மட்டு. சிறை­யி­லுள்ள சந்­தேக நபர்கள் 64 பேருக்கு தொடர்ந்து விளக்­க­ம­றியல்

0 609

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து காத்­தான்­கு­டியில் கைது­செய்­யப்­பட்ட 64பேரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் குறித்த சந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போதே, அவர்­களை எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரவு பிறப்­பித்தார்.

சஹ்­ரா­னிடம் ஆயுதப் பயிற்சி பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் உள்­ளிட்ட பலரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திக­திக்கு பின்னர் இடம்­பெற்ற விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளின்­போது காத்தான்குடியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.