போதிய சட்­டங்கள் இன்­மையே சுயா­தீன தேர்­தலை நடத்த சவால்

வன்முறைகளை கட்டுப்படுத்துவது சிரமம் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

0 566

தேர்தல் வன்­மு­றைகள் தொடர்பில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு வலு­வான சட்­டங்கள் இல்­லா­மையும், நடை­மு­றையில் இருக்­கின்ற சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் உள்ள தாம­த­முமே சுதந்­தி­ர­மா­னதும், நீதி­யா­ன­து­மான தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற முதன்­மை­யான சவா­லாகும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கிறார். 

மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கண்­கா­ணிப்பு மற்றும் மீளாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய காலஞ்­சென்ற துசிதா சம­ர­சே­க­ரவை நினைவு கூரு­மு­க­மாக நேற்று வியா­ழக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள லக் ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்த நினை­வு­கூரல் நிகழ்வில் கலந்­து­கொண்டு ‘சுயா­தீன – நீதி­யான தேர்­தலில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான புதிய போக்­குகள்’ என்ற தலைப்பில் விசேட உரை­யொன்றை ஆற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது:

தேர்தல் ஒன்றில் நப­ரொ­ருவர் சுய­மாக சிந்­தித்து, தனது விருப்­பத்­தின்­படி வாக்­க­ளிப்­பது என்­பது ஒருவர் பொது­மேடை ஒன்றில் பகி­ரங்­க­மாக தனது கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்கு ஒப்­பா­ன­தாகும். தேர்­தலில் வாக்­க­ளிப்­பது ஒரு­வ­ருக்கு கருத்து வெளி­யி­டு­வ­தற்குக் காணப்­படும் உரி­மை­யையும், சுதந்­தி­ரத்­தை­யுமே வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

தேர்­தல்கள் என்று நோக்­கும்­போது தேர்­தலும், வன்­மு­றையும் ஒரு­போதும் பிரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். ஏனெனில், நாமாக ஒரு விட­யத்தை விரும்பி, அதனை அடை­வ­தற்கு முற்­ப­டு­கின்­ற­போது அங்கு வன்­மு­றைகள் தலை­தூக்­கு­கின்­றன. அதே­போன்று அதி­கா­ரத்தை அடைந்து கொள்­வ­தற்கு நடை­பெ­று­கின்ற தேர்தல் என்ற போட்­டி­யிலும் வன்­மு­றை­களின் தலை­யீடு தவிர்க்­கப்­பட முடி­யா­த­தாகும்.

எம்­மு­டைய நாட்டைப் பொறுத்­த­வரை சுயா­தீ­ன­மா­னதும், நீதி­யா­ன­து­மான தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற முதன்­மை­யான சவால், தேர்தல் வன்­மு­றைகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான வலு­வான சட்­டங்கள் இன்­மையும், இருக்­கின்ற சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதில் உள்ள கால­தா­ம­தமும் ஆகும். எனவே இனி­வரும் தேர்­தல்­களில் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரிகள் அதனைக் கண்­கா­ணிக்கும் அதி­கா­ரி­க­ளாக செயற்­ப­டு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றைத் தாக்கல் செய்­தி­ருக்­கின்றோம். அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்டு இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் இல்­லா­விட்­டாலும், அதனைத் தொடர்ந்­து­வரும் தேர்­தல்­களில் குறித்த யோச­னையை அமுல்­ப­டுத்த முடி­யு­மென எதிர்­பார்க்­கின்றோம்.

அதே­போன்று தேர்­தலில் தமக்கு சார்­பாக வாக்­க­ளிப்­ப­தற்கு லஞ்சம் வழங்­குதல் உள்­ளிட்ட சட்­ட­மு­ர­ணான விட­யங்கள் நடை­பெ­றும்­போது, அவற்­றுக்கு எதி­ராக தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்­கு­மென்று பொது­மக்கள் கரு­து­கின்­றார்கள். ஆனால் நாட்டின் எந்­த­வொரு பகு­தி­யிலும் நடை­பெ­றத்­தக்க இத்­த­கைய சம்­ப­வங்­க­ளுக்கு விரைந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தென்­பது சாத்­தி­ய­மற்ற அல்­லது கடி­ன­மான விட­ய­மாகும்.

எனவே, இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் மக்கள் உரிய அதி­கா­ரி­க­ளி­டத்தில் முறைப்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும். அதனால் எவ்­வித பய­னு­மில்லை என்று கருதி சிலர் அதனைச் செய்­வ­தில்லை. ஆனால் இது­கு­றித்து இன்னும் பலர் போதிய விழிப்­பு­ணர்­வற்ற நிலை­யி­லேயே இருக்­கின்­றனர். அவர்­களை அறி­வூட்ட வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது.

அடுத்­த­தாக தேர்­தல்­களின் போது பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சொத்­துக்கள் தொடர்­பான வரை­யறை எதுவும் நடை­மு­றையில் இல்லை. குறைந்­த­பட்சம் பிர­சார செல­வுகள் குறித்த அறிக்­கையை கைய­ளிக்க வேண்டும் என்ற நிபந்­த­னை­கூட இல்லை. இது தேர்­தல்­களின் சமத்­து­வ­மா­னதும், நியா­ய­மா­ன­து­மான தன்மை பேணப்­ப­டு­வதில் தடையை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

எனினும், இதற்­கான தீர்­வொன்­றைக்­காணும் நோக்கில் 2016 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாம் முன்­னெ­டுத்­து­வந்த நட­வ­டிக்­கை­களை அடுத்து தேர்தல் பிர­சார செல­வு­களை வரை­ய­றைக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பான யோச­னை­யொன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, தற்­போது அது சட்­டமா அதிபர் வச­மி­ருக்­கி­றது. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இருந்து இவ்­வி­ட­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

இன்­றைய சூழ்­நி­லையில் சுயா­தீ­ன­மா­னதும், நீதி­யா­ன­து­மான தேர்­த­லுக்கு பாரிய சவா­லாக நவீன தொழில்­நுட்­பமும், சமூக வலைத்­த­ளங்­களும் அமைந்­துள்­ளன. சமூ­க­வ­லைத்­த­ளங்­களின் ஊடாகப் பரப்­பப்­ப­டு­கின்ற பொய்­யான தக­வல்­களும், வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­களும் பெரும் சிக்­கல்­களைத் தோற்­று­விக்­கின்­றன.

தற்­போதும் தேர்தல் நடை­பெற்ற பின்னர் வாக்­குகள் உரிய அதி­கா­ரி­களால் கைக­ளா­லேயே எண்­ணப்­படும். அவை உரிய குறிப்­பே­டு­களில் பதி­யப்­படும். அதன் பின்­ன­ரான சாதா­ரண கணக்­கீட்டுப் பணிகள் மாத்­தி­ரமே தொழில்­நுட்­பத்தை உப­யோ­கித்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான நவீன தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் தேர்தல் வாக்கு கணிப்­பு­களின் மோச­டிகள் இடம்­பெறும் என்று சமூக வலைத்­த­ளங்­களின் மூலம் பரப்­பப்­பட்ட தவ­றான தக­வல்­களால் மக்கள் மத்­தியில் ஏற்­பட்ட நம்­பிக்­கை­யீனம் கார­ண­மா­கவே எம்மால் இப்­போ­து­வரை இலத்­தி­ர­னியல் வாக்­குப்­ப­தி­விற்கு மாற்­ற­ம­டைய முடி­யாத நிலை­யேற்­பட்­டி­ருக்­கி­றது.

மேலும் பேஸ்புக் போன்ற சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பர­வி­வரும் வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், அவற்றைத் தடுப்­ப­தற்கும் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது பெரும் கேள்­வி­யாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கென முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை இலங்கையிலுள்ள பேஸ்புக் நிறுவனத்திடமும் கையளித்திருந்தேன். எனினும் ‘தேர்தல்கள் ஆணையாளர் சமூகவலைத்தளங்களிலும் கைவைத்து விட்டார்’ என்று மறுநாள் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

எனவே, தேர்தல் காலங்களில் ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளும் மிகவும் முக்கிய அவதானத்திற்கு உரியவையாகும். செய்தியில் அனைத்து விபரங்களும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும் கூட, அச்செய்தியின் தலைப்பே அனைவரினதும் கூடிய கவனத்தைப்பெறும். அது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். எனவே இதுவிடயத்தில் ஊடகங்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.