சாய்ந்தமருது பள்ளிவாசல் குறித்து முறைப்பாடுகள்

விசேட கவனம் செலுத்தப்படும் என்கிறது கபே

0 702

பள்­ளி­வா­சல்கள், விகா­ரைகள், கோயில்கள், மற்றும் ஆல­யங்­களில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­கின்­றதா? என்­பதைக் கண்­கா­ணிக்க கஃபே அமைப்பின் இணைப்­பா­ளர்கள் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சலில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­வதால் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கஃபே அமைப்பின் பதில் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ பிர­சங்­கத்­தின்­போதும் ஏனைய நிகழ்­வு­களின் போதும் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை எதிர்த்தோ அல்­லது ஆத­ரித்தோ கருத்து தெரி­விப்­பது தேர்தல் சட்­ட­வி­தி­களை மீறும் செய­லாகும். இவ்­வா­றான நிகழ்­வு­களை கஃபே அமைப்பின் அவ்வப் பிர­தேச இணைப்­பா­ளர்கள் கண்­கா­ணிப்­புச்­செய்து ஆதா­ரங்­களைச் சமர்ப்­பிப்­பார்கள். எமது கண்­கா­ணிப்­பா­ளர்கள் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் விஜயம் செய்ய முடி­யா­துள்­ளதால் பொது­மக்கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எமது அமைப்­புக்கு முறை­யி­டலாம்.

 

கிழக்கில் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சலில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளதால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

 

பள்­ளி­வா­சல்கள் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­ப­தையே நாம் வலி­யு­றுத்­து­கிறோம். இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும்.  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.-Vidivelli

 

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

 

Leave A Reply

Your email address will not be published.