20 வருடங்களில் 90 ஆயிரம் பேர் மதமாற்றப்பட்டு கட்டாய திருமணம்

முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார் ரத்தன தேரர்

0 863

இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமிழ், சிங்­க­ள­வர்கள் முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ர­லியே ரதன தேரர் தெரி­வித்தார். முஸ்லிம் காதி சட்­டத்தை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் திரு­மண சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் தனி­நபர் பிரே­ரணை ஒன்­றி­னையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ர­வுள்­ள­தாவும் அவர் கூறினார். 

அது­ர­லியே ரதன தேரர் மற்றும் சிங்­கள அமைப்­புக்கள் இணைந்து நேற்று கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இக் கருத்­துக்­களை முன்­வைத்தார். அவர் மேலும் கூறு­கையில்,

திரு­மண சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வர தனி நபர் யோசனை ஒன்­றினை பாரா­ளு­மன்­றத்­தி­ருக்கு கொண்டு வர­வுள்ளேன். இன்று (நேற்று) நான் பாரா­ளு­மன்­றத்தில் இதனை சமர்ப்­பித்­துள்ளேன். இன்று திரு­மண சட்டம் மூல­மாக பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த 20 ஆண்­டு­களில் 90 ஆயிரம் தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் முஸ்லிம் முறை­மைக்கு மாற்­றப்­பட்டு திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளனர். வலுக்­கட்­டா­ய­மாக இவை­யெல்லாம் இடம்­பெற்­றுள்­ளது. இதில் 97 வீதம் வற்­பு­றுத்தல் என்றே பதி­வா­கி­யுள்­ளது. இலங்­கையில் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் முறைப்­பா­டுகள் உள்­ளன. 13 வய­துக்கு மேற்­பட்ட சிறு­மிகள் திரு­மணம் செய்து கொடுக்­கப்­பட்­டுள்ள நிலை­மைகள் உள்­ளன. இது இலங்­கையில் பாரிய சமூக பிரச்­சி­னை­களை உரு­வா­க்கி­யுள்­ளது.

இவ்­வாறு மாற்றுத் திரு­மணம் செய்­துள்­ள­வர்கள் மீண்டும் விவா­க­ரத்தை செய்­து­கொண்ட நேரங்­க­ளிலும் காதி சட்­டத்தின் பிர­காரம் பிள்­ளைகள் முஸ்லிம் சமூ­கத்தில் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றனர். ஆகவே காதி நீதி­மன்றம் இன்று முஸ்லிம் மக்கள் மத்­தி­யிலும் பாரிய எதிர்ப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.

அதேபோல் தமிழ் – சிங்­கள மக்­களின் எதிர்ப்பும் அதி­க­ரித்­துள்­ளது. காதி நீதி­ப­திகள் என கூறிக்­கொண்டு சட்ட அறிவு இல்­லாத முஸ்லிம் நபர்கள் பலர் செயற்­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்தே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஆகவே இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சமூ­கத்தில் உள்ள அச்சம் கார­ண­மாக வெளியில் கூறாது உள்­ளனர்.

இலங்­கையில் 17 வயது வரையில் கட்­டாய கல்வி அவ­சியம். இவற்றை மீறி இந்த காதி சட்டம் செயற்­பட்டு வரு­கின்­றது. காதி நீதி­மன்­றங்கள் இயங்­கு­வ­தற்கும் அப்பால் பொது­வான சட்­டத்தில் அனை­வ­ரையும் ஒரே சட்­டத்தின் கீழ் கொண்­டு­வர வேண்டும். காதி சட்டம் முற்று முழு­தாக ஆண்­களின் ஆதிக்­கத்தில் மட்­டுமே இயங்­கு­கின்­றது. காதி நீதி­மன்­றத்தில் நியாயம் கேட்டுச் செல்லும் பெண்­க­ளுக்கு பாலியல் இலஞ்சம் கேட்கும் நிலைமை உள்­ள­தாக முறைப்­பா­டுகள் உள்­ளன. ஆதா­ரத்­துடன் நாம் இவற்றை நிரு­பிக்க முடியும். ஆகவே அனை­வ­ருக்கும் ஒரு சட்டம் இயங்க வேண்டும். கற்ற முஸ்லிம் சமூகம் நிச்­ச­ய­மாக இதனை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நாம் கொண்டுவரும் சட்டத்தை சகல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் முன்வைக்கவுள்ளோம்.

ஜனாதிபதியாக வருபவர்கள் இதனை தமது முதல் காரணியாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.