ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மகேஷ் சேன­நா­யக்க

0 563

தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஓய்­வு­பெற்ற இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
இது தொடர்­பி­லான நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றது.

இங்கு உரை­யாற்­றிய சேன­நா­யக்க, ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­மாறு தன்­னிடம் புத்­தி­ஜீ­வி­களும் சிவில் சமூக அமைப்­பு­களும் விடுத்த வேண்­டு­கோ­ளுக்­க­மைய தேசிய மக்கள் இயக்­கத்தின் வேட்­பா­ள­ராக முன்­வந்­தி­ருப்­ப­தையும் இலங்­கைக்கு மாற்று சக்­தி­யொன்று தேவை என்றும் அந்த சக்தி தானே என்றும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட்டில் இரா­ணுவத் தள­பதி பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற அவர் இரா­ணு­வத்தில் இருந்­து­கொண்டு சிறந்த சேவையை நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் வழங்­கி­ய­தா­கவும் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருப்­பதால் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.
அர­சியல் நாட்டை பாழ்­ப­டுத்தி விட்­டது. மாற்­றத்தை கொண்டு வரு­வ­தற்கு தகு­தி­யான சக்­தி­யொன்று தேவை. எனது அணியில் அர­சி­யல்­வாதி எவரும் இல்லை. கல்­வி­மான்­களும் நிபு­ணர்­க­ளுமே இருக்­கி­றார்கள். பாது­காப்பு படை­க­ளையும் பொலி­சா­ரையும் அர­சி­யல்­வா­திகள் தங்­கள் செல்­வாக்கில் சிறைப்­பி­டித்து வைத்­தி­ருக்­கி­றார்கள்.

அந்த நிலை­மையில் மாற்றம் வேண்டும். ஒரு நாடாக உறு­தி­யான பொரு­ளா­தா­ரத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்­களும் முன்­னெ­டுக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்­கான முடி­வுகள் ஏற்­க­னவே எடுக்­கப்­பட்­டுள்­ளன. அது விரை­வில் பொது மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­படும் என்றும் சேன­நா­யக்க மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் காமின் நந்த குண­வர்­தன, ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்கலைக்கழகத்தின் முகாமையாளர் டாக்டர் அனுரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், நிபுணர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.