‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’

கொழும்பில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள்

0 1,614

இன்று இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் கல்­வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்­து­கின்­றார்கள் என பெரு­மைப்­ப­டு­கிறோம். ஆனால் இதற்கு வித்­திட்ட பெண்­களை நாம் அறிந்­தி­ருக்­கி­றோமா? மக்­க­ளுக்­காக எவ்­வித சுய­ந­ல­மு­மின்றி செயற்­பட்ட இவர்­க­ளது பெயர்கள் கால­வோட்­டத்தில் மறக்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனாலும் அவர்­களை என்­றென்றும் நினை­வு­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும். அந்த வகையில் சென்ற நூற்­றாண்டில் இலங்கை முஸ்லிம் பெண்­களின் சமய மற்றும் உலகக் கல்­விக்­காக அய­ராது உழைத்த மூன்று சகோ­த­ரி­களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். இவர்கள் ‘கலீ­பாத்தா” ‘ஜனீ­னாத்தா” மற்றும் ‘ஒஸீ­லாத்தா” என்ற பெயர்­களால் வர­லாற்றில் அறி­யப்­ப­டு­கி­றார்கள்.
சிறந்த முறையில் வாழ்ந்து மர­ணித்­துப்­போன இந்தப் பெண்­களின் புகைப்­ப­டங்­களைத் தேடி­ய­போது மங்கிப் போன நிலை­யி­லி­ருந்த இவ்­வா­றான புகைப்­ப­டங்­க­ளையே என்னால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

தெமட்­ட­கொட பகு­தியில் பல­ராலும் அறி­யப்­பட்ட ஆலிம்­களுள் ஒரு­வ­ரான காக்கா லெப்பே என்­ப­வரின் புதல்­வி­களே இந்த மூன்று சகோ­த­ரி­க­ளு­மாவர். இவர்­க­ளு­டைய தந்­தையின் சரி­யான பெயரை என்னால் அறிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.

இந்த சகோ­த­ரிகள் மூவரும் தமது தந்­தை­யி­ட­மி­ருந்து குர்­ஆனை சர­ள­மாக ஓது­வ­தற்­கான பயிற்­சி­களை மாத்­தி­ர­மின்றி தஜ்வீத் கற்­கை­க­ளையும் முறை­யாகப் பெற்­றி­ருந்­தனர். இவர்­க­ளது தந்­தையின் மறை­வுக்குப் பின்­னரும் குறித்த முஸ்லிம் சமூ­கத்தில் தமது பெண் பிள்­ளை­களை எழுத வாசிக்க மற்றும் தமது பெயர்­களை கையொப்­ப­மிட வேண்டும் என்ற நோக்­கத்­தி­லா­வது பாட­சா­லைக்கு அனுப்­பு­வ­தற்கு பெற்­றோர்கள் தயக்கம் காட்­டினர்.
ஆனாலும் இந்த மூன்று சகோ­த­ரி­களும் எவ்­வித சுய­ந­ல­மு­மின்றி பெண் பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க முன்­வந்­தனர். சமூ­கத்தின் பார்வை தம்­மீது விழ­வேண்டும் என்­ப­தற்­காக அவர்கள் இதனைச் செய்­ய­வில்லை. ஆனால் இவர்­க­ளு­டைய செயற்­பாடு முஸ்லிம் பெண்­க­ளு­டைய கல்வி விட­யத்தில் ஒரு பாரிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் இவர்கள் பிர­ப­ல­ம­டைந்­தார்கள்.

காக்கா லெப்பே அவர்­க­ளி­னா­லேயே பெண் பிள்­ளை­க­ளுக்கு கல்­வி­யூட்டும் இந்த சிறிய முயற்­சிக்கு அத்­தி­பாரம் இடப்­பட்­டது. மரு­தா­னையில் உள்ள மாளி­கா­கந்த வீதியில் கல்­வத்த எனும் பகு­தியில் பெண் பிள்­ளை­க­ளுக்­கான ஒரு சிறிய குர்ஆன் மத்­ரஸா காக்கா லெப்பே அவர்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டது. அவ­ரது மறை­வுக்குப் பின்னர் குறித்த மூன்று சகோ­த­ரி­களும் மத்­ரஸா நட­வ­டிக்­கை­களை கொண்டு நடத்­தினர்.

இதனால் பல்­வேறு குடும்­பங்­களில் உள்ள பெண்கள் கல்­வியை பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் இந்த மத்­ர­ஸா­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

அதன் பின்னர் இட­வ­சதி மற்றும் வளங்கள் என்­பன கருத்தில் கொள்­ளப்­பட்டு மத்­ர­ஸாவின் அமை­விடம் கொழும்பு ஒன்­ப­தி­லுள்ள தெமட்­ட­கொட வீதிக்கு மாற்­றப்­பட்­டது.
இந்த மத்­ரஸா பிர­பல்­ய­ம­டைந்­ததைத் தொடர்ந்து பல பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை இங்கு கல்வி கற்க அனுப்பி வைத்­தார்கள். மேலும் தமிழ் மற்றும் ஆங்­கிலம் உட்­பட தேசிய பாடத்­திட்­டங்­களும் இந்த மத்­ர­ஸாவில் அறி­முகம் செய்­யப்­பட்­டதன் பின்னர் மேலும் பிர­பல்யம் அடைந்­தது.

எவ்­வா­றாக இருந்­த­போ­திலும் இந்த மத்­ரஸா ஒரு தனியார் நிறு­வ­ன­மா­கவே செயற்­பட்­டது. இறு­தி­வரை இந்த மத்­ர­ஸா­வுக்கு அரச அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை. குறித்த மூன்று சகோ­த­ரிகள் உட்­பட இங்கு பணி­பு­ரிந்த ஏனைய ஆசி­ரி­யர்­க­ளுக்கும் கல்வி கற்கும் மாண­வி­களின் பெற்­றோர்­க­ளிடம் இருந்து அற­வி­டப்­படும் பணத்தின் மூலமே சம்­பளம் வழங்­கப்­பட்­டது.

1935 இல் இந்த மத்­ரஸா முஸ்லிம் பெண்­களின் கல்வி விட­யத்தில் பாரிய பங்­க­ளிப்பு செலுத்­து­வதை உணர்ந்­து­கொண்ட ஸாஹிரா கல்­லூ­ரியின் முன்னாள் அதிபர் ரி.பி. ஜாயா இந்­தக்­கல்வி நிலைய வளா­கத்தை இடம்­மாற்றி விருத்தி செய்ய முன்­வந்தார்.
இதன் பின்னர் இலக்கம் 164, தெமட்­ட­கொட வீதி என்ற அமை­விடம் இந்த மூன்று சகோ­த­ரி­களின் நினைவுச் சின்­ன­மாக பிர­க­டனம் செய்­யப்­பட்­ட­துடன் அவர்­களால் மத்­ரஸா தரத்தில் ஹைரியா பெண்கள் பாட­சாலை என்ற உத்­தி­யோ­க­பூர்வ கல்வி நிலையம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இன்று இது தலை­ந­ர­கரில் முஸ்லிம் பெண்­க­ளுக்­கான முன்­னணி கல்வி நிறு­வ­ன­மாக விளங்­கு­கின்­றது.

மத்­ர­ஸத்துல் ஹைரியா என்று பெயர் பெற்ற இந்­தப்­பா­ட­சா­லையில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள் கற்­பிக்­கப்­பட்­டன.

இதனால் தெமட்­ட­கொ­டயில் மாத்­தி­ர­மின்றி வெளிப்­பி­ர­தே­சங்­க­ளிலும் இந்­தக்­கல்வி நிறு­வனம் பிர­பல்யம் பெற்­றது. தற்­போது ஸாஹிரா கல்­லூரி மற்றும் முஸ்லிம் பெண்கள் கல்­லூரி என்­ப­வற்­றோடு ஒப்­பி­டும்­போது குறித்த பாட­சா­லை­களைக் காட்­டிலும் க.பொ.த. சாதா­ர­ண­தரம் மற்றும் உயர்­த­ரத்தில் அதி­க­மான பெறு­பே­று­களை இந்­தப்­பா­ட­சாலை மாண­விகள் பெற்றுத் தரு­கி­றார்கள்.

இந்த மத்­ரஸா உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­னரும் கூட பழீலா உம்மா , ஸனீரா ஜுனைத் மற்றும் வொஸீலா கரீம் ஆகிய மூன்று சகோ­த­ரி­களும் தமது தந்­தை­யிடம் இருந்து கற்­றுக்­கொண்ட அழ­கிய முறையில் குர்ஆன் ஓதும் கலையை உயர்­தர பாட­சா­லை­களில் கற்றுக் கொடுத்­துக்­கொண்­டுதான் இருந்­தார்கள். சில குடும்­பங்­களின் பல தலை­மு­றை­க­ளுக்கு இவர்கள் மூவரும் குர்ஆனைக் கற்றுக்கொடுத்துள்ளனர். இதனால் பல தலைமுறைகளில் இவர்களை நினைவில் வைத்துள்ளவர்களும் இவர்களுடைய பாணியிலேயே குர்ஆனை ஓதுபவர்களும் இன்றும் உள்ளனர்.

இவர்கள் மூவரும் தற்போது மரணித்து விட்டார்கள். இவர்களுள் இறுதியாக உயிரிழந்த சகோதரி வொஸீலா கரீம் அவர்களை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் சந்தித்து அவருக்கு பரிசீல்களையும் பாராட்டுக்களையும் அளித்தமை நினைவுகூரத்தக்கதாகும். இவர்கள் மூவரும் சுவனம் நுழைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். – Vidivelli

  • ஆங்­கி­லத்தில்: கலா­நிதி எம். ஹாரிஸ்தீன்
    தமிழில்: எம்.ஏ.எம். அஹ்ஸன்

Leave A Reply

Your email address will not be published.