மடகஸ்கார் விபத்தில் 3 இலங்கையர்கள் பலி

0 1,192

மட­கஸ்­காரில் இடம்­பெற்ற வாகன விபத்­தொன்றில் மாணிக்கக் கல் வியா­பா­ரி­க­ளான மூன்று இலங்­கை­யர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

 

கார் ஒன்று கங்கை ஒன்றில் வீழ்ந்­ததில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மட­கஸ்கார், என்­ட­ன­நா­ரியோ நகரின் கிளை வீதி­யொன்றில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு 9 மணி­ய­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. குறித்த காரில் பயணம் செய்த மூன்று இலங்­கை­யர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக மட­கஸ்கார் அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சீசெல்ஸ் உயர்ஸ்­தா­னி­க­ரகம் குறிப்­பிட்­டுள்­ளது.

சீசெல்ஸ் உயர்ஸ்­தா­னி­க­ரக அதி­கா­ரி­களின் தலை­யீட்டில் குறித்த சம்­பவம் தொடர்பில் மேல­திக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.