தூதுவராலயங்கள் ஹோட்டல்கள் மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு

அபூபக்கர் அல் பக்தாதியின் மரணத்தையடுத்து நடவடிக்கை என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன

0 1,481

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்கள், உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யங்கள், ஹோட்­டல்கள், வெளி­நாட்­ட­வர்கள் நட­மாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்­க­ளுக்கு விசேட பாது­காப்புத் திட்­ட­மொன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­கி­ர­ம­ரத்ன ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளையும் அறி­வு­றுத்­தி­யுள்ளார். அமெ­ரிக்க படை­களின் அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளை­ய­டுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ­பக்கர் அல்­பக்­தாதி மர­ண­மா­ன­தை­ய­டுத்து முழு உல­கி­லு­முள்ள நாடு­களின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வுள்ள நிலையில் இலங்­கை­யிலும் வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்கள், உயர் ஸ்தானிகர் காரி­யா­ல­யங்கள், ஹோட்­டல்கள்,

வெளி­நாட்­டவர் நட­மாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வதில் விசேட கவனம் செலுத்­தும்­படி பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்­துள்ள விசேட பொலிஸ் அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ளார்.

பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்­கி­யுள்ள விசேட பொலிஸ் அறி­வித்­தலில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலை­வ­ராக இருந்த பக்­தா­தியின் மர­ணத்தின் பின்பு முழு உல­கிலும் பாது­காப்பு திட்­டத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.

மேலும் கிறிஸ்­த­வர்­களின் முக்­கிய மத நிகழ்­வு­களின் போதும் உரிய பாது­காப்பு வழங்­கு­மாறும் பதில் பொலிஸ் மா அதிபர் உயர் பொலிஸ் அதி­கா­ரி­களைக் கோரி­யுள்ளார். கிறிஸ்­த­வர்­களின் விசேட தினங்­க­ளின்­போது பெரும் எண்ணிக்கையானோர் ஆலயங்களில் ஒன்று கூடுவார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.