இலங்­கையில் வன்­மு­றை­களை தடுக்­காது தவ­றி­ழைத்­து­விட்டோம்: பேஸ் புக் நிறு­வனம்

0 755

இலங்­கையின் கண்டி மாவட்­டத்தில் இன வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதை தடுத்து நிறுத்த தாங்கள் தவ­றி­விட்­ட­தாக சமூக வலைத்­த­ளங்­களில் ஒன்­றான பேஸ்புக் நிறு­வனம் ஒப்புக் கொண்­டுள்­ளது.

லண்­டனில் நடை­பெற்ற போலிச் செய்­திகள் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றின்­போது, முகப்­புத்­தக நிறு­வ­னத்தின் கொள்கை தீர்வு விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவ­றினை ஒப்புக் கொண்­டுள்ளார்.

இலங்­கையில் இன­வா­தத்தை தூண்டும் வித­மான முகப்­புத்­தக பதி­வு­களை நீக்­கா­தது தங்­க­ளது நிறு­வன நிய­தி­க­ளுக்கு முர­ணான ஒரு பார­தூ­ர­மான தவ­றா­கு­மென அவர் ஒப்புக் கொண்­டுள்ளார்.

இலங்­கையில் கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் சிங்­கப்­பூரின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

சிங்­க­ளத்தில் பர­விய இன­வா­தத்தை தூண்டும் முகப்­புத்­தக பதி­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர். இவை உங்­க­ளது நிறு­வ­னத்தின் நிய­தி­க­ளுக்குப் புறம்­பா­னது அல்­லவா என எட்வின் எழுப்­பிய கேள்­விக்கு, ரிச்சர் அலன் ´ஆம்’ என பதி­ல­ளித்து ஒப்புக் கொண்­டுள்ளார்.

இலங்­கையில் முஸ்­லிம்கள் மற்றும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இடையில் கடு­மை­யான முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான முகப்­புத்­தக பதி­வுகள் பர­வி­ய­தனால் பல உயி­ரி­ழப்­புக்­களும், உடமைச் சேதங்­களும் ஏற்­பட்­ட­தாக எட்வின் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான பதி­வு­க­ளினால் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் இதனால் இலங்­கையில் முகப்­புத்­தகம் தற்­கா­லி­க­மாகத் தடை செய்­யப்­பட்டு இறு­தியில் அர­சாங்கம் அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

குறித்த முகப்­புத்­தக பதி­வு­களை நீக்­கு­மாறு, அப்­போ­தி­ருந்த இலங்கை தொலை­தொ­டர்பு அமைச்சர் வேண்டிக்கொண்ட போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன என அவர் வினவியுள்ளார்.  அதற்கு முகப்புத்தக பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.