அமைதிக்கான நோபல் பரிசு பெறும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமத் அலி

0 1,502

2019ஆம் ஆண்­டுக்­கான அமை­திக்­கான நோபல் பரி­சுக்­காக எத்­தி­யோப்­பிய பிர­தமர் அபி அஹ்மத் அலி, நோர்­வோயின் நோபல் குழா­மினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார். “அமை­தியை நிலை­நாட்­டவும், சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கும்” நட­வ­டிக்­கை­களை எடுத்­த­தற்­கா­கவும் குறிப்­பாக அயல்­நா­டான எரித்­தி­ரி­யா­வு­ட­னான எல்லைப் பிரச்­சி­னையில் அவர் மேற்­கொண்ட தீர்க்­க­மான முடி­வுக்­கா­கவும் அபி அஹ்மத் அலிக்கு நோபல் பரிசு வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எத்­தி­யோப்­பி­யா­விலும் கிழக்கு மற்றும் வட­கி­ழக்கு ஆபி­ரிக்க பகு­தி­க­ளிலும் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முன்­னிற்கும் அனைத்து பங்­கு­தா­ரர்­க­ளையும் அவர்­க­ளது பணிக்­கான அங்­கீ­கா­ரத்­தையும் வழங்­கு­வ­தா­கவே இப்­ப­ரிசு வழங்­கப்­ப­டு­கி­றது.

2018 ஏப்­ரலில் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற போது, எரித்­தி­ரி­யா­வுடன் சமா­தானப் பேச்­சு­வார்த்தை நடத்த தனக்­குள்ள விருப்­பத்தை தெளி­வு­ப­டுத்­தினார் அபி. எரித்­தி­ரி­யாவின் ஜனா­தி­பதி Isaias Afwerky இன் பூரண ஒத்­து­ழைப்­போடு, 1998 – -2000 இடைப்­பட்ட காலத்தில் நடை­பெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, எரித்­தி­ரி­யா­வுடன் 20 ஆண்­டு­கா­ல­மாக எத்­தி­யோப்­பி­யா­வுக்கு நிலவி வந்த இராணுவ ரீதி­யி­லான சிக்­கலை சமா­தான ஒப்­பந்­தத்தின் மூலம் இவர் முடி­வுக்கு கொண்­டு­வந்தார். இவ்­வொப்­பந்­த­மா­னது இரு பிர­க­ட­னங்­க­ளாக கடந்த ஜுலை மாதம் அஸ்­ம­ரா­விலும் செப்­டம்பர் மாதம் ஜித்­தா­விலும் வைத்து இரு­நாட்டு தலை­வர்­க­ளாலும் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

சமா­தானம் என்­பது ஒரு­த­ரப்பு நாட்­டத்தால் நிகழ்­வ­தன்று. எத்­தி­யோப்­பிய பிர­தமர் அமை­திக்­காக கைதூக்க அதை ஓங்கப் பிடித்தார் எரித்­தி­ரிய ஜனா­தி­பதி. இதன் மூலம் எத்­தி­யோப்­பியா மற்றும் எரித்­தி­ரி­யாவில் வாழும் சகல பொது­மக்­களும் பய­ன­டைவர் என்­பது நோபல் குழாமின் உன்­னத எதிர்­பார்ப்­பாகும்.

அமை­திக்­கான நோபல் பரிசை பெறும் 100 ஆவது நபர் அல்­லது அமைப்பு எனும் பெரு­மையை அபி அஹ்மத் அலி பெற்­றுள்ளார். 223 தனி­ந­பர்கள், 78 அமைப்­புக்கள் உட்­பட 301 பரிந்­து­ரைகள் தாண்டி இவர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 1895-ல் நோபல் பரிசை நிறு­வி­ய­வ­ரான ஸ்வீடன் தொழி­ல­திபர் ஆல்ஃ­பிரட் நோபலின் நினைவு தின­மான டிசம்பர் 10 அன்று ஆஸ்­லோவில் நடை­பெறும் விழாவில் இவ­ருக்கு நோபல் பரிசு வழங்­கப்­படும்.

யார் இந்த அபி அஹ்மத்?

1976 ஓகஸ்ட் 15 எத்­தி­யோப்­பி­யாவில், கோப்­பியின் தோற்­றத்­துக்குப் புகழ்­பெற்ற, தென்­மேற்­கே­யுள்ள காஃபா மாநி­லத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் அபி பிறந்தார். இவ­ரது தந்தை அஹ்மத் அலி, ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இஸ்­லா­மியர். அம்ஃ­காரா இனத்தைச் சேர்ந்த எத்­தி­யோப்­பிய மரபு கிறித்­து­வ­ரான இவ­ரு­டைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே இவ­ரது தந்­தையின் நான்­கா­வது மனைவி ஆவார். அபி அஹ்மத் அவ­ரு­டைய தாய்க்கு ஆறா­வதும் கடை­சி­யு­மான மகனும் இவரின் தந்­தைக்கு இவர் 13 ஆவது மகனும் ஆவார். இவ­ரது இள­மைக்­கால பெயர் அபி­யோத்து என்­ப­தாகும்.

அபியின் கல்வி நிலை

அபி அஹ­மது தனது ஆரம்பக் கல்­வியை உள்ளூர் ஆரம்பப் பாட­சா­லையில் கற்றார். பின் உயர்­நிலை பள்­ளிப்­ப­டிப்பை அகரோ நக­ரத்தில் தொடர்ந்தார். எத்­தி­யோப்­பிய பாது­காப்பு படையில் பணி­யாற்­றிய நிலையில் தனது பட்­டப்­ப­டிப்பை கணினிப் பொறி­யியல் துறையில் மேற்­கொண்ட அபி, 2011 இல் கிறீன்விச் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது முது­கலைப் பட்­டத்­தையும், 2013 இல் அஸ்­லாந்து பல்­க­லைக்­க­ழ­கத்தில் வியா­பார நிர்­வாக முது­மாணிப் பட்­டத்­தையும் பெற்­றுக்­கொண்டார். 2017 இல் எடிஸ் அபாபா பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது கலா­நிதிப் பட்­டத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

பாது­காப்பு படையில் அபி

மார்க்­ஸிய லெனி­னிய ஆட்­சிக்கு எதி­ரான மோதல்­களின் போது 1991 இன் ஆரம்ப பகு­தியில் பாது­காப்பு படையில் இணைந்தார் அபி. அங்கு பணி­யாற்­றிய நிலை­யி­லேயே தனது பட்­டப்­ப­டிப்­பையும் வாழ்க்கைத் துணையும் அடைந்து கொண்டார்.

1993 களில் எத்­தி­யோப்­பிய தேசிய பாது­காப்பு படை இரா­ணுவ வீர­ராக பயிற்­சியை முடித்த அபி, உளவு மற்றும் தொடர்­பாடல் துறை­க­ளி­லேயே அதிகம் பணி­யாற்­றினார். ருவாண்டா இனச்­சுத்­தி­க­ரிப்பின் பின் 1995 இல் ஐக்­கிய நாடுகள் அமைதி காக்கும் படை (UNAMIR) அங்­கத்­த­வ­ராக ருவாண்­டாவில் பணி­யாற்­றினார். 1998- – 2000 காலப் பகு­தியில் இடம்­பெற்ற எத்­தி­யோப்­பி­ய -­எ­ரித்­தி­ரிய போரில் எரித்­தி­ரிய படைப் பிரி­வு­களின் அமை­வு­களை கண்­ட­றியும் உளவுக்குழு ஒன்றை வழி­நா­டாத்­தினார். பின்னர் பாது­காப்பு படை உத்­தி­யோ­கத்­த­ராக தனது சொந்த ஊரான பேசா­சா­விற்கு திரும்­பினார்.

எத்­தி­யோப்­பிய பாது­காப்பு படையில் தன்­னோடு பணி­யாற்­றிய சினாஸ் தயாசேவை கரம் பிடித்தார். இவர்­க­ளுக்கு மூன்று மகள்கள் உள்­ளனர். மேலும் ஒரு வளர்ப்பு மக­னையும் இவர்கள் கொண்­டுள்­ளனர்.

அர­சி­யலில் அபி

2010 இல் பாது­காப்பு பிரிவில் இருந்து நீங்­கிய அபி தனது அர­சியல் பய­ணத்தை ஒரோமோ ஜன­நா­யக கட்­சியில் தொடர்ந்தார். 2010 தேசிய தேர்­தலில் கள­மி­றங்­கிய அபி மக்கள் பிர­தி­நி­திகள் அவைக்கு தேர்­வானார். தனது பாரா­ளு­மன்ற காலத்­திற்கு முன்னும் பின்னும் அநேக மதக்­க­ல­வ­ரங்­களை எதிர்­நோக்­கிய அபி “அமை­திக்­கான மார்க்கப் பேரவை”யைத் தோற்­று­வித்து இஸ்­லா­மிய – கிறிஸ்­தவ நல்­லி­ணக்­கத்­துக்­காக உழைத்தார்.

படிப்­ப­டி­யாக அர­சி­யலில் வளர்ச்சி அடைந்த அபி, 2015 இல் விஞ்­ஞான தொழில்­நுட்ப அமைச்­ச­ரானார். ஓராண்டில் பணி­யி­லி­ருந்து விலகி ஒரோ­மிய ஆட்­சிப்­பி­ரிவின் துணைத்­த­லை­வ­ரானார். ஒரோ­மிய கிரா­மிய அபி­வி­ருத்தி மற்றும் திட்­ட­மிடல் அலு­வ­லகத் தலை­வ­ராக இருந்த அபி ஒரோ­மிய பொரு­ளா­தார புரட்­சிக்கு வித்­திட்டார்.

EPRDF தவி­சா­ள­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் இருந்த Hailemariam Desalegn தனது பதவி வில­கலை அறி­வித்த போது EPRDF தவி­சாளர் இருக்கை வெற்­றி­ட­மா­னது. எத்­தி­யோப்­பி­யாவின் முன்­னணி அர­சியல்வாதி­க­ளாக இப்­ப­த­விக்கு லெம்மா மெகேஸா மற்றும் அபி அஹ­மது ஆகியோர் முன்­மொ­ழி­யப்­பட்­டாலும் லெம்மா தேசிய பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யி­ரா­மையால் நேர­டி­யாக அபி அஹ­மது தவி­சாளர் பத­விக்கு தேர்­வானார். EPRDF தவி­சா­ள­ரான அபி 2018 ஏப்ரல் 2 ஆம் திகதி எத்­தி­யோப்­பிய பிர­த­ம­ராக வெற்­றி­யீட்­டினார்.

பிர­த­ம­ராக அபி

மிகவும் இறுக்­க­மாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நாடாக இருந்து வந்த எத்­தி­யோப்­பி­யாவின் பிர­த­ம­ராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 43 ஆவது வயதில் பத­வி­யேற்ற அபி, அந்­நாட்டில் தாரா­ள­வாத சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தினார். ஆயி­ரக்­க­ணக்­கான செயற்­பாட்­டா­ளர்­களை சிறையில் இருந்து விடு­வித்­த­துடன், நாடு­க­டத்­தப்­பட்ட அதி­ருப்­தி­யா­ளர்­களை நாடு திரும்­பு­வ­தற்கு அனு­மதி அளித்தார். மிகவும் முக்­கி­ய­மாக, எத்­தி­யோப்­பி­யாவின் அண்டை நாடான எரித்­தி­ரி­யா­வுடன் ஒரு சமா­தான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டதன் மூலம் அந்­நாட்­டு­ட­னான இரண்டு தசாப்த கால மோதலை முடி­வுக்கு கொண்­டு­வந்தார்.

அதே சம­யத்தில், இந்த சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக எத்­தி­யோப்­பி­யாவில் ஏற்­பட்ட இன ரீதி­யி­லான பதற்றம் மற்றும் அதைத்­தொ­டர்ந்து நடை­பெற்ற வன்­மு­றை­களின் கார­ண­மாக சுமார் 2.5 மில்­லியன் மக்கள் தங்­க­ளது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது. இவர்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களில் பிர­தமர் ஈடு­பட்டு வரு­கிறார். பல மொழி­க­ளையும் இனங்­க­ளையும் கொண்ட எத்­தி­யோப்­பி­யாவில் இன்னும் பல இன­மு­று­கல்கள் தொடரும் நிலையில் அமை­திக்­கான விருது வழங்­கு­வதில் அவ­சரம் காட்டப்பட்டதாக பல விமர்­ச­னங்­களும் பல தரப்­பிலும் முன்­வைக்­கப்­பட்­டன.

ஆனால், அபி அஹ்மத் அலி முன்­னெ­டுக்கும் அமை­திக்­கான பாரிய முயற்­சி­யா­னது தற்­போது அதற்­கான அங்­கீ­கா­ரத்­தையும் ஊக்­கு­விப்­பு­க­ளையும் எதிர்­பார்த்து நிற்­கி­றது‌. இதனால் இம்­முறை வழங்­கப்­படும் இந்த அமை­திக்­கான நோபல் பரி­சா­னது பிர­த­மரை ஊக்­கு­விக்கும் ஒன்­றாக அமை­வ­தோடு அவ­ரது மீள்­கு­டி­யேற்ற திட்­டங்­க­ளுக்கும் பங்­க­ளிக்கும் என்­பது நோர்­வேயின் நோபல் தெரி­வுக்­கு­ழுவின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது என நோபல் குழாம் தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

டைம்ஸ் சஞ்­சி­கையின் 2018 இன் மிகவும் பிர­ப­ல­மான 100 பேர் பட்­டி­ய­லிலும், Foreign Policy சஞ்­சி­கையின் 2019 தலை­சி­றந்த பூகோள சிந்­த­னை­யா­ளர்கள் 100 பேர் பட்­டி­ய­லிலும் இடம்­பி­டித்த அபி, சவூ­தியின் அப்துல் அஸீஸ் விருது, அமீ­ர­கத்தின் செய்­யது பதக்கம், ஹெஸியன் சமாதான விருது உள்ளிட்ட பல கௌரவங்களதும், விருதுகளதும் சொந்தக்காரர் ஆவார்.- Vidivelli

  • ஓட்டமாவடி எம்.ஐ.முஹம்மத் ஸப்ஷாத்
    மொறட்டுவ பல்கலைக்கழகம்

Leave A Reply

Your email address will not be published.