தீவிரவாதம் எப்போது ஆரம்பிக்குமென எனக்குத் தெரியாது

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் ரதன தேரர்

0 863

அனைத்து தீவி­ர­வா­தி­க­ளையும் இல்­லா­தொ­ழித்து நாட்டில் சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­திய பின்பும் எப்­பொ­ழுது தீவி­ர­வாதம் ஆரம்­பிக்­கு­மென்று கூறி­விட முடி­யாது. இதனை இல்­லா­தொ­ழித்து நாட்டின் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார்

அத்­துடன், ஒரே நாடு ஒரே தேசம் என்னும் கருப்­பொ­ரு­ளுக்கு அமைய நாட்டை ஒன்­றி­ணைக்க வேண்­டு­மென்று தெரி­வித்த அத்­து­ர­லிய ரதன தேரர், நாட்­டுக்­கான ஒரு தேசிய கொள்­கையை உரு­வாக்க வேண்­டு­மென்றும் குறிப்­பிட்டார்.
ராஜ­கி­ரிய சதஹம் செவ­னவில் நேற்று ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஒன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனை குறிப்­பிட்டார். தமிழ், சிங்­கள மக்கள் தற்­போது ஒன்­றாக இணைந்­துள்ளோம் நாட்­டுக்­கான ஒரு தேசிய கொள்­கை­யினை உரு­வாக்க நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் விஜய தரணி சங்­கத்­தினை ஆரம்­பித்து உள்ளோம். வெற்­றி­யையும் நாட்டின் பாது­காப்­பி­னையும் ஏற்­ப­டுத்தி ஒரே நீதியின் கீழ் இந்த நாட்டை கொண்டு செல்­வதே எங்­களின் நோக்கம். நாட்­டுக்கு நிலை­யான வளர்ச்­சி­யொன்று அவ­சியம். அதனை நிவர்த்தி செய்யும் நோக்­கி­லேயே இந்த சங்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது

அனைத்து தீவி­ர­வா­தி­க­ளையும் இல்­லா­தொ­ழித்து நாட்டில் சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­திய பின்பும் எப்­பொ­ழுது தீவி­ர­வாதம் ஆரம்­பிக்­கு­மென்று கூறி­விட முடி­யாது. இதனை இல்­லா­தொ­ழித்து நாட்டின் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்டும். நாட்­டினை நேசிக்க கூடிய அனை­வரும் ஒன்­றி­ணைந்து பாது­காப்­பிற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்­பிட்ட அவர், நாட்டை ஒன்­று­ப­டுத்தல் தொடர்பான எமது சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.