இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரைவிட எம்மிடம் சிறந்த நல்ல அறிவுள்ள குழு இருக்கின்றது

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க

0 1,409

இது­வரை நாட்டை ஆட்சி செய்த கூட்­டத்­தி­னரை விடவும் எம்­மிடம் சிறந்த நல்­ல­றி­வுள்ள குழு இருப்­ப­தாக  தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநுரகுமார திஸா­நாயக்க தெரி­வித்தார்.

தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பிர­சாரக் கூட்டம் திஸ்­ஸ­ம­ஹ­­ராமை தெப­ர­வெவ மைதா­னத்தில் நடை­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநுரகுமார திஸா­நா­யக்க இங்கு தொடர்ந்தும் உரை­யாற்றும் போது தெரி­வித்­த­தா­வது, எம்­மிடம் வேலை செய்­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்­களும் ஒரு குழுவும் இல்­லை­யென ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள். இது­வரை நாட்டை ஆட்சி செய்த அனைத்துக் குழு­வி­னரை விடவும் எம்­மி­டமே சக­ல­தையும் நாட்­டிற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செய்­யக்­கூ­டிய எவ்­வித ஊழல்­க­ளு­மற்ற ஒரு குழு உள்­ளது. இந்த மேடையும் அவர்­க­ளா­லேயே தற்­பொ­ழுது நிரம்­பி­யுள்­ளது.

தற்­பொ­ழுது எமது நாட்­டி­லுள்ள மக்­க­ளுக்கு நாட்­டிற்கு சிறந்­ததோர் ஆட்­சியை தெரிவு செய்து கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இத­னூ­டாக நாட்­டிற்கும் மக்­க­ளுக்கும் புதி­யதோர் ஆட்சி கிடைக்­க­வுள்­ளது. இது எமது நாட்டு மக்­க­ளுக்கு கிடைத்த முத­லா­வது சந்­தர்ப்­ப­மல்ல. நாம் மிகவும் நீண்ட தூரம் செல்­லாமல் 2015 இற்கு சென்றதால் இச்­சந்­தர்ப்பம் எமக்கு கிடைத்­தது. இதன்­போது அன்­றி­ருந்த ஆட்­சி­யா­ளர்கள் திருட்டை நிறுத்து­வார்கள் என்ற பாரிய எதிர்­பார்ப்பு மக்­க­ளிடம் இருந்­தது. திரு­டர்­க­ளுக்குத் தண்­டனை வழங்­கு­வார்கள் என்று எதிர்­பார்த்­தார்கள். நாட்­டி­லுள்ள மக்­க­ளது அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுத்து பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­ுவார்கள் என எதிர்­பார்த்­தார்கள். ஆனாலும் இவர்கள் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை வீண­டித்­தார்கள்.

இந்த ஆட்­சியை மாற்றி மீண்டும் 2015 இல் தோல்­வி­ய­டையச் செய்த கூட்­டத்­தி­ன­ரையா மீண்டும் ஆட்­சி­ய­மைக்க செய்­வது? அவ்­வா­றாக இருந்தால் அன்று அவர்­களை மக்கள் தோல்­வி­ய­டையச் செய்­யாமல் இருந்­தி­ருக்க முடியும். தோல்­வி­ய­டைந்­த­வர்­களை மீண்டும் ஆட்­சி­ய­மைக்க சந்­தர்ப்பம் வழங்­கு­வோ­மாக இருந்தால் அதுவும் தவ­றாகும். இந்த ஆட்­சி­யையும் மாற்றி தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளையும் ஆட்­சி­பீ­ட­மே­றாமல் பாது­காக்க வேண்டும். நாம் உங்­களை சந்­திக்க வந்­தது புதிய ஆட்­சியை அமைப்­ப­தற்­காக புதி­யதோர் தலை­வரை எமது நாட்­டிற்­காக தெரிவு செய்து கொள்­வ­தற்­கா­கவே உங்­க­ளுக்கு அழைப்­பினை விடுக்­கிறோம்.

இந்த இரண்டு குழு­வி­னரும் எமது நாட்­டிற்கு செய்ய முடியுமான அனைத்து அநியாயங்களையும் அழிவுகளையும் செய்து நாட்டை வறுமைக்குள் தள்ளியுள்ளார்கள். நாடு சகல துறைகளிளும் பின்னடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அறிவு, சக்தி, பலம் ஆகிய அனைத்தும் எம்மிடம் உள்ளன எனவும் தெரிவித்தார்.-Vidivelli

  • ஹம்­பாந்­தோட்டை நிருபர்

 

Leave A Reply

Your email address will not be published.