முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது சஜித் பாராளுமன்றில் பேசவில்லை

ஹன்சாட் ஆதாரத்தை நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் மேல் மாகாண ஆளுநர் முஸம்மிலுடன் நேர்காணல்

0 1,552

Q: நீங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர மேயர் உட்­பட உயர்­ப­த­வியை வகித்­தி­ருந்த நிலையில் இன்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷவின் வெற்­றிக்­காகப் பாடு­ப­டு­கிறீர்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்?

A: இது ஒரு திடீர் மாற்­ற­மல்ல. அதனை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. 2015 ஆம் ஆண்டு நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்ற நோக்­கத்­துடன் செயற்­பட்டோம். அந்த தேர்­தலில் எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் சென்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வீட்­டுக்­க­னுப்ப வேண்­டு­மென்ற பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்தோம். அளுத்­க­மவில் எங்­க­ளுக்கு ஏற்­பட்ட மோச­மான சம்­ப­வமும் அதன்­போது முஸ்­லிம்­க­ளுக்கு சரி­யான முறையில் பாது­காப்பு அளிக்­கப்­ப­ட­வில்லை. இந்த வன்­மு­றையை அர­சாங்கம் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை முகம்­கொ­டுத்தோம்.

எனினும், நாங்கள் எதிர்­பார்த்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்து 100 நாட்­க­ளுக்குள் மத்­திய வங்­கியை கொள்­ளை­ய­டித்­தனர். இதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் அத­ல­பா­தா­ளத்­துக்கு செல்­லு­ம­ளவு மோச­ம­டைந்­தது. திறை­சேரி வங்­கு­ரோத்து நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டது. அர­சாங்கம், தெரிவு செய்­யப்­பட்ட நோக்­கத்தை மறந்­து­விட்டு நாட்டை கொள்­ளை­ய­டித்­தனர். அமைச்­சர்கள் போட்­டி­போட்டு ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டு பணம் சம்­பா­தித்­தனர்.
அத்­துடன் அளுத்­கம விவ­கா­ரத்­திற்கு ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு நிய­மிப்­ப­தாக முஸ்லிம் சமூ­கத்­திடம் வாக்­கு­று­தி­ய­ளித்தோம். எனினும், இன்­று­வரை அந்த விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வில்லை. இது­கு­றித்து முஸ்லிம் தலை­வர்கள் யாரும் அழுத்தம் கொடுக்­கவும் இல்லை. இவ்­வா­றான தொடர் விரக்­தியே இந்த மாற்­றத்­திற்கு காரணம்.

Q: அளுத்­கம வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் ராஜபக் ஷாக்­கள்தான் இருக்­கின்­றனர் என்ற குற்­றச்­சாட்டு தொடர்ந்தும் நீடிக்­கி­றதே. இந்­நி­லையில் எப்­படி நீங்கள் கோத்­தா­வுக்கு ஆத­ரவை வழங்­கினீர்?

A: அளுத்­கம வன்­முறை சம்­ப­வத்தின் பின்­னணி வேறு, மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ராக முஸ்­லிம்­களை திசை திருப்­பு­வ­தற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒரு சம்­ப­வமே அது. அதுதான் உண்மை. ஆனால் அளுத்­கம வன்­மு­றை­களை 24 மணித்­தி­யா­ல­யத்­திற்குள் ராஜபக் ஷ அர­சாங்கம் கட்­டுப்­ப­டுத்­தி­யது. பாதிப்­பு­களை சீர­மைத்து முழு­மை­யான நட்­ட­ஈட்­டையும் வழங்­கினர். அன்று இன்னும் பல முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விடத் திட்­ட­மிட்­டி­ருந்­தனர். எனினும் மஹிந்த அர­சாங்கம் அதனை தடுத்­து­நி­றுத்தி முஸ்­லிம்­களை பாது­காத்­தது.

நாங்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்து இந்த ஐந்து வரு­டங்­களில் முஸ்­லிம்­களின் நிலை­மையை பாருங்கள். முஸ்­லிம்கள் மீது பல வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. கண்டி, திகன பகு­தி­களில் ஒரு வாரத்­திற்கு மேல் முஸ்­லிம்கள் மீது அட்­டூ­ழி­யங்கள் நடத்­தப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்கள் இலக்­கு­வைக்­கப்­பட்டு நாச­மாக்­கப்­பட்­டன. வீடு­க­ளையும் தாக்­கினர். அர­சாங்கம் கைகட்டிப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தது. இன்­று­வரை நட்­ட­ஈடு வழங்­கப்­ப­டவும் இல்லை.

காலி பகு­தியில் இன வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­போது மஹிந்த ராஜபக் ஷ காலி பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு பேசி அங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தார்.

அம்­பாறை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் எரிக்­கப்­பட்­ட­போது அங்கு செல்­ல­வி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் தயா கம­கே­யினால் தடுக்­கப்­பட்டார்.

ஈஸ்­டர்­தின பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்தும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் குறித்தும் முஸ்­லிம்­களால் பல­முறை அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­லப்­பட்­டது. இதனை கண்­டு­கொள்­ளாது அர­சாங்கம் பொடு­போக்­காக இருந்­ததன் கார­ணத்­தாலும் 350 க்கும் மேற்­பட்ட உயிர்கள் அநி­யா­ய­மாக பலி­யா­கின. நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்­லிம்கள் மீதும் இன­வா­திகள் பெரும் நெருக்­கு­தல்­களை ஏற்­ப­டுத்­தினர்.

இரா­ணு­வத்­தினர் முஸ்லிம் வீடு­க­ளுக்கு அத்­து­மீறிச் சென்று மௌல­வி­மார்கள் உள்­ளிட்ட ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பா­வி­களை கைது செய்­தனர். நாட்டில் பாது­காப்­புத்­துறை வீழ்ச்சி கண்­டி­ருக்­கி­றது. அத்­துடன், புல­னாய்வுத் துறையும் செய­லி­ழந்­தி­ருக்­கி­றது. இத­னா­லேயே நாம் இன்­னல்­களை சந்­திக்­க­வேண்­டி­யேற்­பட்­டது.

ஈஸ்டர் தின தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்­லிம்கள் மீது மிக மோச­மாக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. முஸ்லிம் பெண்­களின் பர்­தா­வையும் கழற்ற முயற்­சித்­தனர். இப்­படி கடந்த ஐந்த வரு­டங்­களில் எத்­த­னையோ அநி­யா­யங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்­டன.

தொட­ராக முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யா­யங்கள் இழைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் எனது ஆத­ரவை அர­சாங்­கத்­திற்கு வழங்க முடி­யாத நிலை உரு­வா­னதால் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரை ஆத­ரிக்­க­லானேன்.

Q: இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் பொது­ஜன பெர­மு­ன­வி­னர்தான் இருக்­கின்­றனர் என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

A:இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும், முஸ்லிம் தலை­வர்­க­ளுமே. இவ்­வாறு குற்றம் சாட்­டு­ப­வர்­க­ளுக்கு ஒன்றை தெரி­வித்­துக்­கொள்ள வேண்டும். இதனை யார் செய்­தார்கள் என்று கேள்வி எழுப்­பு­வ­தை­விட, அர­சாங்­கத்தால் பாது­காப்புக் கொடுப்­ப­தற்கு முடி­யாமல் போய்­விட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு கொடுக்க தவ­றி­விட்­டனர் என்­பதே உண்மை. மொட்டுக் கட்­சிக்­கா­ரர்கள் செய்­தாலும், சிங்­கள பெளத்த இன­வா­திகள் செய்­தாலும் அவர்­களை கைது செய்து விசா­ரித்து தண்­டனை கொடுப்­பது அர­சாங்­கத்தின் கடமை. இந்தக் கட­மையை அர­சாங்கம் செய்ய மறுத்­து­விட்­டது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் பெண்கள் பர்­தாவை அணிந்­து­கொண்டு போய்த்தான் மஹிந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். ஆனால் முஸ்­லிம்­களால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சாங்­கத்தின் பிழை­யான அணு­கு­மு­றை­க­ளினால் பர்தா விட­யத்­திலும் இன­வா­திகள் தலை­யி­ட­லா­னார்கள். இப்­ப­டி­யான சந்­தர்ப்­பங்­களில் முஸ்லிம் தலை­மைகள் சமூ­கத்­திற்­காக குரல் கொடுத்­த­னரா? முஸ்­லிம்­க­ளுக்கு நட்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுத்­த­னரா? அவர்கள் அமைச்சுப் பத­விகள் மூல­மாக உழைத்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

Q: முன்னாள் ஜனா­திபதி பிரேமதாச­வைப்போல், சஜித் பிரேமதாசவும் சிறு­பான்­மை­யி­ன­ருடன் நெருக்­க­மாக சேவை­யாற்­றுவார் என்று முஸ்லிம் தலை­மைகள் கூறு­கின்­றனர். இது குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன?

A:ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருக்கும் சஜித் பிரே­ம­தாச முஸ்­லிம்கள் துன்­பங்­களை அனு­ப­வித்­த­போது அவர் பாரா­ளு­மன்றில் முஸ்­லிம்­க­ளுக்­காக ஒரு வார்த்­தை­யேனும் பேசி­னாரா? முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பு கொடுக்கச் சொன்­னாரா? முஸ்­லிம்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்க வலி­யு­றுத்­தி­னாரா? இது­கு­றித்து பாரா­ளு­மன்ற ஹன்­சாட்டில் ஏதும் பதி­வுகள் இருக்­கி­றதா? அவ்­வா­றான ஆதா­ரங்கள் இருந்தால் காட்­டுங்கள். எனது குற்­றச்­சாட்டை மறுத்து அதனை நிரூ­பித்தால் நான் அர­சி­ய­லி­லி­ருந்து விலகிக் கொள்­கிறேன் என சவால் விடுக்­கிறேன்.

இது­த­விர வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு சென்று பார்­வை­யிட்­டாரா? ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு போய் பார்த்­தாரா? இதற்கும் அவ­ரிடம் பதில் இருக்­காது.

நாட்டை ஆளும் தகுதி அவ­ரிடம் இருக்­கி­றதா என்ற கேள்­வியும் என்னுள் இருக்­கி­றது. இன்று அவர் மேடை­களில் பேசும்­போது ஒரு எதிர்க்­கட்சி உறுப்­பி­னரை போலத்தான் பேசு­கிறார்.

Q: அப்­ப­டி­யானால் மஹிந்த அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு கிடைக்கும் என்று எதிர்­பார்க்­க­லாமா?

A:இந்த நாட்­டிலே 30 வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற யுத்­தத்தை கோத்­தா­பய ராஜபக் ஷ 3 வரு­டத்­திற்குள் முடி­வுக்கு கொண்­டு­வந்தார். யுத்­தத்தில் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்ட சமூகம் வடக்கு, கிழக்­கிலே வாழும் முஸ்­லிம்­களே. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டமை வடக்கு கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைத்­த­தை­யொத்­த­தாகும்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாரி­ய­ளவில் சேவை­யாற்­றி­யி­ருக்­கிறார். வில்­பத்­துவை அண்­மித்த பகு­தி­களில் வாழ்ந்த வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்கு வீடு கட்­டிக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்தார்.

ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் செல்­வாக்­கி­ருந்­தது. இன்று முஸ்லிம் தலை­வர்­களால் வடக்கு கிழக்கில் எத­னையும் செய்ய முடி­யா­துள்­ளது.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியில் முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். காலி முகத்­தி­டலில் இடம்­பெற்ற கூட்­டத்­தின்­போது முஸ்­லிம்­க­ளுக்குப் பேச இட­ம­ளிக்­க­வில்லை. ஹக்கீம், ரிஷாட் போன்­றோ­ருக்கு முன் வரி­சை­யிலும் ஆசனம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹாசி­முக்கோ மத்­திய கொழும்பு அமைப்­பாளர் முஜிபுர் ரஹ்­மா­னுக்கோ பேச சந்­தர்ப்­ப­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. இப்­படி முஸ்­லிம்­களை மேடை­யேற்­றினால் சிங்­கள வாக்­குகள் இல்­லாமல் போகு­மென ஐ.தே.க. அஞ்­சு­கி­றது. இப்­படி எமது தனித்­து­வத்தை இழந்து அர­சியல் செய்­ய­வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. ஆக, முஸ்­லிம்­க­ளுடன் அன்­னி­யோன்­ய­மாக பழகும் ராஜபக் ஷாக்­களின் ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு உரிய அந்­தஸ்தும் பாது­காப்பும் கிடைக்கும் என்­பதை உறு­தி­யாகக் கூற­மு­டியும்.

Q: 2015 ஆட்சி மாற்­றத்­திற்கு முன்னர் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கோத்­தா­பய ராஜபக் ஷவின் கீழி­ருந்­தது. அப்­போ­தி­ருந்தே அவ­ரு­ட­னான நெருக்கம் ஏற்­பட்­டதா? அல்­லது அரசின் மீதான விரக்­தியால் ராஜபக் ஷாக்­க­ளுடன் இணைந்­தீர்­களா?

A:நான் மேய­ராக இருந்­த­போது கொழும்பை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு கோத்­தா­பய ராஜபக் ஷ எனக்கு துணை நின்றார். நான் ஐக்­கிய தேசியக் கட்சி மேயர் என்று அவர் பிரித்துப் பார்த்­த­தில்லை. அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் எங்­க­ளுக்கு காலை வாரியதுமில்லை. கொழும்பு நகரை முன்னேற்றுவதிலும் சீரமைப்பதிலும் அவர் சாதி, மத, கட்சி பேதங்கள் பார்க்கவில்லை. இவர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கினார். வீடு, தொடர்மாடிகள் அமைக்கப்பட்டபோது முஸ்லிம்களுக்கு சரிசமமான பங்கை வழங்கினார்.

இந்நாட்டிலே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி, இஸ்லாத்துக்கு எதிராக சிந்தனா ரீதியில் பௌத்த மக்களை முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திய சம்பிக ரணவக்க, இன்று கொழும்பில் முஸ்லிம்களுக்கு வீடு வழங்குவதில் பின்வாங்குகின்றார். இப்போது முஸ்லிம்களுக்கு பாராமுகம் காட்டுவதைப்போல் அன்று கோத்தாபய செய்யவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பாதுகாப்பு கட்டமைப்பு பலப்படுத் தப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் தலைவராக கோத்தாபய ராஜபக் ஷவைப் பார்க்கமுடியும். ஆகையால் அவரை ஜனாதிபதியாக்குவது சிறந்ததென தீர்மானித்தேன்.
முஸ்லிம்கள் இந்த தேர்தலில் மிகக் கவனமாக வாக்குகளை அளிக்க வேண்டும். நிச்சயமாக கோத்தாபய ராஜபக் ஷ நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக இருப்பார். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும்.-Vidivelli

  • ஆக்கில் அஹமட்

Leave A Reply

Your email address will not be published.