வாக்களிப்பது முஸ்லிமின் கடமை

0 2,188

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் 8ஆவது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் தேர்தல் இன்னும் சில நாட்­களில் எதிர்­நோக்­க­வுள்ள நிலையில், கள நிலை­வரம் சூடு­பி­டித்து களை­கட்­டி­யுள்­ளது.

 

தத்­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் பிர­தான கட்­சிகள் வெளி­யிட்ட நிலையில், பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் எதிரும் புதி­ரு­மாக சமூக வலை­த­ளங்­களில் வைர­லாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

 

இத்­த­ரு­ணத்தில் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் பேசு­பொ­ரு­ளாக பரி­ண­மித்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். எனவே வாக்­கா­ளர்­க­ளா­கிய நாம் என்ன செய்ய வேண்டும் என்­பதை புரிந்து எமது வாக்­கு­களை பயன்­ப­டுத்­து­வது, ஒரு தார்மீகக் கட­மை­யாகும்.

 

தேர்தல் என்­பது அர­சியல் போராட்­டத்­திற்­கான ஒரு பல­மான சாதனம். சிறு­பான்­மை­யாக வாழும் இலங் கை முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் போரா­டு­வ­தற்கு ஷரீஆ அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

 

நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் மகத்­தான பணிக்கு வாக்­கு­ரிமை மூலம் எமது பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தற்கு நாம் கட­மைப்­பட்­டுள்ளோம். எனவே, வாக்­கு­ரிமை பற்­றிய இஸ்­லாத்தின் நிலைப்­பாடு என்ன? போன்ற வினாக்­க­ளுக்­கான மிகத் தெளி­வான பதி­லாக இவ்­வாக்கம் அமை­கின்­றது.

 

 

ஷரீ­ஆவின் பார்­வையில் வாக்­கு­ரிமை

 

இஸ்­லா­மிய சட்­டப்­ப­ரப்பில் வாக்­கு­ரிமை பற்றி இஸ்­லா­மிய சட்ட வல்லு­நர்கள் பல ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ளனர். அவற்றின் சுருக்­கத்தை “மஆ­ரிபுல் குர்ஆன்” என்ற அல்­குர்ஆன் விரி­வு­ரையில் அதன் ஆசி­ரியர் முப்தி ஷபீ உஸ்­மானி மிகத் தெளி­வாக முன்­வைக்­கிறார். இஸ்­லா­மிய சட்­டப்­ப­ரப்பில் வாக்­க­ளித்தல் என்­பது 3 தலைப்­புக்­களின் கீழ் வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

 

  1. ஷஹாதத் (சாட்சி சொல்லல்)
  2. ஷபாஅத் (பரிந்­து­ரைத்தல்)
  3. வகாலத் (பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தல்)

 

  1. சாட்சி சொல்லல்

பொது­வாக தேர்­தலில் வாக்­க­ளிப்­பது என்­பதன் பொருள் சாட்சி சொல்­வ­தாகும். நாட்டில் நடை­பெறும் அனைத்து வகை­யான தேர்­தல்­க­ளிலும் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தென்­பது குறித்த அபேட்­ச­கரின் தகைமை, நேர்மை, நம்­ப­கத்­தன்­மையில் அவர் மிகவும் பொருத்­த­மா­னவர் என்றும் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யாக அல்­லது நாட்டின் தலை­வ­ராக வரு­வ­தற்குத் தகு­தி­யா­னவர் என்றும் வாக்­காளர் வழங்கும் சாட்­சி­யாகும்.

 

இஸ்­லா­மிய சட்­டப்­ப­ரப்பில் அதன் அந்­தஸ்தை நோக்­கும்­போது, தேசத்­தி­னதும் பொது­மக்­க­ளி­னதும் நலன்கள் தேர்­தல்­களில் தங்­கி­யி­ருப்­பதால் வாக்­கு­ரி­மை­யுள்ள சக­லரும் தகு­தி­யான வேட்­பா­ள­ருக்கு சாட்சி பகர்­வது அல்­லாஹ்­விற்கு செய்ய வேண்­டிய கடமை என்றே இஸ்­லா­மிய சட்ட வல்­லு­நர்கள் குறிப்­பி­டுவர்.

 

தேசத்தின் பொது நலனைக் கருத்­திற்­கொண்டு சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் குடி­மகன் மிகப் பொருத்­த­மான, தகு­தி­வாய்ந்த ஒரு­வ­ருக்கு வாக்­க­ளிப்­பது அடி­யார்கள் அல்­லாஹ்­வுக்கு செய்யும் கட­மை­யாகும் என்ற தரத்தில் வைத்தே நோக்­கப்­படும். காரணம், அல்­குர்­ஆ­னிலும் ஸுன்­னா­விலும் இடம்­பெற்­றுள்ள ‘சாட்சி பகர்தல்’ என்ற வார்த்­தை­யா­னது வாக்­க­ளித்தல் என்­ப­தற்கு சம­னா­ன­தாகும். அதா­வது வாக்­கு­ரிமை என்­பது சாட்­சி­ய­மாகும். இந்தப் புரி­தலில் இஸ்­லா­மிய சட்­டத்­துறை மற்றும் அர­சி­யல்­துறை அறி­ஞர்­க­ளிடம் கருத்­தொற்­றுமை நில­வு­கி­றது.

 

தேர்தல் காலங்­களில் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் வாக்­காளர் அட்டை என்­பது சாட்சி பகர்­வ­தற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அழைப்­பாகும். ‘சாட்சி சொல்ல வேண்­டி­ய­வர்கள் அழைப்பு விடுக்­கப்­பட்டால் மறுக்கக் கூடாது’ (பகரா:282) என அல்­குர்ஆன் பணிக்­கி­றது. அவ்­வாறே வாக்­கு­ரி­மையை பகிஷ்­க­ரிப்­பதும் மறைப்­பதும் குற்­ற­மென்ற கருத்தை அல்­குர்ஆன் மேலும் வலி­யு­றுத்­து­கி­றது. ‘சாட்­சி­யத்தை நீங்கள் மறைக்­கவும் வேண்டாம். எவ­ரேனும் அதனை மறைத்தால் நிச்­ச­ய­மாக அவ­ரு­டைய உள்ளம் பாவத்­திற்­குள்­ளாகி விடு­கின்­றது’ என அல்லாஹ் கூறு­கிறான். (பகரா:283)

 

எனவே, வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்­து­வது மிக முக்­கிய விடயம் எனப் புல­னா­கின்­றது.

 

 

  1. பரிந்­து­ரைத்தல்

நாட்டில் நீதி, நியாயம் நிலை­நாட்­டப்­படவும் ஐக்­கியம், மறு­ம­லர்ச்சி தளைத்­தோங்­கவும், மற்றும் நாட்டின் தேசிய நிர்­மா­ணத்தை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய ஒரு­வரை தெரி­வு­செய்து வாக்­க­ளிப்­பதை ஷபாஅத் எனும் பரிந்­து­ரைத்தல் என்ற கண்­ணோட்­டத்­திலும் நோக்­கலாம். இதனை அல்­குர்ஆன் அங்­கீ­க­ரிப்­பது மட்­டு­மல்­லாது வர­வேற்­கின்­றது.

 

யார் சிறந்த முறையில் பரிந்­து­ரைக்­கி­றாரோ அவ­ருக்கு அதில் பங்­குண்டு (நிஸா: 85) என அல்லாஹ் கூறு­கிறான். சிறந்த பரிந்­து­ரைப்பும், அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­களின் நன்­மை­களும் பரிந்­து­ரைப்­ப­வ­ருக்கு சேரு­மென  அல்­குர்ஆன் சிலா­கித்துப் பேசு­கி­றது.

 

அது­மட்­டு­மல்­லாமல் சுன்­னா­விலும் இதற்கு எடுத்­துக்­காட்டு உள்­ளது. நீங்கள் பரிந்­து­ரை­யுங்கள் அதற்கு கூலி கொடுக்­கப்­ப­டு­வீர்கள். என நபி ஸல்­லல்­லாஹு அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் கூறி­னார்கள்.

 

 

  1. பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தல்

தேர்­தலில் வாக்­க­ளித்தல் என்­ப­தற்கு பிர­தி­நி­தி­யாக நின்று குரல் கொடுப்­ப­வரை நிய­மித்தல் என்றும் சிலர் அர்த்தம் கொடுத்­துள்­ளனர். அதா­வது வாக்­காளர் தன் சார்­பாக குரல் கொடுப்­ப­தற்கும், உரி­மை­களை பாது­காப்­ப­தற்கும் தேச நலன்­க­ளையும், மக்கள் நலன்­க­ளையும் அவ­தா­னிப்­ப­தற்கும் ஒரு முக­வரை அல்­லது பிர­தி­நி­தியை தெரிவு செய்­கிறார் என்­பது இதன் பொருள். இதுவும் வாக்­கு­ரிமை குறித்த சட்­ட­பூர்­வ­மான ஒரு பார்­வை­யாகும்.

 

 

தேர்­தலில் பங்கு கொள்­வ­தற்­கான ஷரீஆ ஆதா­ரங்கள்

 

சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்­களை அடைந்து கொள்­வ­தற்கும், தீமை­களை தவிர்ப்­ப­தற்கும் தங்­க­ளது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­வது வாஜி­பா­கு­மென அறிஞர் அப்­துல்­கரீம் ஸைதான் குறிப்­பி­டு­கிறார். ‘காபி­ரான அர­சி­ட­மி­ருந்து நலன்­தரும் பகு­தி­வா­ரி­யான பயனை பெறு­வ­தாகும்’ என்ற சட்ட விதியின் அடிப்­ப­டையில் அதற்கு அவர் ஆதாரம் காட்­டு­கிறார்.

 

இவ்­வா­தா­ரத்தை அவர் தெளி­வு­ப­டுத்திக் கூறும்­போது ஸீரா­வி­லி­ருந்து பல நிகழ்­வு­களை உதா­ர­ண­மாகக் குறிப்­பிட்­டுள்ளார். நபி (ஸல்) அவர்­களும் நபித் தோழர்­களும் எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து தங்­க­ளது உயிரைப் பாது­காக்கும் வகையில் குறைஷிக் காபிர்­களின் தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்பு உத்­த­ர­வா­தத்தை பெற்ற பல சம்­ப­வங்கள் ஸீராவில் உள்­ளன. அதன் பொருள் செல்­வாக்­குள்ள, உயர் அந்­துஸ்த்­துள்ள குறைஷிக் காபிர் ஒருவர், இன்­னா­ருக்கு நான் பாது­காப்பு கொடுக்­கிறேன் என்று அறி­வித்தால் அவ­ரு­டைய சமூகம், பாது­காப்பு வழங்­கப்­பட்ட நப­ருக்கு முழு­மை­யான உயிர் பாது­காப்பு கொடுக்­க­வேண்டும்.

 

அந்தப் பாது­காப்பு அறி­விப்பு ஒரு உடன்­ப­டிக்­கை­யா­கவே அன்று கரு­தப்­பட்­டது. அப்­படிப் பாது­காப்பு கொடுக்­கப்­பட்­ட­வ­ருக்கு யாரும் எத்­த­கைய தீங்கும் செய்­ய­மு­டி­யாது. யாரா­வது அதனை மீறி பாது­காப்பு வழங்­கப்­பட்­ட­வ­ருக்கு தீங்கு செய்தால் அது உடன்­ப­டிக்­கையை முறித்­த­தா­கவே கரு­தப்­பட்­டது. அதற்­காக அந்த கோத்­தி­ரமே போர் செய்ய கள­மி­றங்­கி­வி­டும்.

 

அன்று ஜாஹி­லிய்யா கால மர­பி­லி­ருந்த இந்தப் பாது­காப்பு முறை­மையை இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்­களும் அவ­ரது தோழர்­களும் தேவை­யா­ன­போது தமது பாது­காப்­பிற்­காகப் பயன்­ப­டுத்­தினர். அது ஈமானை பாதிக்கும் ஒரு விட­ய­மாக நோக்­கப்­ப­ட­வில்லை. மாறாக, உலக விவ­கா­ரத்தில் பரஸ்­பர ஒத்­து­ழைப்பை பயன்­ப­டுத்­தி­ய­தா­கவே கரு­தப்­பட்­டது. உல­க­வாழ்வில் தேச நலன்­களை அடை­வதில் ஒரு வழி­மு­றை­யா­கவே அதனை நாம் காண்­கின்றோம்.

 

நபி­களார் (ஸல்) அவர்கள் தாயிப் நக­ரத்­தி­லி­ருந்து மக்­கா­விற்கு திரும்­பி­ய­போது முஷ்­ரி­கான முத்இம் பின் அதியின் பாது­காப்­பு­ட­னேயே தாயகம் திரும்­பி­னார்கள். அப்­போது அபூ­பக்கர் (ரழி) அவர்கள் போன்ற பல தோழர்கள் மக்­காவில் இருந்­தும்­கூட அவர்­களை இறை தூதர் (ஸல்) அவர்கள் நாட­வில்லை. காரணம் நபி­களார் சுதந்­தி­ர­மாக மக்கா திரும்ப முடி­யா­த­ள­விற்கு எதிர்ப்பும் கொலை அச்­சு­றுத்­தலும் அவர்­க­ளுக்கு இருந்­தன. எனவே உயிர் பாது­காப்பு பெறாமல் மக்­கா­வினுள் நுழை­வது அழிவை தன் கையால் தேடிக்­கொண்­ட­தா­கவே அமை­யு­மென்று கரு­தியே அன்­றி­ருந்த பாது­காப்பு மரபை நபி­களார் தனக்கு சார்­பாகப் பயன்­ப­டுத்த முனைந்­தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பாது­காப்பு வழங்­கு­மாறு கேட்டு முஷ்­ரி­கான முத்இம் பின் அதி­யிடம் தூத­னுப்­பி­னார்கள். அதற்கு முத்இம் சம்­மதம் தெரி­வித்தார்.

 

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முத்­இமின் இல்­லத்தில் அன்­றைய இரவைக் கழித்­து­விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவ­ரது ஏழு பிள்­ளை­க­ளு­மாக உரு­வப்­பட்ட வாள்­க­ளுடன் மக்­காவில் நுழைந்­தார்கள். அப்­போது குறைஷித் தலைவன் அபூ­ஸுப்யான் (அந்த சமயம் இஸ்­லாத்தின் பரம எதி­ரி­யாக இருந்­தவர்) எதி­ரிலே வந்து நீர் முஹம்­மதின் பின்னால் அவரைத் தொடர்ந்து வரு­வது ஏன்? அவ­ருக்கு நீர் பாது­காப்பு வழங்­கி­யுள்­ளீரா எனக் கேட்டார். ஆம், நான் சும்மா வர­வில்லை. முஹம்­ம­துக்கு பாது­காப்பு கொடுத்­துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்­ப­டி­யாயின் உனது பொறுப்­பி­லுள்ள உடன்­ப­டிக்­கையை நீர் முறிக்கத் தேவை­யில்லை எனக் கூறி அந்த பாது­காப்பை தலைவர் அபூ­ஸுப்­யானும் அங்­கீ­க­ரித்தார். இது­போன்ற ஏரா­ள­மான நம்­ப­க­மான நிகழ்­வு­களை ஸீராவில் அதி­க­மா­கவே காண­மு­டியும்.

 

இவை சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்­களின் அர­சியல் பிரச்­சி­னை­களை கையாள்­வ­தற்­கான வழி­காட்­டல்­க­ளாகும். அநீதி நிலவும் அர­சாங்­கத்தில் தேர்தல் என்­பது தீமையை குறைப்­ப­தற்­கான அல்­லது நாட்டு நலனில் பங்­க­ளிப்­ப­தற்­கான அல்­லது சத்­தி­யத்தை பரப்­பு­ரைப்­ப­தற்­கான சிறந்த வழி­மு­றை­யாகும். சர்­வ­ாதி­கா­ரி­களின் கொடு­மை­களை எதிர்ப்­ப­தற்­கான சாத்­வீ­க­மான அர­சியல் போராட்ட சாத­னமே தேர்தல் அர­சி­ய­லாகும். மேற்­கு­றித்த சம்­பவம் இறை தூதர் (ஸல்) அவர்கள் உலக அர­சியல் நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒரு காபிரின் பாது­காப்பை வேண்­டு­வது தவ­றல்ல என்­ப­தையே சுட்­டு­கி­றது.

 

இத­னைத்தான் அறிஞர் அப்துல் கரீம் ஸைதான்,  ’காபி­ரான அர­சி­ட­மி­ருந்து நலன்­தரும் பகு­தி­வா­ரி­யான பயனை பெறு­வது ஆகும்’ என்ற சட்­ட­வி­தியின் அடிப்­ப­டையில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

 

இந்தப் பின்­பு­லத்தில் தேர்­தல்­களின் போது தகு­தி­யான, மித­வாத சிந்­தனைப் போக்கு கொண்ட அல்­லது தீமை­களை குறைப்­ப­தற்கு உத­வுவார் என்று கரு­தப்­படும் ஒரு­வ­ருக்கு ஆத­ர­வாக வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­வது கட்­டாயக் கடமை எனவும் நியா­ய­மான கார­ண­மின்றி வாக்­க­ளிக்­காமல் ஒதுங்­கு­வது குற்றம் எனவும் பேர­றிஞர் முஹம்மத் அஹ்மத் ராஷித் வலி­யு­றுத்திக் கூறி­யுள்ளார். இலங்கை போன்ற பௌத்த நாடு­களில் வாழும் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கும் இந்த பத்வா செல்­லு­ப­டி­யாகும் என அவர் மேலும் உறு­திப்­ப­டுத்தி குறிப்­பிட்­டுள்ளார்.

 

இதே கருத்தை இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளான அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்-பர், அறிஞர் ஸலாஹ் ஸுல்தான், கலா­நிதி யூஸுப் கர்­ளாவி போன்ற பல அறி­ஞர்­களும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

 

அவ்­வாறே பல நாடு­களில் உள்ள உலமா சபை தீர்­மா­னங்­களும் வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்­து­வது சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு கடமை என்று தெரி­வித்­துள்­ளன. எனவே சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்கள், அங்கு வாழும் முஸ்­லிம்­க­ளதும் தேசத்­தி­னதும் நலன்­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி தேர்தல் காலங்­களில் தமது வாக்குப் பலத்தை பயன்­ப­டுத்­து­வது ஷரீ­ஆவின் பார்­வையில் கட்­டா­ய­மாகும்.

 

 

ஊழல் நிறைந்த அரசில் வாக்­கு­ரி­மைக்கு என்ன பெறு­மானம்!

 

நாட்டு நலன் கருதி நாம் வாக்­க­ளித்து என்ன பயன்? அங்கு ழுழுக்க முழுக்க ஊழலும் மோச­டியும் தானே நடை­பெ­று­கி­றது. இப்­படி இருக்கும் போது ஓட்டுப் போட்டால் என்ன போடா விட்டால் என்ன என்று சலிப்­புடன் ஒதுங்­கு­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். ஒரு­வேளை அவர்கள் எண்­ணு­வது போல் தேர்தல் ஊழல், மோசடி நிறைந்த நிலையில் அமையும் என்­றி­ருந்­தாலும் வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்­து­வது கடமை என்றே இஸ்­லா­மிய சட்­டத்­துறை அறி­ஞர்கள் விளக்­கி­யுள்­ளார்கள். காரணம் அநி­யா­யங்­க­ளுக்கு முன்னால் எடுக்­க­வேண்­டிய நிலைப்­பாடு குறித்து ஸுன்­னாவின் வழி­காட்டல் கட­மையை நிறை­வேற்­று­மாறே பணிக்­கி­றது. ‘உனது கட­மையை நிறை­வேற்று, உனது உரி­மையை அல்­லாஹ்­விடம் கேள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறி­யுள்­ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

 

எனவே, எமது பொறுப்­பி­லுள்ள வாக்குப் பலத்தை பிர­யோ­கிப்­பது ஓர் அடிப்­படைக் கடமை. முதலில் அதனை நிறை­வேற்­றுவோம். பின்னர் அநி­யா­யத்­திற்கு எதி­ராக வல்ல அல்­லாஹ்­விடம் முறை­யி­டுவோம். இதுதான் சுன்னா காட்­டித்­தரும் வழி­முறை என மேற்­கூ­றிய ஹதீஸ் எமக்கு கூறு­கி­றது. அநீ­திக்கு எதி­ராகப் போரா­டு­கின்ற அதே சமயம் தேர்­த­லின்­போது பொருத்­த­மான ஒரு­வரை தெரிவு செய்­வ­தற்கு வாக்­க­ளிப்­பதும் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய ஒரு கட­மை­யாகும்.

 

மாற்­றத்­திற்­கான சாத்­வீகப் போராட்­டத்தின் ஓர் ஆயு­தமே வாக்­கு­ரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கட­மையை பாழ்­ப­டுத்­தக்­கூ­டாது. தீமையைத் தடுப்­ப­தற்கு அடுத்த தரப்பின் ஒப்­புதல் தேவை­யில்லை. கட­மையை செய்தால் அல்­லாஹ்­விடம் கூலி­கி­டைக்கும். வாக்­கு­ரி­மையை விட்டுக் கொடுப்­பது என்­பது மோச­டிக்கு நாம் உடந்­தை­யாக இருக்­கிறோம் என்­பதே அர்த்தம். சாட்சி சொல்­லாமல் மௌனம் காப்­ப­தா­னது நடக்­கின்ற அநீ­தி­களை அங்­கீ­க­ரிப்­பது என்றே பொருள். மேலும் சரியோ பிழையோ நீ விரும்­பி­யதை செய்­வ­தற்கு நான் பூரண ஆத­ரவு என்று கூறுவதாக அது அமைந்துவிடும். எனவேதான் எந்நிலையிலும் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்றும் அலட்சியமாக விடுவது பாவம் என்றும் கூறுகின்றோம்.

 

அத்துடன் நாட்டிலுள்ள தேர்தல் ஒழுங்குகள் மற்றும் சட்ட திட்டங்களை பேணுவது ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் பொதுவானதே. எனவே ஒரு வாக்காளர் அவருக்குரிய ஒழுங்குகளைப் பேணி நடப்பது குடிமகன் என்ற வகையில் கடமையாகும். வாக்களித்தல் ஒரு சாட்சியாகும். சாட்சியாளர் தான் யாரென அடையாளம் காண்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பது ஷரீஆ அங்கீகரிக்கும் அடிப்படை விதியாகும். எனவே, குறிப்பாக நமது சகோதரிகள் வாக்காளர்களுக்குரிய ஒழுங்குகளை மீறாமல் நடந்து கொள்வதும் தேசநலன் சார்ந்த கடமை என்பதை புரிந்து நடக்க வேண்டும். கடமையொன்றை நிறைவேற்றும் ஒரு நல்ல பிரஜை ஒருபோதும் வீணான பிரச்சினைகளுக்கு வித்திடமாட்டான்.

 

தாய்நாட்டின் குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கிடையிலான சௌஜன்யம், சமாதானம், பொருளாதார சுபீட்சம் போன்றவற்றை உருவாக்குவதற்கு அதிகபட்சம் இவர் உழைப்பார் என்று கருதும் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கு நாட்டின் பெருந் தீமையொன்றை ஒழிப்பதற்காக நீங்கள் செய்யும் உதவியாகும். தூய எண்ணத்துடன் அது நடந்தால் கூலி நிச்சயம். எனவே இறைவனிடம் பிரார்த்திப்பதோடு,எமது வாக்கு பலத்தின் மூலம் தலைசிறந்த தலைவரை தெரிவு செய்வோம்.-Vidivelli

 

  • அரபாத் ஸைபுல்லாஹ்  (ஹக்கானி)  திஹாரிய

 

Leave A Reply

Your email address will not be published.