பாபரி மஸ்ஜித் வழக்கு இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது

அனைத்­திந்­திய முஸ்லிம் தனியார் சட்ட சபை­

0 1,367

16 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் கட்­டப்­பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த  வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்­டு­வ­தற்கு இந்­துக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்­டு­மென என கடந்த சனிக்­கி­ழமை இந்­திய உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

பள்­ளி­வா­ச­லொன்றைக் கட்­டு­வ­தற்கு மத்­திய அர­சாங்­கமோ அல்­லது மாநில அர­சாங்­கமோ ஐந்து ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட பொருத்­த­மான காணி­யொ­றினை ஸுன்னி வக்ப் சபைக்கு வழங்க வேண்டும் எனவும் இந்­திய உச்ச நீதி­மன்றம் தனது தீர்ப்பில் தெரி­வித்­துள்­ளது.

ஐந்து நீதி­ப­திகள் கையொப்­ப­மிட்­டுள்ள இத்­தீர்ப்பு தொடர்பில் அனைத்­திந்­திய முஸ்லிம் தனியார் சட்ட சபை­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் தரப்பு அதி­ருப்­தி­யினை வெளி­யிட்­டுள்­ளது. நாம் உச்ச நீதி­மன்­றத்தின் கட்­ட­ளை­யினை மதிக்­கின்றோம் ஆனால் தீர்ப்பு எமக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை என தலை­நகர் புது­டில்­லியில் செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய சபை சார்­பான சட்­டத்­த­ரணி ஸபர்யாப் ஜீலானி தெரி­வித்தார்.

அனைத்­திந்­திய முஸ்லிம் தனியார் சட்ட சபை, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ராஜீவ் தாவா­னுடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர் மீளாய்வு தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்கும் என அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்­தி­யாவின் உத்­தர பிரதேஷ் மாநி­லத்தில் 2.77 ஏக்கர் காணியில் முத­லா­வது முக­லாய பேர­ர­ச­ரான பாபரின் ஆட்­சியின் கீழ் 1528 ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட இப்­பெ­ரிய பள்­ளி­வாசல் 1992 ஆம் ஆண்டு தீவிர இந்துக் குழு­வொன்­றினால் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. பள்­ளி­வாசல் அமைந்­தி­ருந்த இடத்தில் தமது கட­வு­ளர்­களில் ஒரு­வ­ரான இராமர் பிறந்­த­தாக இந்­துக்கள் உரிமை கோரு­கின்­றனர்.

தீர்ப்­பி­னை­ய­டுத்து எந்த ஒரு சட்டம் ஒழுங்கு தொடர்­பான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்கு வடக்கு உத்­தர பிரதேஷ் மாநி­லத்தில் விரி­வான பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

தீர்ப்பு வெளி­வ­ரு­வ­தற்கு முன்­ன­தாக கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி எந்தத் தரப்­பிற்கும் வெற்­றியோ தோல்­வியோ கிடைக்­கலாம் எனவே அமை­தியைப் பேணு­மாறு தெரி­வித்­தி­ருந்தார்.

சர்ச்­சைக்­கு­ரிய இடத்தில் ராமர் கோவில் கட்­டிக்­கொள்­ளலாம். இதற்­காக 3 மாதங்­க­ளுக்குள் மத்­திய அரசு ஒரு நம்­பிக்கை நிதி­ய­மொன்றை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென தலைமை நீதி­பதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பில் தெரி­வித்­துள்ளார்

பாபரி மஸ்­ஜிதின் உட்­புறம் மற்றும் வெளிப்­புற வளாகம் ஆகி­யன குறித்த நம்­பிக்கை நிதி­யத்­திற்கு கைய­ளிக்­கப்­பட வேண்டும் எனவும் கோகாய் தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவின் வல­து­சாரி இந்து அமைப்­பான விஷ்வ ஹிந்து பரிஷத் என அழைக்­கப்­படும் உலக இந்து பேரவை இத் தீர்ப்­பினை வர­வேற்­றுள்­ளது.

உண்மை வெற்றி பெற்­றுள்­ளது. நாம் தீர்ப்பு தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பேச்சாளர் ஷராட் ஷர்மா தெரிவித்தார்.பெரும்பாலான இந்துக்களின் வாதங்கள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாம் இனி அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட ஆரம்பிப்போம் எனவும் ஷராட் ஷர்மா தெரிவித்தார்.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.