நாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள்

அவதானமாக இருக்க வேண்டுகோள்

0 1,569

நாட்டின் பல பகு­தி­களில் போலி உம்ரா முக­வர்கள் செயற்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்தும் முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன.

அதனால் போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள உம்ரா முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் வேண்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்து தெரி­விக்­கையில்,  திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத உம்ரா முக­வர்கள் குறித்து பொது­மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். அவ்­வா­றான முக­வர்­களால் ஏமாற்­றப்­பட்டால் அதற்கு திணைக்­களம் பொறுப்­பாக மாட்­டாது. நாட்டின் பல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் இவ்­வா­றான முக­வர்­க­ளினால் ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். அவ்­வாறு ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­யு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.

இதே­வேளை திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளாது உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும், பதிவு செய்து கொள்­ளாது இயங்கி வரும் முக­வர்கள் உட­ன­டி­யாக திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளார்கள் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

உம்ரா பய­ணத்தை திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம் பயணம் மேற்­கொள்ளும் முகவர் தொடர்பிலான விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

– ஏ.ஆர்.ஏ.பரீல் / Vidivelli

Leave A Reply

Your email address will not be published.