பல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக அஸ்வரை மட்டுமே காணமுடியும்

நினைவேந்தல் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0 1,679

பல் பரி­மா­ணங்கள் கொண்ட ஆளு­மை­யுள்ள தனி­ம­னி­த­ராக மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரை மட்­டுமே காண­மு­டியும். அவர் பல்­வே­று­பட்ட பாத்­தி­ரங்­களில் தனி­யொரு மனி­த­னாக நின்று சாதித்துக் காட்­டினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
மறைந்த ஏ.எச்.எம். அஸ்­வரின் இரண்­டா­வது நினை­வேந்தல் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு வை.எம்.எம்.ஏ. மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது, அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரை­நி­கழ்த்­திய அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்­றி­யி­ருக்­கிறார். அது­மட்­டு­மன்றி, பல்­வேறு சமூக அமைப்­பு­களில் இயங்­கு­நிலை உறுப்­பி­ன­ராக இருந்து பாரிய சமூகப் பணி­களை புரிந்­துள்ளார்.

நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கட்டும் அல்­லது பிர­த­ம­ரா­கட்டும் அவர்­களை பயன்­ப­டுத்தி சமூ­கத்­திற்கு ஆக­வேண்­டிய நன்­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் அவர் முன்­னிலை வகித்தார்.

அவரின் இறுதி­க்கால கட்­டத்தில் குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவோடு ஒரு நெருக்­க­மான உறவை பேணினார். அக்­காலம் முஸ்­லிம்­களை பொறுத்­த­வரை பல்­வேறு நெருக்­க­டிகள் நிறைந்த கால­கட்­ட­மாக இருந்­தது. அக்­கா­லத்தில் நிகழ்ந்த நெருக்­க­டி­களை பல்­வேறு சமூக மட்­டங்­களில் இருந்­த­வர்­களும் எதிர்­ம­றை­யாக அணு­கி­ய­போ­திலும், அஸ்வர் மஹிந்த ராஜபக் ஷவோடு கூட­வி­ருந்து பெரும் ஆபத்­து­க­ளி­லி­ருந்து சமூ­கத்தை பாது­காத்தார்.

கடைசி நிமி­டங்­களில் அஸ்வர் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் அவரின் அருகே தன்­னு­டைய கரங்­களை கோர்த்­த­வாறு நின்­றி­ருந்த மஹிந்த ராஜபக் ஷ மிகவும் துய­ருற்­ற­வ­ராகக் காணப்­பட்டார். தன்­னு­டைய ஆத்­மார்த்த நண்­ப­ரொ­ரு­வரை இழக்­கின்ற துர்ப்­பாக்­கி­ய­மான ஒரு சோகம் அவரின் முகத்தில் குடி­கொண்­டி­ருந்­தது.

அவ­ருடன் தொடர்பு கொண்­டி­ருந்த எல்­லோ­ருமே கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால் அவரை மிகவும் நேசித்­தனர். இலங்­கையில் தலை­சி­றந்த முஸ்லிம் தலை­வர்­க­ளாக கரு­தப்­பட்ட எம்.எச். முஹம்மட், பாக்கிர் மாக்கார், ஏ.சி.எஸ். ஹமீட் உட்­பட அனை­வ­ரு­டனும் அஸ்­வ­ருக்கு நெருக்­க­மான தொடர்­பி­ருந்­தது.

அத்­த­கை­யதொரு ஆளுமை நிறைந்த சமூகத் தலை­மையை நாம் இழந்­தி­ருக்­கிறோம். ஆட்­சி­பீ­டத்­தோடு தனக்­கி­ருந்த நெருக்­கத்தைப் பயன்படுத்திய ஆயி­ரக்­க­ணக்­கான தனி­ந­பர்­க­ளுக்கு உத­வியை பெற்றுக் கொடுத்­துள்ளார். ஆனால், அந்த மிகப்­பெ­ரிய ஆளுமை தனக்­கென்று எத­னையும் சேமித்து வைக்­க­வில்லை என்­ப­துதான் ஆச்­ச­ரியம். ஆனால் அதுவே உண்­மை­யாகும்.

அவ­ரு­டைய நண்­பர்கள் மட்­டு­மன்றி, அவ­ரது எதி­ரி­கள்­கூட அவரின் உன்­ன­த­மான நற்­பண்பை வியந்து பாராட்­டு­கின்­றனர். இத்­த­கைய பண்பு பெரும்­பா­லான அர­சி­யல்­வா­தி­க­ளிடம் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அந்த விதத்தில் அஸ்வர் உச்­ச­மான மதிப்பை எல்­லோ­ரி­டமும் பெற்­றி­ருந்தார்.
முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்த அஸ்­வரை நான் முதன்­மு­த­லாக பார்த்த அனு­ப­வ­மா­னது மறக்க இய­லா­தது. கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியில் ஷாபி மரிக்கார் தலை­மையில் இடம்­பெற்ற அகில இலங்கை கல்வி மாநாட்டுக் கூட்­டங்­களில் ஒன்­றை­யேனும் தவ­ற­வி­டாமல் ஆரம்­பத்­தி­லி­ருந்து இறு­தி­வரை கலந்து கொண்­டுள்ளார்.

இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்து அவர் சாதித்த விட­யங்கள் ஏரா­ள­மா­னவை. முஸ்லிம் சமய, கலா­சார இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­த­போது முஸ்லிம் கலை­ஞர்­களை பட்­ட­ம­ளித்து கௌர­விக்கும் விட­யங்­களை மிகச் சிறப்­பாக செய்தார்.

அவர் அதி­க­மான அமைப்­பு­களில் உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மேளனம், அகில இலங்கை முஸ்லிம் வாலி­பர்கள் சம்­மே­ளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், விளை­யாட்டு அமைப்­புகள், முஸ்லிம் கல்­விசார் அமைப்பு போன்ற பல வகை­யான அமைப்­பு­க­ளிலும் அவர் அங்கம் வகித்­துள்ளார்.

அவர் எந்த அர­சியல் கட்­சியை சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவ­ரு­டைய பின்­னணி, வர­லாறு பற்றி பக்கம் பக்­க­மாக பேச­மு­டியும். அவ்­வாறே அஸ்­வரின் பாரா­ளு­மன்ற உரை­களை எடுத்து நோக்­கினால், அவ­ரு­டைய கோட்­பா­டு­களை ஆணித்­த­ர­மாக நிறு­வு­வ­தற்­காக அல்­குர்ஆன் உட்­பட பக­வத்­கீதை, பைபிள், திரி­பீ­டக போன்ற அனைத்து மத வழி­பாட்டு நூல்­க­ளி­லி­ருந்தும் அடிக்­கோ­டிட்டுக் காட்­டுவார். தனது கருத்­து­களை மிகவும் அறி­வு­பூர்­வ­மா­கவும், கார­சா­ர­மா­கவும் முன்­வைக்கும் திறமை கொண்­டவர்.

மும்­மொ­ழி­க­ளிலும் சர­ள­மாக உரை­யா­டு­வது அவ­ருக்கு கிடைத்த பாக்­கியம். பாரா­ளு­மன்­றத்தில் பணி­பு­ரியும் ஹன்சார்ட் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களை பொறுத்­த­வரை, அஸ்வர் ஒரு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்­கி­யுள்ளார்.
ஒரு மொழியில் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென இன்­னொரு மொழிக்குள் சென்­று­வி­டுவார். இவ்­வா­றான அவ­ரது உரை­களை பாரா­ளு­மன்ற ஹன்­சார்ட்­களைப் பார்த்தால் விளங்­கிக்­கொள்­ளலாம்.

பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது தொடர்ந்தும் பேச­வி­டாமல் குழப்­பிக்­கொண்டே இருப்பார். ஆனாலும், பாரா­ளு­மன்ற கூட்ட நேரங்­களை தவிர்த்து இதர நேரங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்குள் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரஃபின் தோளில் கையை போட்­டுக்­கொண்டு ஒய்­யா­ர­மாக கதைத்­துக்­கொண்டு வருவார்.

அவ­ரு­டைய மறைவு எமது முஸ்லிம் சமூ­கமே முகம்­கொ­டுக்க நேரிட்ட இழப்­பாகும்.

ஆர­வா­ர­மில்­லாமல் சாதித்த அர­சி­யல்­வாதி என்று அவரை இனம் காணலாம். சாதா­ரண அர­சி­யல்­வா­தியைப் போல் நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பேசித் திரி­யாமல், முக்­கி­ய­மாக மூன்றாம் நப­ருக்கு எட்­டப்­ப­டாமல் காரி­யங்­களை செய்­து­மு­டிப்பார்.

நாட்டின் அதி­கா­ரங்கள் குவிந்­தி­ருந்­த­வர்­க­ளோடு நெருங்கிப் பழ­கிய கார­ணத்­தினால் எத்­த­னையோ பேரை, எத்­த­னையோ நாட்­டுக்கு ஜனா­தி­ப­தி­யிடம் இனம்­காட்டி வெளி­நாட்டுத் தூது­வ­ராக அனுப்­பு­வ­தற்கு அஸ்வர் உதவி செய்­துள்ளார். ஆனால், ஒரு­போதும் அவர் தூது­வ­ராக இருந்­த­தில்லை. இதனை அவர் ஒரு­போதும் தம்­பட்டம் போட்டுக் காட்­டி­ய­தில்லை.

ஒளிவு மறை­வில்­லாத அவ­ரது பேச்­சுக்கள் ஒரு­சி­ல­ருக்கு ஒரு­சில சந்­தர்ப்­பங்­களில் எரிச்­சலைத் தந்­தி­ருக்­கலாம். தான் சார்ந்த தரப்பை பாது­காத்து பேசு­வ­திலே அவ­ருக்கு நிகர் அவ­ரேதான். அதனை அவர் மிக நேர்த்­தி­யாகக் கையாண்டார். எமது சமூ­கத்தில் அதி­க­மா­னோ­ரிடம் சகிப்­புத்­தன்மை இல்­லா­மை­யினால் பிழை­யான கண்­ணோட்­டங்­களில் கண்டு விமர்­சிப்­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றனர்.

அவர் எமது சமூக விவ­கா­ரங்­களில் செலுத்­திய அக்கறை அளவிடமுடியாத விடயம். அதுமாத்திரமல்ல, மாசுபடியாத கரங்களை கொண்ட ஓர் அரசியல்வாதி என்றால் அஸ்வரை சுட்டிக்காட்டலாம். இதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அவர் எளிமையாக வாழ்ந்த அரசியல்வாதியாவார். எங்கும் சொத்துச் சேர்க்கும் ஆசையில்லாத ஒரு மனிதனாக வாழ்ந்தார். மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்த ஓர் அரசியல்வாதியைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்கிறோம்.

ஒருவரின் இழப்பின் பின்னர்தான் அவருடைய பெறுமதியை உணர்வார்கள். அந்தவகையில், இன்று அஸ்வருடைய நண்பர்கள் வட்டம் இவ்வாறானதொரு ஞாபகார்த்த சொற்பொழிவு நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்தமையானது பாராட்டத்தக்கது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.