போலி உம்ரா முகவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

0 1,309

நாடெங்கும் போலி உம்ரா முக­வர்கள் இயங்­கி­வ­ரு­வ­தா­கவும் அவர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­ப­டியும் பொது­மக்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டி­யுள்­ளது. போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கு­ப­வர்கள் தொடர்பில் திணைக்­களம் பொறுப்புக் கூற­மாட்­டாது எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

 

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கும் அரச ஹஜ் குழுவும் இது தொடர்பில் மக்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

 

உம்ரா பயணம் மேற்­கொள்­ப­வர்கள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­கொண்­டுள்ள முகவர் நிலை­யங்கள் ஊடாக மாத்திரமே பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ள­வேண்டும். இடைத்­த­ர­கர்­க­ளாகச் செயற்­படும் போலி­மு­க­வர்கள், மக்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை அறி­விட்டு கமிஷன் பெற்றுக் கொள்­வ­துடன், பயண ஏற்­பா­டு­களில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள்.

 

சிலர் ஏமாற்­றப்­பட்டும் வரு­கி­றார்கள். இது தொடர்­பான முறைப்­பா­டுகள் தொடர்ந்தும் கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன. அதனால் போலி உம்ரா முக­வர்­களால் ஏமாற்­றப்­படும் பய­ணிகள் தொடர்பில் திணைக்­களம் பொறுப்­புக்­கூ­ற­மாட்­டாது.

 

விமான நிலைய  உப­யோகம்

 

இதே­வேளை, உம்ரா பய­ணிகள் விமான நிலை­யத்தின் கழி­வ­றை­களை உரிய முறையில் உப­யோ­கிக்­கு­மாறும் வுளூ செய்­வ­தற்­காக தனி­யான இடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளதால் அப்­ப­கு­தி­யி­லேயே வுளூ செய்­யு­மாறும் அரச ஹஜ் குழு வேண்­டி­யுள்­ளது.

 

விமான நிலைய கழி­வ­றை­களில் வுளூ செய்­வதால் ஏனைய பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டு­வ­தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அதனால் பயணிகள் வுளூ செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தனியான இடத்தையே அதற்காகப் பயன்படுத்தும்படி அரச ஹஜ் குழு வேண்டியுள்ளது.-Vidivelli

 

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.