முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என நான் கூறவில்லை

முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க

0 811

குறிப்­பிட்­ட­தொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் தீவி­ர­வாத சக்­திகள் நவம்பர் 16 ஆம் திகதி தேர்­த­லுக்குப் பின்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை மீள ஆரம்­பிக்கக் கூடு­மென தான் தெரி­வித்­த­தாக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திகள் அப்­பட்­ட­மான பொய் எனவும் அவ்­வா­றான கருத்­தினை தான் ஒரு­போதும் வெளி­யி­ட­வில்லை எனவும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஊட­கங்கள் குறிப்­பிட்ட கருத்து தொடர்பில் வின­விய போதே மகேஷ் சேன­நா­யக்க இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், இவ்­வா­றான பொய் கருத்­து­களை வெளி­யி­டு­வது மிகவும் ஆபத்­தா­ன­தாகும்.

நான் எங்கும், எப்­போதும் தெரி­விக்­காத கருத்­தினை புனைந்து ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. இதனை நான் முற்றாக மறுக்கிறேன். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.