அதுரலியே ரதன தேரர் உள்ளிட்டவர்களின் கோரிக்கைக்கு அமையவே பொது மன்னிப்பு

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை

0 570

ரோயல் பார்க் கொலை குற்­ற­வா­ளிக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு மதத் தலை­வர்கள் மற்றும் உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள் உள்­ளிட்ட பலர் எழுத்து மூலம் விடுத்­தி­ருந்த கோரிக்­கை­க­ளுக்கும் பரிந்­து­ரை­க­ளுக்கும் அமை­யவே குறித்த குற்­ற­வா­ளிக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு நேற்று விடுத்த ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ராஜ­கி­ரிய, ரோயல் பார்க் கொலை சம்­ப­வத்தின் குற்­ற­வா­ளி­யாக தண்­டனை விதிக்­கப்­பட்டு ஆயுட்­தண்­டனை அனு­ப­வித்­து­வரும் 34 வய­து­டைய டொன் ஸ்ரமந்த ஜூட் அந்­தணி ஜய­மக என்­ப­வ­ருக்கு மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு மதத் தலை­வர்கள், உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், இளைஞர் அணிகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எழுத்து மூல­மான கோரிக்­கை­க­ளையும், பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தனர்.

இவ் இளை­ஞ­ருக்கு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­காக தலைமை ஏற்று செயற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் இவ் இளை­ஞரின் பெற்­றோர்­க­ளையும், உற­வி­னர்­க­ளையும் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்டு இவ்­வி­டயம் தொடர்­பி­லான விரி­வான விளக்­கமும் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ர­தன தேரரால் இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூல கடிதம் ஒன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் குறித்த சம்­பவம் ‘ காத­லர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட பிரச்­சினை என்றும், ஸ்ரமந்த ஜூட் அந்­தணி என்­பவர் சிறைச்­சா­லையில் நன்­ன­டத்­தை­யுடன் செயற்­பட்­ட­தா­கவும், சிறைச்­சா­லையில் இருந்­த­வாறே வெளி­வாரி பட்­டப்­ப­டிப்பை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்து தற்­போது கலா­நிதி பட்­டப்­ப­டிப்­புக்கு தேவை­யான கற்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும்  ஆளுமை திறன், அறி­வுடன் கூடிய இவ் இளை­ஞ­ருக்கு மேற்­படி விட­யங்­களை கருத்­திற்­கொண்டு ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்­கு­வது நியா­ய­மா­னதும் மனி­தா­பி­மான ரீதி­யி­லான விடயம் ‘ என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதே­போன்று புத்த பக­வானின் போத­னை­க­ளுக்­க­மைய கரு­ணையும் இரக்­கத்­து­டனும் இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் அத்­து­ர­லியே ர­தன தேரர் ஜனா­தி­ப­திக்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மேலும் பத்­தே­கம சமித்த தேரர், கலா­நிதி கெர­தே­வல புண்­ணி­ய­ரத்ன நாயக்க தேரர், பலாங்­கொட புத்­த­கோஷ தேரர் மற்றும் தென் மாகாண கத்­தோ­லிக்க ஆயர் ரேமன்ட் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட மதத் தலை­வர்­களும் ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் கோரி­யி­ருந்­தனர்.

முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ரோஹினி மார­சிங்க ஜனா­தி­ப­திக்கு இந்த வழக்கு சம்­பந்­த­மாக விரி­வான விட­யங்­களை உள்­ள­டக்­கிய கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார். மேலும் சட்­டத்­த­ரணி மகேஷ் மட­வெல, சட்­டத்­த­ரணி நாலனி மன­துங்க, சட்­டத்­த­ரணி நில்ரூக் இக­ல­கத்­ரிகே, சட்­டத்­த­ரணி குமுது நாண­யக்­கார ஆகி­யோரும் காலி வெலி­வத்த விஜ­யா­னந்த விகா­ரையின் விஜ­யா­னந்த சமூக சேவை அபி­வி­ருத்தி மன்றம், உன­வட்­டுன ரூமஸ்­ஸல நவ ஜீவன அம­தி­யாப ஹண்ட ஆகிய சிவில் அமைப்­பு­களும் ஸ்ரமந்த ஜூட்டின் பெற்­றோரும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் அவ­ரது நன்­ந­டத்­தையால் சுதந்­திர பிர­ஜை­யாக எதிர்­கா­லத்தில் சமூ­கத்­திற்கும் நாட்­டுக்கும் செய்­யக்­கூ­டிய நற்­ப­ணி­க­ளையும் கருத்­திற்­கொண்டு அவ­ருக்கு மன்­னிப்பு வழங்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­டுக்­கொண்­டனர்.

அதே­போன்று அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தின் கீழ் தாபிக்­கப்­பட்­டுள்ள ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர்­களைக் கொண்ட மூவர் அடங்­கிய விசேட குழு­வொன்­றினால் சிறைச்­சா­லையில் ஸ்ரமந்த ஜூட் அந்­த­ணியின் நன்­ந­டத்தை கார­ண­மாக அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள மர­ண­தண்­ட­னையை ஆயுட் தண்­ட­னை­யாக மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், இது சம்­பந்­த­மாக நீதி அமைச்சின் மூலம் பல்­வேறு துறை­களைச் சேர்ந்த உய­ர­தி­கா­ரி­களைக் கொண்ட விசேட குழுவொன்றின் மூலம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் கருத்துக்களும் ஜனாதிபதியினால் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு ஸ்ரமந்த ஜூட் அந்தணியின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திடமிருந்தும் அறிக்கையைப் பெற்று ஏனைய சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் மூலமும் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களையும் ஜனாதிபதி கருத்திற் கொண்டு செயற்பட்டிருந்தார் என அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.