விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 11

இஸ்லாமியக்கிலி (Islamophobia) இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் சர்வதேச தொழிற்றுறை

0 1,126

“வர­லாற்றின் இயக்கம் நின்று விட்­டது. எதிர்­மு­னை­களின் மோதல்தான் இயக்­கத்தை (Dynamism) தீர்­மா­னிக்­கி­றது. சோவியத் யூனி­யனின் உடை­வுடன் அமெ­ரிக்­காவின் எதிர்­முனை மழுங்கி விட்­டது. ஆக வர­லாற்றின் ஓட்டம் ஸதம்­பித்து விட்­டது”. (Francis Fukayama)

இந்த மேற்கோள் 21 ஆம் நூற்­றாண்டின் அர­சியல் செல்­நெ­றியில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. பிரான்ஸிஸ் புக­யாமா ஒரு ஜப்­பா­னிய அர­சியல் சிந்­த­னை­யாளர். 1990 களின் தொடக்­கத்தில் வொஷிங்­டனில் இருந்து  வெளி­யாகும் உலகப் புகழ்மிக்க “The Foreign Affairs” சஞ்­கையில் புக­யாமா எழு­திய வார்த்­தை­களே இந்த மேற்கோள். “வர­லாற்றின் முடிவும், இறுதி மனி­தனின் தலை­வி­தியும்” (The end of History and the Destiny of the Last Man) எனும் அவ­ரது நீண்ட அர­சியல் கட்­டு­ரையில் அவர் அடிக்­கோ­டிட்டுக் காட்­டி­யது.

இந்த நீண்ட கட்­டுரை பின்­னாட்­களில் தனி நூலாக வெளி­வந்­தது. புக­யா­மாவின் நீண்ட அர­சியல் பத்­திக்கு மற்­றொரு அர­சியல் சிந்­த­னை­யா­ளரும் வெளி­யு­றவுக் கொள்கை வகுப்­பா­ள­ரு­மான சாமுவேல் பி.ஹன்­டிங்டன் (Samual P. Huntington) என்­பவர் ஒரு பதி­லுரை வழங்கிக் கொண்­டி­ருந்தார். ஹன்­டிங்­டனின் கட்­டுரை நாக­ரி­கங்­களின் மோதலும் உலக ஒழுங்கை மீள­மைத்­தலும் (Clash of Civilization and remaking of The World Order) என்­ப­தாக வெளி­யா­னது.

1990 களில் அமெ­ரிக்க– ரஷ்ய அர­சியல் வட்­டா­ரங்­களில் தீவிர விவா­தத்­திற்­குட்­பட்ட இக்­க­ருத்­தி­யல்கள் கடந்த கால் நூற்­றாண்டின் சர்­வ­தேச அர­சியல் செல் நெறியில் செறிந்த செல்­வாக்கைக் கொண்­டுள்­ளன. இன்று உலகம் முழு­வதும் விவா­திக்­கப்­படும் இஸ்­லா­மிய வெறுப்புக் கைத்­தொ­ழிலின் (Islamophobia Industry) வேர்கள் ஹன்­டிங்­டனின் நாக­ரிக மோதல் கோட்­பாட்­டினுள் புதை­யுண்­டுள்­ளன. அர­சியல் இஸ்­லாத்­திற்கும் மேலைய தீவிர வல­து­சாரி அர­சியல் மற்றும் அர­சாங்­கங்­க­ளுக்கும் இடை­யி­லான மோதல் இன்று இஸ்­லா­மியக் கிலி என்ற ஒரு புதிய பரி­மாணம் பெற்­றுள்­ளது. சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக எழுந்­துள்ள இந்தப் பூதம் எங்­கி­ருந்து கிளம்­பி­யது? ஏன் கிளம்­பி­யது? எனும் கேள்­வி­க­ளுக்கு புவி – அர­சியல் (Geo – Politics) மற்றும் அர­சியல் – பொரு­ளா­தார (Political Economy) பின் புலங்­களில் நாம் விடை காண வேண்டும். அது தான் இந்தப் பத்­தியின் பிர­தான நோக்கம்.

இஸ்­லா­மியக் கிலி  –  பதப்­பி­ர­யோகம் குறித்து

‘Islamophobia’ என்­பது 1918 ஆம் ஆண்டில் புழக்­கத்­திற்கு வந்த ஒரு சொல். இந்த பிர­யோ­கத்தில் Islam என்ற சொல்லின் விகு­தி­யாக Phobia என்ற ஆங்­கிலச் சொல் இணைக்­கப்­பட்­டுள்­ளது. போபியா என்றால் பயம், பீதி, அச்சம் எனும் கருத்தைத் தரு­கின்­றது. ஆங்­கி­லத்­தி­லுள்ள phobia என்ற சொல் கிரேக்க வேர்ச் சொல்­லான Phobos என்­ப­தி­லி­ருந்தே பிறந்­துள்­ளது. கிரேக்க மொழியில் அதன் அர்த்தம் Horror அல்­லது Terror என்­ப­தாகும்.

ஆங்­கி­லத்தில் தமி­ழைப்­போன்று “பயத்தை” குறிப்­ப­தற்கு பல சம­மான பதங்கள் உள்­ளன. Fear, Afraid, Fright, Terror, Horror என்­பன அவற்றுள் சில. Phobia என்று மேலே குறிப்­பிட்ட அத்­தனை சொற்­க­ளி­லி­ருந்தும் வேறு­பா­டான ஒரு அர்த்­தத்தைக் கொண்­டது. மேலே கூறப்­பட்ட சொற்கள் இயல்­பான அறி­வு­பூர்­வ­மான கார­ணத்­துடன் கூடிய பயங்­களைக் குறிப்­பது. ஆனால் போபியா என்ற பதம் அத்­த­கை­ய­தல்ல. ஒரு பொருள் அல்­லது நிகழ்ச்சி அல்­லது ஒரு சூழ்­நிலை குறித்து ஒரு­வ­ரிடம் எழும் அறி­வு­பூர்­வ­மற்ற (Irrational) அனா­வ­சி­ய­மான, அள­வுக்­க­தி­க­மான, எவ்­வித காரண காரிய விதிக்கும் உட்­ப­டாத பயத்­தையே இச்சொல் குறிக்­கின்­றது.

Phobia என்ற இச்­சொல்லை ‘கிலி’ என்று பெயர்ப்­பதே மிகவும் பொருத்­த­மா­னவை. ஏனெனில் பயம், அச்சம், திகில் போன்ற சொற்கள் இயற்­கை­யான மன­வெ­ழுச்­சி­களைக் குறித்து நிற்க, கிலி என்ற சொல்லே வேண்­டாத அனா­வ­சி­ய­மான அள­வுக்­க­தி­க­மான பயத்தைக் குறிக்­கின்­றது. உள­வி­யலின் தமிழ் சூழலில் Phobia என்­ப­தற்கு சமான பத­மாக ‘கிலி’ என்­பதே கையா­ளப்­ப­டு­கின்­றது.

இங்கு ஒரு நீண்ட சொல்­லியல் விளக்­க­மொன்­றிற்குள் (Etimological Concern) கட்­டு­ரை­யாளர் ஏன் செல்­கிறார் என்­பது வாச­கர்­க­ளுக்கு ஒரு நெரு­டலை எற்­ப­டுத்­தலாம். ஆயினும் சொற்­களின் அர­சி­யலைப் புரிந்துகொள்ள இந்த விளக்கம் தவிர்க்க முடி­யா­தது என்­பதை வாச­கர்கள் பின்னால் புரிந்து கொள்­வார்கள். Phobia என்­பது உண்­மையில் உள­வியல் துறை சார்ந்த ஒரு சொல்­லாகும்.

அசா­தா­ரண உள­வி­யலில் (Abnormal psychology) மன­நிலை மாறாட்­டங்­களை வகைப்­ப­டுத்­தி­யுள்ள அமெ­ரிக்க உள மருத்­துவக் கழகம் (APA) தனது வகை­யீட்டில் மனோ நிலைக்­கோ­ளா­று­களில் பத­க­ளிப்பு (Anxiety) எனும் ஒரு வகை மன­நிலை மாறாட்­டத்­தையும் இணைத்­துள்­ளது. அப்­ப­த­க­ளிப்பு மாறாட்­டத்தின் ஒரு வகையே அசா­தா­ரண, அறிவு பூர்­வ­மற்ற பயம் (Phobia) ஆகும்.

திறந்த வெளிக்­கிலி (Agoraphobia), சமூ­கக்­கிலி (Socialphobia), நீர்க்­கிலி (Hydrophobia), இருள்­கிலி (Darkphobic) என மனி­தர்­க­ளுக்கு ஏற்­படும் உள­நிலை மாறாட்டம் நூற்­றுக்­க­ணக்கில் உள்­ளன. ஒரு பொருள் அல்­லது செயல் அல்­லது சூழ்­நி­லைக்கு எந்தக் கார­ணமும் இல்­லாமல் கிலி கொள்­வ­தையே இம்­மா­றாட்டம் (Disorder) குறித்து நிற்­கின்­றது. இந்தப் பின்­பு­லத்தில் இஸ்லாம் குறித்தும் முஸ்­லிம்கள் குறித்தும் உல­க­ளவில் ஒரு வெறுப்பை அல்­லது ஒரு கிலியை ஏற்­ப­டுத்­து­வதே Islamophobia எனலாம். மக்­களின் உள்­ளங்­களில் இஸ்லாம் குறித்த ஒரு பய உணர்வை திட்­ட­மிட்டு வளர்ப்­ப­தையே இச்­சொற்­பி­ர­யோகம் குறிக்­கின்­றது.

“முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­திற்கும் எதி­ரான ஒரு வெறுப்­பையோ பயத்­தையோ, பாகு­பாட்­டையோ உரு­வாக்­கு­வ­தையே அல்­லது உரு­வா­கு­வதே இஸ்­லா­மி­யக்­கிலி” எனப் பொது­வாக வரை­ய­றுக்­கப்­ப­டு­கின்­றது. (Islamophobia is the fear, Hatred of or Prejudice against Islam or Muslims) மேலைய அச்சு ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் சம­நி­லை­யான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிலர் இதற்கு சம­மான வேறு சில பதங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். முஸ்லிம் எதிர் (Anti–Muslim), சகிப்­பின்மை (intolerence), பாகு­பாடு/ முற்­சாய்வு (Prejudice), முஸ்லிம் விரோதப் பகைமை (Anti–Muslim Bigotry), முஸ்லிம் வெறுப்பு (Hetred of Muslims), இஸ்­லா­மிய விரோதம் (Anti–Islamism), முஸ்­லிம்கள் பற்­றிய கிலி (Muslimo phobia), இஸ்­லாத்தை தரக்­கு­றை,­வாகச் சித்­தி­ரித்தல் (Demonization of Islam) என இஸ்­லாமோ போபி­யா­வுக்கு சம­மான பல பதங்­களை சிலர் கையாள்­கின்­றனர். ஆனால் Islamophobia வே மிகப் பர­வ­லாகப் பயன்­ப­டுத்­தப்­படும் பதமாகும்.

Islamophobia வின் அர­சியல் பின்­புலம்

இச்­சொல்லை முதலில் பயன்­ப­டுத்­தி­யவர் அல்­ஜீ­ரி­யாவின் அர­சியல் சிந்­த­னை­யாளர் சுலைமான் பின் இப்­றாஹீம். அவர் 1918 இல் Islamophobia என்ற பிரான்சு/ பிரெஞ்சு சொல்லைத் தனது கட்­டு­ரை­யொன்றில் கையாண்டார். Robia Richardson அதனை ஆங்­கி­லத்தில் பெயர்த்­த­போது Feeling inimical to Islam எனப் பெயர்த்தார். 1910 களில் இச்சொல் இன்னும் பலரால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பெல்­ஜியம் நாட்டைச் சேர்ந்த கீழைத்­தே­ய­வாதி Henri Lammens என்­பவர் இஸ்லாம் குறித்து வெளி­யிட்ட அத்­து­மீ­றிய குரோத உணர்வை விமர்­சிப்­ப­தற்கே சுலைமான் இச்­சொல்லைப் பயன்­ப­டுத்­தினார்.

சுலை­மா­னுக்குப் பின்னர் Alain Quelien எனும் பிரான்­ஸிய குடி­யேற்றக் கொள்கை அதி­காரி இப்­ப­தத்தை அவ­ரது கலா­நிதி ஆய்வுக் கட்­டு­ரையில் கையாண்டார். மேலைய உலகில் குறிப்­பாக அமெ­ரிக்க, பிரான்­ஸிய புலமை வட்­டா­ரங்­களில் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் குறித்த விம்பம் அல்­லது படிமம் (Image) எப்­ப­டி­யுள்­ளது என்­பதை எலைன் தனது ஆய்­வுக்­கட்­டு­ரையில் பின்­வ­ரு­மாறு எழு­து­கிறார்.

“சிலரைப் பொறுத்­த­வரை முஸ்லிம் என்­பவன் திருத்த முடி­யாத, கிறிஸ்­த­வர்­களின் எதி­ரி­யாவான். ஐரோப்­பா­வி­னதும் எதிரி ஆவான். இஸ்லாம் நாக­ரி­க­ம­டை­யாத, காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது. அது ஒரு கெட்ட விசு­வாசக் கோட்­பா­டாகும். வன்­மு­றையும் கொடூ­ரமும் அதன் உள்­ள­டக்­க­மாகும்.”

ஐரோப்­பிய, அமெ­ரிக்க ஊடகப் பரப்­பிலும் புலமை வட்­டா­ரத்­திலும் இந்தப் பதத்தைக் கையாண்­ட­வர்கள் வலது சாரி அர­சி­யல்­வா­தி­க­ளது இஸ்­லாத்­திற்­கெ­தி­ரா­னதும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரா­ன­து­மான மேற்­போந்த பிர­சா­ரங்­களைக் குறிக்­கவே இச்­சொல்லைப் பயன்­ப­டுத்­தினர். முஸ்லிம் விரோத மனப்­பான்­மை­யையும் குரோ­தத்­தையும் திட்­ட­மிட்டு வல­து­சா­ரி­களும் வெள்ளை இன­வா­தி­களும் பரப்­பு­வ­தையே நடு­நிலை அவ­தா­னிகள் இஸ்­லா­மிய கிலி (Islamo phobia) என்ற சொல்லின் மூலம் குறித்­தார்கள்.

உலக சனத்­தொ­கையில் 34 சத­வீ­த­மானோர் முஸ்­லிம்கள். 748 கோடி உலக மக்­களில் சுமார் 200 கோடிப் பேர் முஸ்­லிம்கள். ஆக 500 கோடி முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் நன­விலி மனதில் (Unconsciesness Mind) முஸ்­லி­மைப்­பற்­றியும் இஸ்­லாத்­தைப்­பற்­றியும் பதிக்­கப்­படும் வெறுப்பும் வேண்­டத்­த­காத கிலியும் தான் இஸ்­லாமோ போபியா என தாரிக் ரமழான் குறிப்­பி­டு­கிறார்.

இஸ்­லா­மியக் கிலி இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் குறித்த அறி­யா­மையின் வெளிப்­பா­டல்ல. மாறாக, அர­சியல் நோக்­கத்­திற்­காகப் பயன்­ப­டுத்­தப்­படும் ஒன்­றா­கவே அது உள்­ள­தென்­கிறார் ரமழான். முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் அனைத்து நாடு­க­ளி­லும்போல் முஸ்லிம் விரோதப் பிர­சா­ரங்­களும் இஸ்லாம் குறித்த அச்­ச­மூட்­டல்­களும் பல்­வேறு வழி­களில் திட்­ட­மிட்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இன்று Islamophobia ஒரு கற்கைப் புல­மாக (Acadamic Course) மாறி­வ­ரு­கின்­றது. ஒக்ஸ்போர்ட் அக­ராதி 1924 லேயே இந்தச் சொல்லை தன்னில் இணைத்­தது.

உலகின் முன்­னணிப் பல்­க­லைக்­க­ழ­கங்கள் எனக் கரு­தப்­படும் கேம்­பிறிட்ஜ், ஒக்ஸ்போர்ட், நியூயோர்க், சோபோன், மொனாஷ் என்­ப­வற்றில் Islamophobia கலா­நிதி கற்­கைப்­புல ஆய்வுக் கருப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. கல்­விப்­பு­லங்­களில் இது விரி­வாக விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அர­சியல் களத்தில் உலகம் முழு­வதும் முஸ்லிம் சிறு­பான்மை மக்கள் இந்தப் பெரும் சவாலை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். காஷ்மீர், மியன்மார், இலங்கை உள்­ளிட்ட லண்டன், பாரிஸ் வழி­யாக நியுயோர்க், டொரன்ரோ வரை பூகோள மயப்­பட்ட ஒரு விரிந்த வலை­ய­மைப்­புடன் Islamophobia  இன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

Islamophobia வை பலரும் பல்­வேறு வரை­வி­லக்­க­ணங்­களின் ஊடே விளக்­கி­யுள்­ளனர்.  மேலை நாடு­களில் வாழும் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக வல­து­சாரி அர­சி­யல்­வா­திகள் கட்­ட­மைக்கும் இன­வா­தமே (Racism) இஸ்­லா­மியக் கிலி என்­கிறார் கலா­நிதி தாரிக் ரமழான்.

Gabriel Maranci எனும் பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர் இஸ்­லாமோ போபியா என்­பது கலா­சார பன்­மைத்­துவம் குறித்த போபியா எனவும் ஐரோப்­பாவில் இஸ்லாம் ஏற்­ப­டுத்­தி­வரும் தாக்கம் பற்­றிய ஒரு எதிர்­மு­க­மான படிமம் எனவும் அதனை வரை­ய­றுக்­கிறார்.

சான் பிரான்­ஸிஸ்கோ பல்­க­லைக்­க­ழக இனத்­துவ ஆய்வு மையத்தின் பேரா­சி­ரியர் றபாப் இப்­றாஹிம் அப்துல் ஹாதியின் கருத்தில் “இஸ்­லாமோ போபியா நிறு­வ­ன­ம­யப்­பட்ட கட்­ட­மைப்­பினைக் கொண்ட சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான போராகும். முஸ்லிம், முஸ்லிம் விவ­கா­ரத்தைப் பேசு­பவன், முஸ்லிம் உரி­மைக்­காகக் குரல் கொடுப்­பவன் என்­போரை அது திட்­ட­மிட்டே இலக்கு வைக்­கி­றது. அது திட்­ட­மிட்ட இன­வாதம் மற்றும் இன­வாதப் பாகு­பாடு” என்­கிறார்.

நவீன இஸ்­லா­மிய வெறுப்பும் கிலியும் ஐரோப்­பிய கிறிஸ்­த­வர்கள், முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக கொண்­டி­ருந்த வர­லாற்று குரோத மனப்­பாங்­குடன் பிணைந்­துள்­ளது என்­கிறார் Tomez Mastnak எனும் ஐரோப்­பிய ஆய்­வ­றி­வாளர். அவ­ரது வார்த்­தை­யி­லேயே சொல்­வ­தாயின் Modern Islamophobia originated from historical Trajectory, Stemming from anti –- Muslim Sentiment held by European Christianity)

Islamophobia என்­பது (Xenophobia)விற்கு சம­மா­னது என்­பது வேறு சில ஆய்­வா­ளர்­களின் கருத்து. சென­போ­பியா என்­பது பிற நாட்டு மக்கள் மீதான வெறுப்பு அல்­லது அவர்கள் குறித்து கட்­ட­மைக்­கப்­படும் பீதி எனப் பொருள்­ப­டு­கின்­றது. உள்­நாட்டு மக்கள் வெளி­நாட்­ட­வர்கள் இடம்­பெ­ய­ரும்­போது அல்­லது அக­தி­க­ளாக குடி­யே­றும்­போது அவர்கள் தொடர்பில் அர­சு­க­ளாலும் உள்ளூர் வல­து­சாரிக் கட்­சி­க­ளாலும் ஒரு செயற்­கை­யான பயப்­பீதி மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது.

அமெ­ரிக்க தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது இன்­றைய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கைக்­கொண்ட அர­சியல் உத்­தி­களில் ஒன்று Xenophobia. தென் அமெ­ரிக்க மக்கள் குறிப்­பாக மெக்­ஸிகோ நாட்­ட­வர்கள் எல்­லைப்­பு­ற­மாக அமெ­ரிக்­கா­வினுள் புலம்­பெ­யர்­வது அமெ­ரிக்கப் பொரு­ளா­தா­ரத்­தையும் நிலப்­பி­ரச்­சி­னை­யையும் மென்­மேலும் கூர்­மைப்­ப­டுத்தும் எனவும் அதனால் அவர்­க­ளது ஊடு­ரு­வலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் பிர­சாரம் செய்தார். தற்­போது அந்த செயற்­திட்­டத்தை அமு­லாக்கும் வேலையில் கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் அவர் ஈடு­பட்டு வரு­கிறார்.

அமெ­ரிக்க – மெக்­ஸிக்கோ எல்லைச் சுவர் 1600Km ஐ கட்டி முடிக்க 10,000 வேலை­யாட்­களும் 10 ஆண்­டு­களும் 5.7 பில்­லிய அமெ­ரிக்க டொலர்­களும் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. முதற்­கட்­ட­மாக 370Km ஐ கட்டி முடிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நவீன உலக வர­லாற்றில் இத்­த­கைய நகைப்­புக்­கி­ட­மான பைத்­தி­யக்­கா­ரத்­தனம் மேற்குக் கரை­யிலும் அமெ­ரிக்­கா­விலும் அரங்­கே­றி­வ­ரு­கின்­றது. இது அப்­பட்­ட­மான இன­வாதம் மட்­டு­மன்றி அக­திகள் குறித்த சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை மீறும் நட­வ­டிக்­கை­யாகும்.

Islamophobia வின் பரவல் மற்றும் அது வேக­மாக சந்­தைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை நோக்கும்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமே அது எதிரானது எனும் கருத்தை ஏற்க முடியாதுள்ளது என்கிறார் ஸீனத் கொஸர்.

ஏனெனில், அது அறபு இஸ்லாமிய நாடுகளில் நிலவும் மன்னராட்சி மற்றும் மதச் சார்பற்ற இராணுவ அதிகாரபீடங்களுக்குப் பதிலீடாக உருவாகி வரும் ஜனநாயக  எழுச்சிக்கு எதிராகவும் திருப்பப்பட்டுள்ளது என்கிறார் அவர். அறபு முஸ்லிம் நாடுகளில் தாராளவாத ஜனநாயகம் (liberal Democracy) தோற்றம் பெறுவதை மேலைய அரசுகளும் அவற்றின் கையிலுள்ள ஊடகங்களும் ஏன் அச்சுறுத்தலாகக் காண்பிக்க முயல்கின்றன?  இது மிக சீரியஸாகப் பார்க்கப்பட வேண்டிய ஒரு கோணமாகும்.

இஸ்லாம் பௌதீக அதீத நம்பிக்கையுடனும் (Meta – Physics) – இறைவன், மறுமை, சுவர்க்கம்/ நரகம் தொடர்பான என்ற ஒரே காரணத்திற்காக அதனை மத்திய கால கிறிஸ்தவ மதத்திற்கு நிகராக்கி மத்திய காலாத்தில் நிலவிய தெய்வீக ஆட்சி முறை (Theocracy) யையே ஊக்குவிக்கிறார்கள் என்பதை ஒத்த ஒரு கருத்தியலை Islamophobia ஊடாக இத்தகையோர் கட்டமைக்க விழைகின்றனர். இது சிவில் அரச முறையும் ஜனநாயகப் பெறுமானங்களும் அறபு முஸ்லிம் உலகில் தோன்றுவதற்கு பெரும் தடையாகவுள்ளன என்பதுதான் கௌஸர் போன்றோரின் வாதமாகும். (Islamophobia is a phobia of a new  Geo – Political force) என்பதே அவரது கருத்து.

 

Leave A Reply

Your email address will not be published.