.

எதி­ர­ணி­யி­லுள்ள இன­வாத கும்­பலின் சுய­ரூ­பத்தை பார்க்­கின்ற போது மிகக் கவ­ன­மா­கவும் பக்­கு­வ­மா­கவும் இந்தத் தேர்­தலை அணுக வேண்­டி­யுள்­ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்­திற்கு பிறகு முஸ்­லிம்­களை படு­மோ­ச­மாக விமர்­சிக்­கின்­றனர். மிகவும் ஆழ­மாக திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லா­கவே இது அமை­கின்­றது.

இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் அனை­வரும் மொட்டுக் கட்­சி­யுடன் சங்­க­மித்து, இரண்­டறக் கலந்து ஒரே மேடையில் ஒன்­றாக நிற்­கின்­றனர்.

எங்­க­ளு­டைய அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற இந்த சம்­ப­வத்தை எண்ணி நாங்கள் விச­னப்­ப­டு­கின்றோம். முஸ்­லிம்கள் தான் தங்­களை ஆட்­சி­யி­லி­ருந்து விரட்­டி­ய­டித்­தனர் என்­ப­தற்­கா­கவே எதிர்­வரும் தேர்­தலில் முஸ்­லிம்­க­ளையே இந்த அர­சாங்­கத்தை வெறுக்க வைப்­ப­தற்­காக இவை அனைத்தும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட நாட­கங்­க­ளாகும்.

ஆனால், நாங்கள் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு சும்மா இருக்­காது அன்று அம்­பாறை இன வன்­செ­யலில் ஈடு­பட்ட கும்­பலில் ஏரா­ள­மா­ன­வர்­களை கைது செய்­ய­வைத்தோம். பிணை வழங்­காமல் அவர்­களை மாதக் கணக்கில் அர­சாங்கம் சிறையில் வைத்­தது. சட்­டமும் ஒழுங்கும் உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் பிடி­வா­த­மாக இருந்தோம்.

அதேபோல் திக­னயில் கல­வரம் செய்த 150க்கும் மேற்­பட்­ட­வர்கள் சிசி­ரீவி கெம­ராக்­களின் மூலம் அடை­யாளம் காணப்­பட்டு ஊர் ஊராக தேடிச் சென்று கைது செய்­யப்­பட்­டார்கள். அர­சாங்­கமும் அவர்­க­ளுக்கு பிணை வழங்­காமல் வழக்கு தொடர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது.

மாயக்­கல்லி மலை விவ­கா­ரத்தை எடுத்­து­கொண்டால் எவ்­வாறு அந்த கும்பல் சந்­தர்ப்­பத்தை தமக்கு சாத­க­மாக மாற்­றிக்­கொண்­டார்கள் என்­பதை நன்­றாகப் புரிந்து கொள்­ளலாம். அப்­பொ­ழுது நாங்கள் எதிர்­கட்­சியில் இருந்­து­கொண்டு களத்தில் இறங்கி போரா­டி­னாலும், எதுவும் செய்­து­கொள்ள முடி­யாமல் போனது.

அந்தக் கும்பல் இப்­பொ­ழுது ஆட்­சியை கைப்­பற்­றினால் இறக்­காமம் மற்றும் வரிப்­பத்­தான்­சேனை பிர­தே­சங்­களில் புதிய குடி­யேற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும் ஆபத்து நில­வு­கின்­றது.  அப்­பி­ர­தேசம் முழு­வ­து­மாக பறி­போ­கின்ற நிலை­வரம் உரு­வாகி ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக நேரிடும். அதை தான் எங்­களால் தடுக்க முடி­யா­விட்­டாலும், அது மேலும் வியா­பிப்­ப­தற்கு இட­ம­ளிக்­காமல் தடுக்க எத்­த­கைய ஆட்­சி­யா­ளர்­களின் கீழ் அதற்கு எதிராகப் போராட முடியும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. எதிரணியின் பொய்யான பிரசாரங்களை தகர்தெறிந்து எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றிவகை சூடுவார் என்பதற்கான சகல சமிக்ஞைகளும் போகின்ற இடங்களில் தெரிகின்றன. நிகழவுள்ள இந்த யுக மாற்றத்தை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது என்றார்.-Vidivelli

1 Comment
  1. Noor Nizam says

    RISHAD, AMIR ALI of the ACMC along with Rauf Hakeem and the 9 Muslims Mp’s who enjoyed from the “YAHAPALANA”government the office of Ministers, Deputy Ministers, and State-ministers because of the “VOTE BANK TRADING” of the Muslims votes hoodwinked and “CHEATED” the Muslim community and the Nation at large, when Rauf Hakemm made a public statement that they have tendered there resignation from the portfilios they were holding. WHAT RAUF HAKEEM and the 8 Muslim Mp’s told at a hurriedly called press conference which was given wide media coverage on Monday the 3rd., June 2019 was a “TOTAL LIE”.The ACMC INCLUDING AMIR ALI DID THE SAME THING. It was only when the opposition demanded the “TRUTH”, that they submitted their individual letters of resignation on to the PM on 7th., June, 2019. This shows the cunning and deceptive hoodwinking nature and culture of these Muslim politicians and so-called political party leaders who have been “DUPING” the humble “PAMARAMAKKAL”/”POORALIGAL” and the Muslim vote bank throughout these years to trade with the Muslim vote bank and enjoy portfolios and positions and perks in whatever the government that is at the end formed after a general or presidential elections in Sri Lanka. THESE FELLOWS ARE CRYING FOR THEIR OWN BENEFITS AND TRYING TO HOODWINK THE MUSLIM VOTE BANK.
    HOW TO BELIEVE THESE GUYS? THE MUSLIM VOTE BANK HAS TO BE ALERT NOT TO BELIEVE THESE MUNAAFIQUES, Insha Allah.THEY HAVE ACCEPTED CORRUPTION BETWEEEN THEMSELVES AT THE CABINET MEETINGS. Muslim voters should read below an example please:https://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick
    Here is a story of how united Rauf Hakeem and Rishad Batiudeen are?
    What a shame to the Muslim Community in Sri Lanka?
    (Please read the news below.)
    அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக மோதிக் கொண்ட இரு அமைச்சர்கள் – Muslim ministers quarrel at cabinet meeting. (http://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick)
    அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
    கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார்.
    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர்.
    (English Translation).
    At the last cabinet meeting ministers Rauf Hakeem and Rishad Bathiudeen accused each others and were engaged in continuous arguments. This created chaos in the meeting. The discussion was regarding, corruption, bribery, allegations of dishonesty and kick-backs. Both (Muslim) ministers were heaping allegations at each other and accusing each other of being the most corrupt person (minister). When one minister accused the other as a thief (rouge)/”kallan”, the other minister accused him saying, you are the biggest thief (rouge)/”pachaikallan”.
    Only after the President making many interventions to stop this situation, both (Muslim) ministers stopped the allegations made at each other.
    NOTE:
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to CHASE AWAY THESE DECEPTIVE, DISHONEST and CORRUPT MUSLIM LEADERS/POLITICIANS to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – The Muslim Voice.

Leave A Reply

Your email address will not be published.