கோத்தாபயவின் வெற்றிக்காக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்:முஸம்மில் அழைப்பு

0 1,386

தேசிய நிதி­யினை மோசடி செய்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­படும் ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் ஆகி­யோரை இணைத்துக் கொண்டு அமைச்­ச­ர­வை­யினை அமைக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் குறிப்­பிட முடி­யுமா, தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்தி நாட்டை பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவினால் மாத்­தி­ரமே முன்­னேற்ற முடியும். முஸ்லிம் சமூ­கத்­தினர் அனை­வரும் இவ­ரது வெற்­றிக்­காக ஒன்­று­பட வேண்­டு­மெனத் தெரி­வித்த மேல்­மா­காண ஆளுநர் மொஹமட் முஸம்மில்,

ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எவ்­வித தீங்­கையும் இழைக்­க­வில்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க குறிப்­பிட்­டுள்­ளதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வா­கவே இவர் செயற்­ப­டு­கின்றார் எனவும் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­யி­லான நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஐக்­கிய தேசியக் கட்சி எவ்­வித தீங்­கையையும் இழைக்­க­வில்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க குறிப்­பிட்­டுள்­ளமை ஏற்றுக் கொள்ள முடி­யா­தது. வர­லாற்று காலம் தொடக்கம் ஐக்­கிய தேசியக் கட்­சியே சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழித்­தது.

1977ற்கு பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி காலத்தில் உலகின் முதல் பெண் பிர­த­ம­ராக கரு­தப்­பட்ட  சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது. இதனை அர­சியல் தேவை­க­ளுக்­காக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மறந்­து­விட்டார்.

இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கின்றார். இச்­செ­யற்­பாடு காலஞ்­சென்ற பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை அவ­ம­திப்­ப­தாகும்.

2015ஆம் ஆண்டு எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது முஸ்லிம் காங்­கிரஸ் அவ­ருக்கு ஆத­ரவு வழங்க வேண்­டா­மென்று குறிப்­பிட்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மஹிந்­தவின் வெற்­றியை தடுத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தினார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ எந்த இனத்­திற்கும் துரோ­க­மி­ழைக்­க­வில்லை. நாட்டை அவ­ராலே முன்­னேற்ற முடியும். முஸ்லிம் சமூ­கத்­தினர் அனை­வரும் பொது­ஜன பெர­மு­னவின் வெற்­றிக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். தேசிய நல்­லி­ணக்­கத்­துடன் அனை­வரும் பொது­வாக வாழ வேண்­டு­மாயின் கோத்­தா­பய ராஜபக் ஷவை அனை­வரும் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்ய வேண்டும்.

நாட்டை நிர்­வ­கிக்கும் திறமை புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு கிடை­யாது. முறை­யற்ற கொள்­கை­களே ஆளும் தரப்பில் காணப்­ப­டு­கின்­றன. தனது அர­சாங்­கத்தில் பாது­காப்பு அமைச்சு பத­வியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு வழங்க மாத்­திரம் தீர்­மா­னித்­துள்ளேன் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோச­டியின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு வழங்­க­மாட்டேன் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது அமைச்சரவையில் திருடர்களை இணைத்துக் கொள்ளமாட்டேன் என்று குறிப்பிட முடியுமா, சதொச நிறுவனத்தினை மோசடி செய்த ரிஷாட் பதியுதீனுக்கும், ரவூப் ஹக்கீமிற்கும் அமைச்சு பதவிகளை வழங்க மாட்டேன் என்றும் திருடர்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட முடியுமா என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.