பிளவுபடும் முஸ்லிம் அரசியல்

0 1,679

தற்­போது நிக­ழ­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இம்­முறை போட்­டி­யிடும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வே பேசு பொரு­ளா­கி­யி­ருக்­கிறார். சஜித்தோ, கோத்­தா­ப­யவோ பத­வியைப் பெற கணி­ச­மான வாக்­குகள் குறை­யு­மாயின் இவர் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை முன்­வைத்துப் பேரம் பேசிப் பெற்­றுக்­கொ­டுக்கப் பதவி பெறச் செய்­வாராம். இவ­ரது முஸ்லிம் வாக்கு வங்கி காத்­தான்­கு­டி­யி­லேயே இருக்­கி­றது. அதிலும் கூட இவர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தோற்றுப் போனார். காரணம் இவர் அப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்­ட­தே­யாகும். அத்­தேர்­தலில் இவர் ஐக்­கிய தேசிய கட்­சி­யிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிலோ போட்­டி­யிட்­டி­ருந்தால் வென்­றி­ருப்பார்.

அதற்குப் பின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தயவால் தேசிய பட்­டியல் எம்­பி­யாகி இரா­ஜாங்க அமைச்­சரும் ஆகினார். பின்னர் கிழக்கு மாகாண ஆளு­ன­ரு­மாக்­கப்­பட்டு விலக்­கப்­பட்டார். இப்­போது முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­கு­களைத் திரட்டி அவற்றின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை முன்­வைத்துப் பேரம் பேசிப் பெற்றுக் கொடுக்­க­வென வேட்­பா­ளர்கள் சம அளவு வாக்­கு­களைப் பெறு­வார்­க­ளானால் இவர் ஒரு தரப்பைப் பதவி பெறச் செய்­வாராம். இதன் மூலம் இவர் ஒரு முஸ்லிம் என்­பதால் நாடு முழுக்க வாழும் முஸ்­லிம்­களில் ஏரா­ள­மானோர் இவ­ருக்கு வாக்­க­ளிப்­பார்கள் என்றே எதிர்­பார்க்­கிறார்.

வெறு­மனே அமைச்­ச­ராக மட்டும் “நானும் நீங்­களும்” ஆமா சாமி போட­லாமே தவிர எதையும் செய்ய முடி­யாது. கடந்த ஐந்­தாண்­டு­களும் அப்­ப­டித்தான் முஸ்லிம் சமூ­கத்தை வீதிக்குக் கொண்டு வந்­தி­ருக்­கிறோம். இதனால் இவ்­வாறு இருக்க முடி­யுமே தவிர சமூ­கத்­துக்­காகப் பேசும் சமூ­கத்­துக்கு ஏற்­படும் தடை­களை உடைத்­தெ­றியும் தகர்க்கும் சக்­தி­யாக நம்மால் இருக்­கவே முடி­யாது. நான் 2000 ஆம் ஆண்டே இறந்து விட்டேன். அதன் பின் ஒவ்­வொரு நாளும் எனக்கு போனஸ்தான். நான் யாருக்கும் அஞ்­சு­ப­வனோ, அஞ்­சி­யதோ, அஞ்சப் போவதோ இல்லை.

எனது சர்­வ­க­லா­சா­லையை அல்லாஹ் பாது­காப்பான். அதற்­கா­கவல்ல, முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்­கவே நான் போட்­டி­யி­டு­கிறேன். இன்னும் 25 ஆண்­டுகள் முஸ்­லிம்கள் இந்­நாட்டில் நிம்­ம­தி­யாக வாழ்­வ­தற்­கான நிகழ்ச்சி நிரலைத் தயா­ரித்­தி­ருக்­கிறேன். நான் தான் இந்த முஸ்லிம் தலை­மை­களில் மூத்­தவன். யாரதும் முக­வரும் அல்ல, முஸ்­லிம்­களின் முகவர் ஜனா­தி­ப­தி­யாகும் எண்ணம் எனக்கு இல்லை. அந்த அள­வுக்கு நான் மடை­யனும் அல்ல. முஸ்­லிம்கள் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும். முஸ்லிம் சமூக உரி­மை­களைக் காக்கும், வெற்றி பெறும் வேட்­பா­ள­ருக்கே நாம் ஆத­ர­வ­ளிப்போம். நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரல்ல. வெற்றி பெறும் ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் வேட்­பாளர் என்­றெல்லாம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் கூறி­யி­ருந்தார்.

இப்­படி நினைக்­கவும் போட்­டி­யி­டவும் இவ­ருக்கு ஜன­நா­யக உரிமை உண்டு என்­றாலும் கூட, இதில் மதி­யூகம் உண்டா? இது யதார்த்­த­மான செயற்­பாடா? என்­ப­தையே இங்கு நோக்க வேண்டும். ஒரு­வரைப் பத­வி­யேற்கச் செய்ய குறை, நிரப்பும் அள­வுக்கு இவரால் முஸ்லிம் வாக்­கு­களைத் திரட்ட முடி­யுமா? ஹக்கீம் தரப்பு, ரிஷாத் தரப்பு, அதா­வுல்லாஹ் தரப்பு, பஷீர் ஷேகுதாவுத் தரப்பு, ஐ.தே.க முஸ்லிம் தரப்பு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முஸ்லிம் தரப்பு, ஜே.வி.பி. முஸ்லிம் தரப்பு, ஆகி­ய­வற்­றோடு ஹிஸ்­புல்லாஹ் தரப்பும் உரு­வா­கி­விடும். இது முஸ்­லிம்­களை ஒவ்­வொரு பகு­தி­க­ளிலும் கூறு­போ­டவே உதவும். எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் இதன் தாக்கம் நிச்­சயம் உண­ரப்­படும்.

ஹிஸ்­புல்­லாஹ்வின் குறை­நி­றைப்பு முஸ்லிம் வாக்­கு­களால் தான் சஜித்தோ, கோத்­தா­ப­யவோ பதவி ஏற்கும் நிலை ஏற்­படும் என ஒரு பேச்­சுக்கு வைத்துக் கொள்­ளுங்கள். இவர் சஜித் பக்கம் சேர்ந்தால் கோத்­தா­பய தரப்பால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். இவர் கோத்­தா­பய பக்கம் சேர்ந்தால், சஜித் தரப்பால் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும். இது­வரை அக்­கட்­சிகள் முஸ்­லிம்கள் மீது காட்டி வந்த அபி­மானம் அடி­யோடு அழிந்­து­விடும். எனவே ஹிஸ்­புல்லாஹ் தனி­யாகப் போட்­டி­யி­டு­வதை விடவும் அதா­வுல்­லாஹ்­வோடு சேர்ந்து கோத்­தா­பயவுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கலாம். இரு­பக்­கமும் இருப்­பதும் கூட பாது­காப்­பே­யாகும்.

ஆக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் இத்­தேர்­தலில் ஒரு வேட்­பா­ள­ராகக் களம் இறங்­கி­யி­ருப்­பதே தற்­போது பேசப்­ப­டு­கி­றது. அவர் வெல்­வது முயற்­கொம்பு என்­றாலும் கூட, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்குச் சார்­பாக முஸ்­லிம்­களின் கணி­ச­மான வாக்­கு­க­ளை­யேனும் பெற்றுக் கொடுக்­கவே முக­வ­ராக நிற்­கிறார் என்றே குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. எனினும் அவர் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைத் திரட்டி சமூகக் கோரிக்­கை­களை முன்­வைத்து பத­விக்­கான குறை நிறைப்பு செய்ய முடியும் என்­கிறார்.

எனினும் ஹிஸ்­புல்லாஹ் போட்­டி­யி­டு­வது முஸ்லிம் வாக்­கு­களை திசை திருப்பும் சதியே ஆகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறி­யி­ருக்­கிறார். முஸ்லிம் காங்­கி­ரசும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் ஏனைய பிர­தான முஸ்லிம் தலை­மை­களும் இணைந்து எடுத்த முடிவை பலப்­ப­டுத்­து­வதை விடுத்து மற்ற அணிக்குத் துணை போவ­தென்­பது முஸ்லிம் வாக்­கு­களைத் திசை திருப்­பு­வ­தோடு எதிர்ப்­பா­ளரை ஆட்­சிக்குக் கொண்டு வரு­வ­தற்­கே­யாகும் என இது பற்றி ரவூப் ஹக்கீம் தெளி­வு­ப­டுத்­து­கிறார்.

இதற்கு பதி­ல­ளிக்­கையில் ஹிஸ்­புல்லாஹ், நான் யாரது முக­வ­ரா­கவும் போட்­டி­யி­ட­வில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் முக­வ­ரா­கவே போட்­டி­யி­டு­கின்றேன். தற்­போது எனது உயி­ருக்கு ஆபத்து. நான் கொல்­லப்­பட்டால் தேர்தல் சட்­டத்தின் படி உடனே இன்­னொரு வேட்­பா­ளரை நிறுத்தி இப்­பு­னித போராட்­டத்தை நாம் கொண்டு செல்ல முடியும் என்­கிறார்.
அதா­வுல்­லாஹ்வின் நோக்கம் மஹிந்­த­ரா­ஜபக் ஷ மூலம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு விடு­த­லையைப் பெறு­வ­தாகும். இனி கட்­டுப்­பணம் செலுத்­தி­விட்டு வேட்­பாளர் நிய­மனம் பெறாத பஷீர்­ஷே­கு­தாவுத் சொல்­வதைப் பார்ப்போம். ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் வாக்­க­ளித்த வேட்­பாளர் வென்­றாலும் கூட சிறு­பான்­மை­க­ளுக்கு எந்த நன்­மையும் இல்லை. தோற்றால் நிலைமை மேலும் மோச­மா­கி­விடும் என்­கிறார். மேலும் அவர் கூறு­கையில் நான் கட்­டுப்­பணம் செலுத்­திய செய்தி ஊட­கங்­களில் வெளி­யா­னது. நான் நிய­மனப் பத்­திரம் தாக்கல் செய்­யாத செய்­தியும் வெளி­வந்­தது. இரண்­டையும் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

நான் கட்­டுப்­பணம் செலுத்­திய போது வேறு சிறு­பான்­மைகள் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை. பின்பு தான் பலரும் முனைந்­தனர். நான் கட்­டு­வ­தற்கு முன்பே தமிழ் பேசும் ஒரு பொது வேட்­பாளர் போட்­டி­யிட வேண்டும் என்னும் கருத்தை ஊட­கங்கள் மூலம் வெளிப்­ப­டுத்­திய போதும் அது மக்­க­ளையும் சிறு­பான்மைத் தலை­வர்­க­ளையும் சென்­ற­டைய கால அவ­காசம் இருக்­க­வில்லை.

தமிழ், முஸ்லிம் கட்­சி­க­ளோடு சிறு­பான்மை சமூக முக்­கி­யஸ்­தர்­களும் பேசிப் பொது முடி­வுக்கு வராது அத்­த­கைய வேட்­பாளர் போட்­டி­யி­டு­வது சாத்­தி­ய­மற்­றது என்­பதை நான் முன்பே உணர்ந்­தி­ருப்­பினும் அந்தக் கருத்து முன்­வைக்­கப்­பட்டுத் தமிழ் பேசும் அர­சியல் அரங்கில் அதற்­கா­ன­வரை எதிர்­கா­லத்தில் கள­மி­றக்கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்தும் என்னும் நம்­பிக்கை எனக்கு இருந்­தது என பஷீர்­ ஷே­கு­தாவுத் கூறினார்.

தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்; இக்­க­ருத்து சிறி­தேனும் மக்­களைச் சென்­ற­டைந்து அவ்­வாறு நிகழும் என்றே நினைத்தேன். எனினும் அது நிக­ழ­வில்லை. அதன் பிறகே நான் கட்­டுப்­பணம் செலுத்­து­கையில், வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­வ­தில்லை என முடிவு செய்தேன். 2005 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் வாக்­க­ளிக்­கா­ததால் தான் மகிந்த ஜனா­தி­ப­தி­யானார். 2010 ஆம் ஆண்டும் தமி­ழரின் வாக்­குகள் ஐ.தே.கவுக்கு மிகக் குறைந்­த­மையும், முஸ்­லிம்­களின் வாக்­குகள் அதி­க­ரித்­த­மை­யுமே அவரை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது. 2015 ஆம் ஆண்டு தமி­ழரும், முஸ்­லிம்­களும் ஏகோ­பித்து வழங்­கிய வாக்­கு­களே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது.

2005 ஆம் ஆண்டு தமிழர் ஜனா­தி­பதித் தேர்­தலைப் பகிஷ்­க­ரித்­த­தா­லேயே அவர்­களின் ஆயுதப் போராட்ட அர­சியல் முடி­வுக்கு வந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு எதுவும் அமை­ய­வில்லை. 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை தமிழ் பேசும் மக்கள் எதுவும் அடை­ய­வில்லை. 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்பும் கூட இற்றை வரை வீணா­கிப்­போ­னது.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 2005 ஆம், 2010 ஆம் ஆண்டு தேர்­தல்­களில் நானே தலைமை தாங்கி நடாத்­தி­யி­ருந்தேன். விகி­தா­சார அடிப்­ப­டையில் மாவட்ட ரீதியில் ரணிலும் சரத்­பொன்­சேக்­காவும் அங்கு தான் அதிக வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தனர்.

எனினும் 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் நான் மட்­டக்­க­ளப்பு மாவட்ட எம்­பி­யாக இருந்தும் கூட எந்த கட்­சிக்கும், எந்த வேட்­பா­ள­ருக்கும் வேலை செய்­யவும் இல்லை, வாக்கை அளிக்­கவும் இல்லை. சிறு­பான்­மைகள் ஒரு வேட்­பா­ள­ருக்கே ஆத­ர­வாக இருந்­ததால் நான் பெற்ற அனு­பவம் கார­ண­மாக அவ­நம்­பிக்கை ஏற்­பட்­டி­ருந்­ததே அதற்குக் கார­ண­மாகும். அதனால் தான் நிக­ழ­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நமது வாக்கைப் பெற்ற வேட்­பாளர் வென்­றாலும் கூட சிறு­பான்­மைகள் எந்த நன்­மை­யையும் பெற­மாட்­டார்கள். தோற்­று­விட்டால் நிலைமை மேலும் மோசம் என்னும் நம்­பிக்­கையே தமிழ் பேசும் பொது வேட்­பாளர் என்னும் கருத்தை நான் கூறக்­கா­ர­ண­மாக அமைந்­தது.

எல்லா ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும் உணர்ச்­சி­யாக முடி­வெ­டுத்து ஏமாந்து புது வேட்­பா­ள­ரைத்­தேடும் போக்கை விட்டும், தமிழ் பேசும் சமூகம் விடு­பட்டு, அறிவு பூர்வ முடிவை எடுக்­கவும் சிந்­த­னா­பூர்வ தலை­மை­களை வருங்­கா­லத்தில் உரு­வாக்­கவும் முன்­வ­ர­வேண்டும் எனவும் வேண்­டு­கிறேன்.

தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பொது­வா­கவும், தனித்­த­னி­யா­கவும் பல பிரச்­சி­னை­களும் அபி­லா­ஷை­களும் இருக்­கின்­றன. தமிழ், முஸ்லிம் தேசிய அர­சி­யல்­க­ளுக்கு சிங்­களப் பெருந்­தே­சிய அர­சு­க­ளோடு உடன்­ப­டவும், முரண்­ப­டவும் நிறைய விட­யங்­களும் உள்­ளன. இவற்றில் நாம் இணைந்து உறு­தி­யோடு நின்றே செயற்­பட வேண்­டி­யி­ருந்­தது என பஷீர்­ஷே­கு­தாவுத் அபிப்­பி­ரா­யப்­பட்டார்.

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் தனது 4 ஆச­னங்கள் மூலம் சந்­தி­ரிக்கா பிர­த­ம­ராக உத­வி­ய­போது அந்த ஆச­னங்­களை எதிர்­பார்த்துக் கிடைக்­காத நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியால் ஆட்சி அமைக்க முடி­யாது போயிற்று. அதன் விளை­வாக “நானா நெதுவ நோனா நே” என்­றார்கள். ஒரு முறை சேர் ­ராசிக் பரீத் கட்சி மாறி­யதால் ஆட்சி கவிழ்ந்­தது. “நானாகே தொப்­பிய ஹரிச்ச ஹரிச்ச பெத்த கட” என்­றார்கள். அது­போன்ற நிலை தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்குப் பாரிய பாதிப்­பு­க­ளையே ஏற்­ப­டுத்தும்.
ஹிஸ்­புல்லாஹ் இப்­படிக் கூறு­கின்றார். நான் யாரது முக­வ­ரா­கவும் போட்­டி­யி­ட­வில்லை. முஸ்­லிம்­களின் முக­வ­ரா­கவே போட்­டி­யி­டு­கின்றேன். இப்­போது எனது உயி­ருக்கு ஆபத்து. நான் கொல்­லப்­பட்டால் தேர்தல் சட்­டத்­தின்­படி உடனே வேறொரு வேட்­பா­ளரை நிறுத்தி இப்­பு­னித போராட்­டத்தை எம்மால் கொண்டு செல்ல முடியும். நான் எந்­நே­ரமும் படு­கொலை செய்­யப்­ப­டலாம். அதற்­காக சர்­வ­தேச சக்­தி­களின் வலைப்­பின்­னல்கள் பின் தொடர்­கின்­றன.

முஸ்லிம் சமூகம் சிந்­திக்க வேண்டும். ரவூப் ஹகீம், ரிஷாத் பதி­யுதீன் உட்­பட முஸ்லிம் அமைச்­சர்­களே உங்கள் இத­யங்கள் மீது கைகளை வைத்துச் சிந்­தி­யுங்கள். நாம் முகம் கொடுக்கும் இத்­தேர்­த­லுக்குப் பின் வரப்­போகும் காலம் எத்­தனை பயங்­க­ர­மா­னது. சகல சட்­டங்­க­ளையும் அதி­கா­ரங்­க­ளையும் பறித்து அடி­மை­க­ளாக்கத் திட்­ட­மிடும் எதி­ரிகள் இரு முகாம்­க­ளிலும் இருக்­கின்­றனர்.

அண்­மையில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவைக் கண்டு முஸ்லிம் தலை­மைகள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் பின்­வரும் தமது அபி­லா­ஷை­களை வெளி­யி­டு­மாறு கூறி­யுள்­ளன என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் குறிப்­பிட்­டுள்ளார். சஜித் பிரே­ம­தாச இவ­ரது வீட்­டுக்கும், அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் வீட்­டுக்கும், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் வீட்­டுக்கும் வந்து பேசி­ய­போது இவர்கள் பின்­வரும் கோரிக்­கை­களை அவ­ரிடம் முன்­வைத்­தார்­களாம்.

*-முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும்.
* நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாடும் நல்­லி­ணக்­கமும் காக்­கப்­பட வேண்டும்.
*நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கும் பாது­காப்­புக்கும் தீர்வு வேண்டும் என்­றார்­களாம். பின்னர் இம்­மூ­வரும் ஏ.எச்.எம்.பௌசி எம்­பியின் வீட்டில் கூடி அவ­ருடன் இணைந்து ஒரு வரை­பையும் தயா­ரித்­தார்­களாம்.
*முஸ்­லிம்­களின் பாது­காப்பு.
*முஸ்­லிம்­களின் உரி­மைகள்.
*முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை.
*முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம்.
*நாட்டின் தேசிய ஒற்­றுமை.
*இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் என்னும் விட­யங்கள். அந்த வரைபில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­னவாம். அந்த விஞ்­ஞா­பனம் அச்­சி­டப்­பட முன் ஒரு நகலைப் பார்­வைக்கு வழங்­கு­மாறும் இவர்கள் கூறி­யுள்­ளார்­களாம். பின்னர் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் உயர்­பீடம் அவ­ரது இல்­லத்தில் கூடி ஆராய்ந்தும் சஜித் பிரே­ம­தா­ச­விடம் பல விட­யங்­களை முன்­வைத்­ததாம்.
*முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை
*வடக்­கி­லி­ருந்து விரட்­டப்­பட்டு நெடுங்­கா­ல­மாக மீள் குடி­யேற முடி­யாத மக்­களின் பிரச்­சி­னைகள்
*வடக்கு, கிழக்கு கிரா­மங்­களின் எல்லைப் பிரச்­சினை.
* முஸ்­லிம்­களின் பாது­காப்பு விவ­காரம்
*முஸ்­லிம்­களின் கல்வி விடயம்
*மௌலவி ஆசி­ரியர் நிய­மனம்
*பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் என்னும் கோரிக்­கை­களை அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸின் உயர் பீடத்தின் சஜித் பிரே­ம­தா­ச­விடம் சமர்ப்­பித்­த­னராம்.
*பிக்­குகள் சட்­டத்தைக் கையில் எடுத்துச் செயற்­ப­டு­வது தடை செய்­யப்­பட வேண்டும்.
*முழு­மை­யான சட்ட அமு­லாக்கம் நாட்டில் வேண்டும்.
* சட்­டத்­திற்கு முன் யாவரும் சமம் எனக் கரு­தப்­பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்­ட­னராம். அவற்றை ஏற்று கவ­னத்திற் கொள்­வ­தாக சஜித் பிரே­ம­தாச கூறி­யதால் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளாக்­கப்­படும் என்னும் நம்­பிக்கை உண்டாம்.

முன்பு ரவூப் ஹக்­கீமின் கோரிக்­கை­களில் கொழும்பு முஸ்­லிம்­களின் விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருந்தார். அஷ்­ரபின் தனித்­துவ முஸ்லிம் சமூ­கப்­போ­ராட்­டத்­துக்கு கொழும்பு வாழ் முஸ்­லிம்­களே முது­கெ­லும்­பாக இருந்­தார்கள். அந்த வகையில் அவர் இம்­முறை நன்­றிக்­கடன் செலுத்­தி­யி­ருப்­பதைக் கண்டு அதில் ஒரு பங்­கா­ளி­யாக இருந்­தவன் என்னும் வகையில் மன­மார்ந்த நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன். எனினும் அவர் அஷ்­ரபின் அடிப்­படைக் கோரிக்­கை­க­ளான முஸ்லிம் அல­கையும் கரை­யோர மாவட்­டத்­தையும் கைவிட்­டி­ருப்­ப­துதான் வேத­னை­ய­ளிக்­கி­றது?

வடக்கு, கிழக்கில் நில அடிப்­ப­டை­யி­லான அதி­காரப் பகிர்வு செய்­யப்­ப­டு­கையில் நிலத்­தொ­டர்­பற்ற முஸ்லிம் அலகை கோர முடி­யு­மா­யினும் கரை­யோர மாவட்­டத்தை கோரா­தி­ருக்க எவ்­வித முகாந்­தி­ரமும் இல்லை. சிங்­கள மக்­க­ளுக்கு 18 மாவட்­டங்­களும் தமிழ் மக்­க­ளுக்கு 7 மாவட்­டங்­களும் என்றால் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­டமும் இல்­லா­தது ஏன்? 1949 ஆம் ஆண்டு கிழக்கில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பிர­தே­சத்தில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றத்தை நிகழ்த்­தியே அதை சிங்­கள மாவட்­ட­மாக மாற்­றி­னார்கள். அதுவே இப்­போது திகா­ம­டுல்ல என அழைக்­கப்­ப­டு­கின்­றது. அங்கு பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியே அஷ்ரப் கரையோர மாவட்டத்தைக் கோரியிருந்தார்.

1988 ஆம் ஆண்டு அவர் கோரிக்கை விட்டபின் 2000 ஆம் ஆண்டு அவர் இறந்த போதும் கிடைக்கவில்லை. தற்போது 30 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. அஷ்ரப் உருவாக்கிய கட்சியும் செய்யவில்லை அதிலிருந்து பிரிந்த கட்சியும் செய்யவில்லை. முஸ்லிம் அலகு பற்றிய விடயத்தைத் தமிழ் தரப்புடனே பேசித்தீர்த்துக்கொள்வோம்.ஏனெனில் இணைப்பின் மூலம் தான் அது சாத்தியமாகும். முஸ்லிம்களுக்கான அதிகாரப் பரவலுக்குரிய உரிமைகளை வழங்காது தமிழ்த்தரப்பால் இணைக்க முடியாது.
எனினும் தேசிய இனம் என்னும் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வதாயின் மற்ற இனங்கள் அனுபவிக்கும் சகல பாக்கியமும் முஸ்லிம்களுக்கும் கிடைத்தாகவேண்டும்.
“பேசிப் பேசி கிழவன் கட்டிலுக்கு மேல் ஏறினானாம்” என்பது போல் இருந்தது, அண்மையில் நிகழ்ந்த தொகுதி நிர்ணய செயற்பாடு. அஷ்ரப் கரையோர மாவட்டமாகக் கோரியிருந்த பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பாதி பாதி மீதிப் பகுதிகளை பிரித்தெடுத்து மூன்று சிங்களத் தேர்தல் தொகுதிகளை உருவாக்க முயன்றார்கள். 21 முஸ்லிம் எம்பிக்களுக்குப் பதிலாக, 13 முஸ்லிம் எம்.பிக்களாகக் குறைக்கப் பார்த்தார்கள். இப்போதைக்கு இவை நிகழவில்லை. முஸ்லிம்களும் பங்களித்திருக்கும் இந்த அரசிலேயே இப்படியென்றால் பேரின அரசு உருவானால் நிலை எப்படி இருக்கும்? – Vidivelli

  • ஏ.ஜே.எம்.நிழாம்

Leave A Reply

Your email address will not be published.