எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு

0 890

நாடு தற்­போது முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­களை இன்னும் அதி­க­ரிப்­ப­தா­கவே ஜனா­தி­பதித் தேர்தல் அமையப் போகின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்­றியைப் பெற்­ற­போ­திலும் நாடு தற்­போது முகம் கொடுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முடி­யாத நிலையே ஏற்­ப­டப்­போ­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறும் தமது அபேட்­சகர் பெயர்கள் வெளி­யி­டப்­பட்ட நிலையில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது தி­ருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விதி­மு­றை­க­ளுக்­க­மைய ஜனா­தி­பதி என்­பது ஒரு பெய­ர­ளவுப் பத­வி­யா­கவும் அரசு சார்ந்த அனைத்து அதி­கா­ரங்­களும் பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை வசம் இருக்கும் விதத்­தி­லேயே அமையப் போகின்­றது.

ஜனா­தி­பதி என்­பவர் மக்­களின் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்றார் என்ற கார­ணத்­தி­னாலும் ஜனா­தி­பதி ஒரு கட்­சியைச் சார்ந்­த­வ­ரா­கவும், பிர­தமர் உள்­ளிட்ட அமைச்­ச­ரவை வேறு ஒரு கட்­சியைச் சார்ந்­த­தா­கவும் தெரி­வா­கு­மாயின் ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்கம் என்­ப­வற்­றுக்­கி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்டு, அதன் விளை­வாக முழு அர­சி­ய­ல­மைப்­பையும் நகைப்­புக்­குள்­ளாக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமை­யலாம்.

இலங்கை தற்­போது முகங்­கொ­டுக்­கின்ற பிரச்­சி­னை­களின் தன்­மை­களை கீழ்­வ­ரு­மாறு அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

1. ஊழ­லினால் மாசு­பட்டு நாச­கார தாக்­கு­தல்கள் மூல­மாக பல­வீ­ன­மான நிலை­யிலும் செயற்­படும் சக்­தியை இழந்த நிலை­யி­லுமே இன்­றைய அர­சாங்கம் காணப்­ப­டு­கின்­றது.

2. சாதி, குல, மத பேதங்கள் கார­ண­மாக உரு­வான கல­வ­ரங்கள், சண்­டைகள் மூல­மாக பிரி­வி­னைக்­குட்­பட்ட நிலை­யி­லேயே இன்­றைய சமூகம் காணப்­ப­டு­கின்­றது.

3. எப்­போது வேண்­டு­மா­னாலும் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­து­வி­டலாம் என்ற பாத­க­மான நிலை­யி­லேயே நாட்டின் பொரு­ளா­தாரம் காணப்­ப­டு­கின்­றது. புதிய ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­பட்­டதும் இது­வ­ரை­கா­லமும் ஜனா­தி­பதி வச­மி­ருந்த நாட்டின் ஆட்சி அதி­கா­ர­மா­னது பாரா­ளு­மன்­றத்­திற்கு கிடைக்கப் பெற­வி­ருக்­கின்­றது. எனினும், இவ்­வா­றான ஒரு பாரிய பொறுப்பை ஏற்­ப­தற்கு எந்த விதத்­திலும் பொருத்­த­மில்­லா­த­ததும் ஊழல் நிறைந்த நிலை­யி­லுமே இன்­றைய பாரா­ளு­மன்றம் இருக்­கின்­றது என்­பது துர­திஷ்­ட­வ­ச­மான நிலை­யாகும்.

கிராம மக்­களின் வாழ்க்கை முறை

கிரா­மிய மக்­களின் வழ்க்­கைத்­தரம் மிகவும் பரி­தா­ப­க­ர­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. மிக அண்­மைக்­காலம் வரை இலங்­கையின் தெற்குப் பகு­தியின் கிரா­மங்­களில் வசிப்­ப­வர்­களின் பிர­தான வரு­மா­ன­மீட்டும் முறை­யாக சிறு தேயிலைத் தோட்­டங்கள் காணப்­பட்டு வந்­தன.

“ஹினி­தும” போன்ற கஷ்டப் பிர­தே­சங்­களில் கூட சிறு தேயிலைத் தோட்­டங்­களை வைத்­தி­ருக்கும் விவ­சா­யி­களின் பொரு­ளா­தார மட்­ட­மா­னது அந்தப் பகு­தியில் வேறு பயிர்ச் செய்­கை­களை மேற்­கொள்ளும் விவ­சா­யி­களின் பொரு­ளா­தார மட்­டத்­திலும் பார்க்க உயர்ந்த மட்­டத்­தி­லேயே காணப்­பட்­டன. மின்­சாரம் இல்­லாத பிர­தேச விவ­சா­யி­களின் வீடு­களில் ஜென­ரேட்­டர்கள் காணப்­பட்­டன. இன்­றைய காலப்­ப­கு­தியில் சிறு தேயிலைத் தோட்ட விவ­சா­யி­க­ளது நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

காலி­யி­லி­ருந்து பத்­தே­கம வரை­யான தூரம் 19 கிலோ மீற்­றர்­க­ளாகும். கீம்­பிய தொடக்கம் பத்­தே­கம வரையில் 7 தேயிலைத் தொழிற்­சா­லைகள் காணப்­பட்­டன. அவற்றில் 06 தொழிற்­சா­லைகள் இன்­ற­ளவில் மூடப்­பட்­டுள்­ள­துடன் மிகு­தி­யாக இருக்கும் ஒரே ஒரு தொழிற்­சாலை மிகுந்த சிர­மத்­துடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

தேயி­லையின் விலையில் ஏற்­பட்­டி­ருக்கும் வீழ்ச்சி, தேயிலைத் தொழிற்­சா­லை­க­ளுக்கு இது­வரை காலமும் அற­வி­டப்­பட்டு வந்த பொரு­ளா­தார சேவைகள் வரி­யினை இரட்­டிப்­பாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஏற்­பட்ட அழுத்­தங்கள், வங்கிக் கடன்­க­ளுக்­கான வட்டி வீதம் இரட்­டிப்­பாக்­க­ப்­பட்­டமை, தொழி­லா­ளர்கள் தட்­டுப்­பாடு, கிளை­போசெட் தடை செய்­யப்­பட்­டமை, தேயிலை மீள் ஏற்­று­மதிக் கொள்ளை போன்ற கார­ணிகள் சிறிய தேயிலைத் தோட்ட உரி­மை­யா­ளர்­களின் வாழ்­வா­தா­ரங்கள் மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த தேயிலை தொழிற்­சா­லை­களின் இருப்­புக்கே பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின

கறுவா மற்றும் மிளகு பயி­ரிடும் விவ­சா­யி­களின் நிலை­மை­கூட இது போன்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மீள் ஏற்­று­மதி முறையின் கீழ், தரத்தில் குறைந்த கறுவா மற்றும் மிளகு என்­பன இறக்­கு­மதி செய்­யப்­பட்டு அவற்­றுடன் இலங்­கையில் விளையும் கறுவா, மிளகு என்­ப­வற்றை கலந்து ஏற்­று­மதி செய்­த­தன் கார­ண­மாக கறுவா, மிளகு என்­ப­வற்­றுக்­கான விலை வீழ்ச்­சி­கண்­டது. இதன் விளைவு கறுவா மற்றும் மிளகு பயி­ரிடும் விவ­சா­யி­களை நேர­டி­யா­கவே பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யது. இலங்­கையின் இறப்பர் தோட்­டங்­கள்­கூட கைவி­டப்­படும் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

இறக்­கு­மதி செய்­யப்­படும் இறப்­பரின் விலை இலங்­கை­யி­லி­ருக்கும் இறப்­பரின் விலை­யிலும் குறை­வென்­பதால் உற்­பத்­திச்­சா­லைகள் இலங்கை இறப்­பரை வாங்­காமல் வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யும் இறப்­ப­ரையே உற்­பத்­தி­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­கின்­றன.

கால் போன போக்கில் பய­ணித்தல்

நெற் பயிர்ச்­செய்கை கூட மோச­மா­ன­தொரு நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. நெல் பயி­ரா­னது இலங்­கையின் பிர­தான ஒரு பயிர்ச் செய்­கை­யாக கரு­தப்­பட்ட போதிலும் மற்­றைய அனைத்து பயிர்ச் செய்­கை­யிலும் பார்க்க மிகவும் குறைந்­த­ள­வி­லான வரு­மா­னத்­தையே நெற்­பயிர்ச் செய்கை ஊடாக விவ­சா­யி­களால் ஈட்­டிக்­கொள்ள முடி­கின்­றது. நெல் பயி­ரிடும் விவ­சாயி ஒரு­வ­ருக்கு அதிஷ்டம் இருக்­கு­மாயின் ஒரு போகத்தில் ஒரு ஏக்கர் வயல் நிலத்­தி­லி­ருந்து ரூ 40,000 அளவில் வரு­மானம் ஒன்றைப் பெற்­றுக்­கொள்­ளலாம். ஊழியர் பற்­றாக்­கு­றை­யா­னது நெற்­செய்­கையில் பிர­தா­ன­மான பிரச்­சி­னை­யாகக் காணப்­ப­டு­வ­துடன் அறு­வடை காலங்­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து ஊழி­யர்­களை அழைத்­து­வர வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஈர­வ­ல­யங்­களில் அதி­க­ள­வி­லான வயல் நிலங்கள் பயி­ர­டப்­ப­டாமல் கைவி­டப்­படும் நிலைக்­குள்­ளா­கி­யி­ருக்­கின்­றன.

கைவிடும் நிலையில் இருக்கும் வயல் நிலங்­களில் வேறு­வ­கை­யான பயிர்ச் செய்­கை­களை மேற்­கொள்­வ­த­ற­கான வாய்ப்­புகள் இருந்த போதிலும் வயல் நிலங்கள் தொடர்­பான இறுக்­க­மான சட்­டங்கள் கார­ண­மாக ஈர வலயப் பிர­தே­சங்­களில் எந்தப் பயிர்ச் செய்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டாமல் ஆயிரக் கணக்­கி­லான ஏக்கர் அளவில் வயல் நிலங்கள் எந்த வரு­மானமும் பெறப்­ப­டாமல் கைவி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன.

கடந்த சில தசாப்­தங்­க­ளாக விவ­சாய நிலங்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்தும் வன­வி­லங்­கு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டாமல் அவை பல்கிப் பெரு­கு­வ­தற்கு இட­ம­ளித்து வேடிக்கை பார்க்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை கார­ண­மாக பாரிய எண்­ணிக்­கை­க­ளாக அதி­க­ரித்­தி­ருக்கும் விலங்­குகள் விவ­சாய நிலங்­க­ளுக்குப் பாரி­ய­ள­வி­லான சேதங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. அர­சாங்­கத்தின் கணக்­கெ­டுப்­பு­க­ளுக்கு அமைய மொத்த விவ­சாய உற்­பத்­தி­களில் 30 வீதத்­திலும் அதி­க­மான விவ­சாய உற்­பத்­திகள் வன விலங்­குகள் மூல­மாக அழிக்­கப்­ப­டு­கின்­றன எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. பொது­வாக நாடொன்றில் வன­வி­லங்­கு­க­ளினால் விவ­சாய உற்­பத்­தி­க­ளுக்கு ஏற்­படும் அழி­வுகள் 10 வீதத்­திலும் குறை­வான அள­வி­லேயே இருக்க வேண்டும். எமது நாட்டில் காணப்­படும் நிலை­யா­னது நாட்டின் தேசிய பொரு­ளா­தா­ரத்தை நேர­டி­யாகப் பாதிப்­ப­துடன் விவ­சா­யிகள் ஈட்­டு­கின்ற வரு­மா­னத்தின் அளவில் குறைவு ஏற்­ப­டு­வ­தற்­கா­கவும் நேரடித் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கிராமப் பெண்­க­ளுக்­காக பிணை­க­ளின்றிக் கடன் வழங்­கு­வ­தற்­காக (மைக்ரோ) நுண் நிதி நிறு­வ­னங்­க­ளினால் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கடன் திட்­டங்கள் பகல் கொள்ளை வகை­ய­றா­வாகக் குறிப்­பி்­டலாம். தாம் பெற்றுக் கொண்ட தவணைக் கடன் தொகை­யையும் அதற்­கான வட்­டி­யையும் திரும்பச் செலுத்த முடி­யாமல் தற்­கொலை செய்­து­கொண்ட பெண்­களின் தொகை 150 விட அதிகம் என்­ப­தாகக் குறிப்­பிப்­ப­டு­கின்­றது. சிகரட், மது­பானம் என்­ப­வற்­றுக்­கான அதிக விலை­யேற்றம் கார­ண­மாக கசிப்பு மற்றும் பீடி போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­து­வ­தற்கு தங்­களை பழக்­கப்­ப­டு­த­திக்­கொள்ளும்; கிராம மக்­களின் தொகை பாரிய அள­வாக உயர்ந்­து­வ­ரு­கின்­றது. ஒரு தீய­ப­ழக்­கத்­தினை ஒழிப்­ப­தற்­காக மேற்­கொண்ட முயற்சி அத­னை­விடப் பார­தூ­ர­மான தீய பழக்கம் ஒன்று உரு­வாக கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

காணி கொள்­ளை­யிடல்

கிரா­மிய சமூ­கத்­திடம் காணப்­ப­டு­கின்ற இந்த பரி­தா­ப­க­ர­மான நிலை அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் பாரிய வீழ்ச்சி நிலை மற்றும் அழுகல் நிலை என்­ப­ன­வற்றின் கார­ண­மா­கவே ஏற்­பட்­டி­ருக்க வேண்டும். கடந்த சில தசாப்­தங்­க­ளாக நாட்டின் அனைத்து விட­யங்­களும் அரசின் முறை­யான வழி­காட்­டல்­களோ கட்­டுப்­பா­டு­களோ இல்­லாத நிலை­யி­லேயே நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. இதனைத் தோல்­வி­ய­டைந்த ஒரு தேசத்­திற்­கான அடிப்­படைப் பண்­பு­களில் ஒன்­றாக குறிப்­பிட முடியும்.

வர்த்­தகப் பயிர்ச் செய்­கைகள் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பொக்­கி­ஷ­மாகக் கரு­த­மு­டியும். பிரித்­தா­னிய காலம் முதல் 1970 ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்­டங்­களை அர­சாங்கம் தன்­வசம் சுவீ­க­ரித்துக் கொண்ட காலம் வரை இலங்கை உல­க­ளவில் சிறந்த தேயிலை உற்­பத்தி செய்யும் நாடு என்ற அந்­தஸ்தைப் பெற்­றி­ருந்­தது. தேயிலை உள்­ளிட்ட வர்த்­தகப் பயிர்ச் செய்­கைகள் அனைத்­துமே போது­மா­ன­ளவு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்டித் தரு­கின்ற பிர­தான ஏற்­று­மதிப் பண்­டங்­க­ளா­கவே இருந்­து­வந்­தன.

வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­த­மான தேயிலைத் தோட்­டங்­களை அர­சு­ட­மை­யாக்கல் மற்றும் காணிக் கட்­டுப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தேயிலைத் தோட்­டங்கள் அர­சு­ட­மை­யாக சுவீ­க­ரிக்­கப்­பட்ட பின்னர், இலங்­கையில் வர்த்­தகம் சார்ந்த பாரிய பின்­ன­டைவு ஆரம்­ப­மா­னது என்­ப­தாகக் குறிப்­பி­டலாம். இந்த இரண்டு முறைகள் ஊடா­கவும் அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட மொத்தக் காணி­களின் அளவு ஒரு மில்­லியன் ஏக்­கர்­க­ளிலும் அதி­க­மாகும். சுவீ­க­ரிக்­கப்­பட்ட தோட்­டங்­களை வெற்­றி­க­ர­மாகப் பரா­ம­ரிப்­ப­தற்­கான திட்­டங்கள் எதுவும் அர­சிடம் காணப்­ப­ட­வில்லை. தோட்ட முகாமை குறித்த அடிப்­படை அறிவு, துளி­கூட இல்­லாத ஆளும் கட்சி அர­சி­யல்­வா­தி­களே இவ்­வாறு சுவீ­க­ரிக்­கப்­பட்ட தோட்­டங்­களின் முதல் நிர்­வா­கி­க­ளாக நிய­மிக்­கப்­ப­பட்­டனர். அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட இந்த தோட்டங்­களில் குறித்த ஒரு பாரிய பகுதி 1977 ஆம் ஆண்­டு­களின் பின்னர் ஆளும் கட்சி அர­சி­யல்­வா­தி­களும் அவர்­க­ளது உற்ற நண்­பர்­களும் மிகவும் குறைந்த தொகைக்கு கொள்­வ­னவு செய்­யப்­பட்டு தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக தங்­களை ஆக்­கிக்­கொண்­டனர். பிரித்­தா­னியா இலங்­கையை ஆக்­கி­ர­மித்த போது தேயிலைத் தோட்ட பயிர்­செய்­கையின் ஆரம்­ப­கட்­டத்தில் பிரித்­தா­னி­யர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட காணிக் கொள்­ளை­யி­ட­லுக்கு ஒப்­பா­ன­தாக அர­சி­யல்­வா­தி­களின் காணிக் கொள்­ளை­யிடல் நட­வ­டிக்­கை­களைக் குறிப்­பி­டலாம்.

இந்த கொள்­ளை­ய­டித்தல் நட­வ­டிக்­கையின் பின்னர் மீத­மாக இருந்த தோட்­டங்­களில் பாரிய ஒரு பகுதி ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ச­வினால் தனியார் நிறு­வனங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. அவ்­வாறு தேயிலைத் தோட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்ட தனியார் நிறு­வ­னங்கள் குறித்த தோட்­டங்­களின் வெளித் தோற்­றத்­தினை அழகு படுத்­தி­யதே தவிர தேயிலை உற்­பத்தித் தரத்தைப் பேணு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை. இந்த நட­வ­டிக்­கை­களின் பிர­தி­ப­ல­னாக உலக சந்­தையில் இலங்கைத் தேயி­லைக்கு இருந்­து­வந்த அங்­கீ­காரம் குறை­வ­டையத் துவங்­கி­யது. அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் குறித்த நிறு­வ­னங்கள் அதிக இலா­ப­மீட்டும் நோக்கில் தேயிலை உற்­பத்தி செய்யும் போது அத­னுடன் சீனியைக் கலந்­து­விட்­டதன் கார­ண­மாக தற்­போ­த­ளவில் இலங்கைத் தேயி­லைக்­கான அங்­கீ­காரம் மிகவும் மோச­மான அளவில் குறைந்­தி­ருக்­கின்­றது. ஏற்­று­மதிப் பொருட்­களின் தர நிர்­ணயம் குறித்த பொறுப்பு அர­சி­டமே காணப்­ப­டு­கின்­றது. தோட்­டத்­துறை சம்­பந்­த­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­க­வென அமைச்சு ஒன்றும் விட­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக அமைச்சர் ஒவ­ருடன் பாரிய அதி­கா­ரிகள் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவைகள் அனைத்­தையும் பரி­பா­லனம் செய்­வ­தற்­காக அரச நிதியில் ஒரு பகு­தியும் செல­வி­டப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான ஏற்­பா­டுகள் அனைத்தும் மேற்­கொள்­ளப்­பட்ட நிலை­யிலும் வர்த்­தகத் துறையில் இலங்­கையின் தோட்­டத்­துறை பின்­தங்­கிய நிலையில் இருப்­ப­தா­னதன் ஊடாக இலங்கை அரசு தோல்வி கண்­டுள்­ளது என்­பது நிரூ­ப­ண­மா­கின்­ற­தல்­லவா?

தோல்­வி­ய­டைந்­துள்ள அரசு

இலங்கை அரசு அடைந்­தி­ருக்கும் தோல்வி குறித்து கிரா­மிய விவ­சாயம் மற்றும் மக்­க­ளி­னது வாழ்க்­கை­த்­தரம் என்­பன அடைந்­தி­ருக்கும் வீழ்ச்­சியின் ஊடாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

மீள் ஏற்­று­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­திரம் விநி­யோ­கிக்­கும்­போது இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற பொருட்கள் மற்றும் அத­னுடன் கலக்­கப்­பட்டு ஏற்­று­ம­திக்­காக உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்ற பொருட்கள் தொடர்­பா­கவும் அவை இலங்­கையின் ஏற்­று­மதித் துறைக்கு ஏற்­ப­டுத்­த­வி­ருக்கும் விளை­வு­களின் சாதக பாதக தன்மை குறித்தும் ஆராய்ந்து பாராமல் மீள் ஏற்­று­ம­தி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்­பது இதன் ஊடாக தெளி­வாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

இலங்­கையின் குப்பை பிரச்­சி­னைக்கு முறை­யான தீர்­வு­கா­ணப்­ப­டாமல் பாரி­ய­தொரு பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்கும் நிலையில் வெளி­நாட்டுக் குப்­பை­களை இறக்­கு­மதி செய்து அவற்றை மீள் ஏற்­று­மதி செய்­வ­தற்­காக அனு­மதிப் பத்­தி­ரங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை தம்­மிக பெரேரா தொடர்­பான நிகழ்வு ஊடாகப் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. மேற்­படி குப்­பைகள் மீள் ஏற்­று­ம­திக்­காக இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வில்லை. அவை­களை இலங்­கையின் குப்­பை­க­ளுடன் சேர்த்து விட்டு அதன் ஊடாக இலாபம் ஈட்­டிக்­கொள்ளும் நோக்­கி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பதை புரிந்­து­கொள்­வது கடி­ன­மா­ன­தொரு விட­ய­மல்ல. இது நாட்­டிற்குப் பாரிய பல பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தத்­தக்க விட­ய­மாக இருந்த போதிலும், மேற்­படி தவ­று­களை சரி­செய்­வ­தற்­கான உரிய மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அரசு தோல்­வி­ய­டைந்த நிலையில் இருப்­ப­தனை இந்த சம்­பவம் கூட எடுத்­துக்­காட்டி நிற்­கின்­றது. கறுவா, மிளகு மீள் ஏற்­று­மதி கொள்கை ஊடா­கவும் இந்த விடயம் நிரூ­ப­ண­மா­கின்­றது.

உல­கி­லேயே மிகச்­சி­றந்த கறுவா இலங்­கை­யி­லேயே கிடைக்­கின்­றது. இயற்­கையின் அருட்­கொ­டை­யாக இலங்­கையின் கறுவா வகை­க­ளுக்­காக கிடைக்கப் பெற்­றி­ருக்கும் இந்த சிறப்­பி­யல்பைப் பயன்­ப­டுத்தி கறுவா ஊடாக நாட்­டுக்கு பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய வரு­மா­னங்­களை பெற்­றுக்­கொள்­வதில் இலங்கை தோல்வி கண்­டுள்­ளது. அது­மாத்­தி­ர­மன்றி இலங்கை கறு­வா­விற்கு இருக்கும் விசேட அங்­கீ­கா­ரத்­தினை போக்­கு­வ­தற்கு இலங்­கையின் அரசின் கறுவா தொடர்­பி­லான கொள்­கை­களே கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன. மிளகு தொடர்­பிலும் இதே விட­யத்­தையே குறிப்­பிட வேண்­டி­யி­ருக்­கின்­றது.
இலங்­கையின் விவ­சாய நிலங்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்தும் வன விலங்­குகள் தொடர்பில் அர­சாங்கம் நீண்­ட­கா­ல­மாக கடைப்­பி­டித்­து­வரும் முட்­டாள்­த­ன­மான கொள்­கைகள் தொடர்­பிலும், அந்தக் கொள்­கைகள் ஊடாக விவ­சா­யத்­து­றைக்கு ஏற்­பட்­டி­ருக்கும் பாதிப்­புக்கள் தொடர்­பிலும் பார்க்­கும்­போது இலங்கை அரசின் தோல்­வி­ய­டைந்த தன்மை உறுதி செய்­வ­தற்­காக முன்­வைக்க முடி­யு­மான நூற்­றுக்­க­ணக்­கான சான்­று­களில் இதுவும் ஒன்று என்­ப­தாக கூற­மு­டி­கின்­றது.

கிளை­போசெட் தொடர்பில் மேற்­கொண்ட தான்­தோன்றித் தன­மான கொள்­கைகள் ஊடா­கவும் இதே தன்­மையே தெளி­வா­கின்­றது. விவ­சாயத் திணைக்­க­ளத்தின் விவ­சாய விஞ்­ஞா­னி­களின் பரிந்­து­ரை­க­ளுக்கு இசை­வாக அரசு கிளை­போ­செட்­டிற்குத் தடை விதிக்­க­வில்லை மாறாக, சுற்­றாடல் பாது­கா­வ­லர்­க­ளாக தங்­களை வெளிக்­காட்­டிக்­கொண்டு அர­சுடன் தொடர்­பு­களைப் பேணி­வந்த அர­சியல் குழு­வொன்றின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே மேற்­படி தடை விதிப்­பினை அரசு மேற்­கொண்­டி­ருந்­தது. இந்த தடை உத்­த­ர­வா­னது நாட்டின் வர்த்­தக தோட்­டங்­க­ளுக்குப் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. நெல் மூல­மாகப் பெறப்­ப­டு­கின்ற வரு­மானம் மிகக் குறைந்­த­ளவில் இருக்கும் நிலை­யிலும் நாட்­டிற்குத் தேவை­யான அரிசி முழு­வ­தையும் உலர் வல­யத்தில் அமைந்­தி­ருக்கும் வயல்­களின் ஊடாக பெற­மு­டி­யு­மான நிலை­யிலும் அவைகள் மீது கவனம் செலுத்­தாது நெல்­லுக்­கான முக்­கி­யத்­து­வத்­தினை முதன்­மைப்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­பது ஊடா­கவும் அர­சாங்கம் தோல்­வியை அடைந்­தி­ருப்­பதை நிரூ­பித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

கல்வி

கல்வி என்­பது ஒரு நாட்டின் நிகழ்­கா­லத்தில் மாத்­தி­ர­மன்றி எதிர்­கா­லத்­திலும் தாக்கம் செலுத்­தக்­கூ­டிய திறன் கொண்ட மிக முக்­கி­ய­மான கார­ணி­யாகும். இலங்­கையின் மொத்த கல்வித் துறையும் சிக்­க­லான அமைப்­பாக மாறி­யி­ருக்­கின்­றது. நாம் இங்கு குறிப்­பிட முனை­வது முழு கல்­வித்­துறை தொட­ர்­பா­க­வல்ல. மாறாக, பாட­சாலைக் கல்வி தொடர்­பாக மாத்­தி­ரமே குறிப்­பிட முனை­கின்றோம். பணம் படைத்­த­வர்­க­ளுக்கு சகல வச­தி­களும் கொண்ட பாட­சா­லைகள் என்ற அமைப்­பிலும் வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கு ஆசி­ரமம் போன்ற பாட­சா­லைகள் எனற அமைப்­பி­லுமே இன்­றைய பாட­சாலைக் கல்­வித்­துறை வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

பாட­சாலை முறையில் காணப்­ப­டு­கின்ற இந்த முரண்­பா­டுகள் ஒட்­டு­மொத்த கல்வித் துறை­யையும் பாதித்­தி­ருக்­கின்­றது. வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் முன்­பள்­ளிகள், ஆரம்­ப­நிலைப் பாட­சாலை, கனிஷ்ட பாட­சா­லைகள், சிரேஷ்ட பாட­சா­லைகள் என்ற அடிப்­ப­டையில் பாட­சா­லைகள் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அனைத்துப் பாட­சா­லை­க­ளி­னதும் தரம் ஒரே மாதி­ரி­யா­ன­தாக அமை­வ­துடன் ஆரம்­பா­ட­சாலை ஒன்­றுக்­காக விண்­ணப்­பிக்க வேண்­டு­மாயின் வீட்டின் அரு­கா­மையில் அமைந்­தி­ருக்கும் ஆரம்ப பாட­சா­லைக்கே விண்­ணப்­பிக்­கப்­பட வேண்டும். இந்த இல­கு­வான முறைமை ஊடாக அனைத்து ஆரம்பப் பாட­சா­லை­களும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்­கப்­ப­டு­வ­துடன் மாண­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் போட்­டித்­தன்­மையோ பாட­சாலை ஒன்றைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இலஞ்சம் வழங்கும் முறையோ காணப்­ப­டு­வ­தில்லை. அது­மாத்­தி­ர­மன்றி இந்த இல­கு­வான முறை­மையின் ஊடாக பாட­சா­லையின் வளங்கள் சம­மாகப் பங்­கி­டப்­ப­டு­வ­துடன் பாட­சாலை முகாமை செயற்­பா­டு­க­ளையும் இலகுபடுத்துகின்றது. பாடசாலை முறை ஊடாக வர்க்கபேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப்பெறுவது தனது வீட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் பாடசாலை என்பதால் போக்குவரத்துக்கான செலவுகள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படுவதில்லை என்பதுடன் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

தற்போது காணப்படும் சிக்கலான பாடசாலை முறைக்குப் பதிலாக மேற்குறிப்பிட்ட இலகுவான முறையை அமுல்படுத்துவதன் அவசியப்பாடு குறித்து இளைஞர் விரக்தி ஆணைக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தொடராக வலியுறுத்தி வந்துள்ள போதிலும் நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களும் அரசின் உயரதிகாரிகளும் தற்போது நிலவுகின்ற ஊழல் நிறைந்த முறையை மாற்றியமைப்பதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை. இது இலங்கை அரசின் தோல்வியடைந்த தன்மையை விளக்குவதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.

தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளல்.

நிறைவேற்று அதிகாரமற்ற புதிய ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வதனாலோ அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்றின் மூலமாக புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக்கொள்வதன் ஊடாகவோ இலங்கை அரசுக்கே உரித்தான தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொண்டுவிட முடியாது. நாட்டில் நிலைகொண்டிருக்கும் தோல்வியடைந்த தன்மையினை வெற்றிகொள்ளும் வரை நாட்டில் நிலவுகின்ற நாசகாரத் தன்மை அவ்வாறே இருந்துகொண்டிருக்கும்.

தோல்வியடைந்த நாடொன்றையே இலங்கையராகிய நாம் பெற்றிருக்கின்றோம். இது ஊழல் நிறைந்திருக்கின்ற, திறம்பட செயற்படுவதற்கான பலமற்ற, சுயநினைவை இழந்துபோன தேசமொன்றாகும். நாட்டின் நாசகாரத் தன்மையினை இல்லாதொழிக்க வேண்டுமாயின் தோல்வியடைந்த அரசாங்கமானது வெற்றியடைந்த அரசாங்கமாக புனர் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

அதற்காக கட்டமைப்பு ரீதியிலான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டு மக்களின் பூரண அவதானத்தையும் இந்த முக்கியமானதும் அவசியமானதுமான பிரச்சினையின் மீது செலுத்தப்படல் வேண்டும். அரச மற்றும் சமூக மேம்பாட்டிற்காக புனர்நிர்மாணம் ஒன்றினை, ஊழல் காரணமாக அழுகிப் போயுள்ள பாராளுமன்றத்தின் மூலமாக ஏற்படுத்தலாம் என்பதனை எதிர்பார்க்க முடியாது.

கட்டமைப்பு மாற்றம் ஒன்றை இலக்காக கொண்ட மக்கள் அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான செயற் திட்டம் ஒன்றை நோக்கி நாட்டை நகர்த்துவதே இலங்கையின் இன்றைய நிலைக்கு அமைய புனர்நிர்மாணம் மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.