கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்

0 1,641

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப் பின்பற்றுவதா ? அல்லது மாகாண அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்படும் மாகாண நியமங்களைப் பின்பற்றுவதா என்ற தீர்மானச் சிக்கலில் பாடசாலைகளின் நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அனுமதி விடயத்தில் பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்குமான முரண்பாடுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன.

தேசிய நியமத்தின் படி, க.பொ.த. (சா/த) பரீட்சையில் போதனா மொழியும் கணிதமும் உட்பட 06 பாடங்களில் குறைந்தது 3C 3S சித்தி பெற்றால் அவர் க.பொ.த. (உ/த) வகுப்பு கற்பதற்குத் தகைமை பெறுவார். ஆனால் கிழக்கு மாகாண நியமத்தின்படி, க.பொ.த. (சா/த) பரீட்சையில் போதனா மொழி அல்லது கணிதம் உட்பட ஏதாவது 05 பாடங்களில் குறைந்தது 3C 2S சித்தி பெற்றால் அவர் க.பொ.த. (உ/த) வகுப்பு கற்பதற்குத் தகைமை பெறுவார். பெற்றோர்கள் கிழக்கு நியமத்தின்படி உயர்தர வகுப்புக்கான அனுமதி கோருகின்றனர். ஆனால் தேசிய நியமத்தின் படி அதிபர்கள் அனுமதி மறுக்கின்றனர். எனவே, தேசிய நியமம் சரியானதா?, கிழக்கு நியமம் சரியானதா? என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

1) கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்­பா­ளரின் சிந்­த­னையில் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்தி என்­பதன் கருப்­பொருள்

‘க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்தி என்­பதன் கருத்து 5 பாடங்­களில் சித்­தி­ய­டைதல் வேண்டும். இதில் மூன்று பாடங்­களில் திற­மைச்­சித்தி (C) பெற்­றி­ருக்க வேண்டும். தாய் மொழி அல்­லது கணித பாடத்தில் சித்­தி­ய­டைந்­தி­ருக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு மேல­திக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு கேட்டுக் கொள்­வ­தோடு மேற்­படி விட­யங்­களை தங்கள் வலயப் பாட­சா­லை­க­ளுக்கு அறி­விக்­கு­மாறும் கேட்டுக் கொள்­கின்றேன்.’ இவ்­வா­றா­னதோர் அறி­வித்­தலை கிழக்கு மாகாண மேல் நீதி­மன்­றத்தின் தடை உத்­த­ரவு மூலம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றும் எம்.கே.எம்.மன்சூர் விடுத்­துள்ளார்.

இதன்­படி, ஒரு மாணவர் ஏதா­வது 5 பாடங்­களில் குறைந்­தது 3C, 2S எடுத்தால் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வ­ராகக் கரு­தப்­ப­டுவார். எனவே 3C, 2S எடுத்த ஒரு­வரை க.பொ.த. (உ/த) வகுப்­புக்கு அனு­ம­திக்க முடியும். அதா­வது கணி­தத்தில் சித்­தி­ய­டை­யாத அதே நேரம் ஏதா­வது 03 பாடங்­களில் திறமைச் சித்­தியும் (C), ஏதா­வது 02 பாடங்­களில் சாதா­ரண சித்­தியும் (S) பெற்றால், அம்­மா­ணவன் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வ­ராகக் கரு­தப்­ப­டுவார் என்றும், இவ்­வா­றுதான் இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் சித்தி வீதத்தைக் கணிப்­பிட்டு உலக வங்­கிக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கின்­றது என்ற கருத்து தற்­போது கிழக்கு மாகா­ணத்தின் சகல வல­யங்­க­ளிலும் ஒரு சட்­ட­பூர்­வ­மான நிபந்­த­னை­யா­கவும், வெற்­றி­க­ர­மான திட்­ட­மா­கவும் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு அமுல் படுத்­து­வ­திலும், அது தொடர்பில் பல செய­ல­மர்­வு­களை நடத்­து­வ­திலும் தீவிரம் காட்­டு­வ­தாக பல பெற்­றோர்கள் பல்­வேறு விமர்­ச­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

மாகாண கல்வித் திணைக்­க­ளமும், வலயக் கல்விக் காரி­யா­ல­யங்­களும் இத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக, மில்­லியன் கணக்­கான அரச நிதியை செலவு செய்து வரு­வ­துடன், அதி­கா­ரிகள், அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் என பெரும் எண்­ணிக்­கை­யான ஆள­ணி­யினர் இத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் தமது கால, நேரங்­களை விரயம் செய்து வரு­கின்­றனர். கிழக்கு மாகா­ணத்தில் மட்டும் அமுல்­ப­டுத்­தப்­படும் இத்­திட்டம் பற்றி மத்­திய கல்வி அமைச்­சி­டமும், பரீட்சைத் திணைக்­க­ளத்­தி­டமும் விபரம் கோரினால் இதுபற்றித் தாம் அறி­ய­வில்லை என்றும், இவ்­வா­றான ஒரு அறி­வித்தல் தம்மால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும், இதுபற்றி தமக்கு எழுத்து மூலம் முறை­யி­டு­மாறும் கூறு­கின்­றனர். கிழக்கில் இது தொடர்பில் நடை­பெறும் கருத்­த­ரங்­கு­களில் இதற்­கான ஆதாரம் உள்­ளதா என வின­வப்­பட்டால், “அது பற்றித் தெரி­ய­வில்லை. ஆனால் எமது மாகாணக் கல்விப் பணிப்­பாளர் இதனை அமுல்­ப­டுத்­து­மாறு எமக்குக் கட்­டளை பிறப்­பித்­துள்ளார் ” என சிறு­பிள்­ளைத்­த­ன­மாக பதில் தரப்­ப­டு­கின்­றது. அத்­துடன் முறை­யான எழுத்து மூல அறி­வித்தல் வல­யங்­க­ளுக்கு வன்­பி­ர­தி­யாக வழங்­கப்­ப­டாமல், வாட்ஸ் அப் மென் செய்திப் பரி­மாற்­றத்­தி­லேயே இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாலும், பல மாண­வர்­களின் எதிர்­கால வாழ்க்­கை­யுடன் விளை­யாடும் ஒரு விஷப்­ப­ரீட்­சை­யா­கவும் இது இருப்­ப­தனால், இது பற்றித் தெளி­வாக ஆராய வேண்­டி­யுள்­ளது.

2) கல்வி அமைச்சின் சுற்று நிரு­பங்கள் கூறும் க.பொ.த. உயர் தரத்­திற்குத் தகைமை பெறல்.

க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைதல் மற்றும் க.பொ.த. (உ/த) வகுப்­பு­க­ளுக்கு அனு­மதி பெறுதல் தொடர்பில் கல்வி அமைச்சு, 2008.04.30 ஆம் திக­தியும் 2008/17 எனும் இலக்­கமும், 2008.12.31 ஆம் திக­தியும் 2008/17 (I) எனும் இலக்­கமும், 2009.06.02 ஆம் திக­தியும் 2008/17 (II) எனும் இலக்­கமும், 2012.05.03 ஆம் திக­தியும் 2012/14 எனும் இலக்­கமும், 2013.04.29 ஆம் திக­தியும் 2013/4 எனும் இலக்­கமும், 2013.06.11 ஆம் திக­தியும் 25/2013 எனும் இலக்­கமும், 28.06.2013 ஆம் திக­தியும் 27/2013 எனும் இலக்­கமும், 28.07.2014 ஆம் திக­தியும் 26/2014 எனும் இலக்­கமும் கொண்ட சுற்று நிரு­பங்­களை தொட­ராக பல்­வேறு திருத்­தங்­க­ளுடன் இது­வரை வெளி­யீடு செய்­துள்­ளது.

இதில், க.பொ.த. (உ/த) வகுப்­பு­களில் மாண­வர்­களை அனு­ம­திப்­ப­தற்­கான குறைந்­த­பட்சத் தகைமை தொடர்பில் கல்வி அமைச்சு வெளி­யிட்ட 2008.04.30 ஆம் திக­தியும் 2008/17 எனும் இலக்­கமும் கொண்ட சுற்று நிரு­பம்தான் அடிப்­ப­டை­யா­னதும், பல்­வேறு திருத்­தங்­க­ளுடன் இன்று வரை அமுலில் இருப்­ப­து­மாகும். இச்­சுற்று நிரு­பத்தின் 2.0 ஆம் பகுதி 12 ஆம் தரத்­திற்கு மாண­வர்­களை அனு­ம­திப்­ப­தற்­கான பொதுத் தகைமை பற்றிக் குறிப்­பி­டு­கின்­றது. 2008/17 ஆம் இலக்க சுற்று நிரு­பத்தின் 2.0 ஆம் பகு­தி­யா­னது திருத்­தங்­களின் பின், பின்­வ­ரு­மாறு இறுதி வடிவம் பெறு­கின்­றது.

கல்வி அமைச்சின் 2008/17 இலக்க சுற்று நிரு­பத்தின் 2.0 ஆம் பகுதி
திருத்­தங்­களின் பின் 2.0 12 ஆம் தரத்­திற்கு அனு­ம­திப்­ப­தற்­கான பொதுத் தகை­மைகள்:

2.1 (அ) பழைய பாடத் திட்­டத்­­திற்கு அமை­வாக க.பொ.த. (சா/த) பரீட்­சையில் போதனா மொழியும் கணி­தமும் உட்­பட 06 கட்­டாய பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­ப­தோடு, அவற்றில் குறைந்­த­பட்சம் 03 பாடங்­களில் திறமைச் சித்தி அல்­லது அதை­விட உயர்ந்த சித்­தியைப் பெற்­றி­ருத்தல் வேண்டும். மேற்­கூ­றப்­பட்ட தகை­மை­களைப் பூர­ணப்­ப­டுத்­து­கையில் மேல­திக பாடங்­களில் பெறப்­படும் சித்தி அல்­லது திறமைச் சித்­தி­களைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

(ஆ) 2007 இல் அறி­முகம் செய்­யப்­பட்ட புதிய பாடத்­திட்­டத்­துக்கு அமை­வாக க.பொ.த. (சா/த) பரீட்­சையில் போதனா மொழியும் கணி­தமும் உட்­பட ஏதா­வது 06 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­ப­தோடு அவற்றில் குறைந்­த­பட்சம் 03 பாடங்­களில் திறமைச் சித்தி அல்­லது அதை­விட உயர்ந்த சித்­தியைப் பெற்­றி­ருத்தல் வேண்டும். (சுற்று நிரு­பத்தில் பொதுத் தகை­மைகள் குறிப்­பி­டப்­படும் அனைத்து இடங்­க­ளிலும் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு செயற்­ப­டுதல் வேண்டும்)
(2008.12.31 ஆம் திக­தியும், 2008/17 (I) எனும் இலக்­கமும் கொண்ட சுற்று நிரு­பத்­தின்­படி பிரிவு 2.1 க்கான திருத்தம் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு அமையும்)

2.2 இத்­த­கை­மையை ஓர் அமர்­விலோ அல்­லது இரு அமர்­வு­க­ளிலோ பெற்­றுக்­கொள்ள முடியும்

(அ) இரு அமர்­வு­களில் இத்­த­கை­மை­களைப் பெற்றுக் கொள்ளும் மாண­வ­ரொ­ருவர் சமர்ப்­பிக்கும் க.பொ.த. (சா/த) பெறு­பேற்றுச் சான்­றிதழ் இரண்டில் முதல் பெறு­பேற்றுச் சான்­றி­தழில் குறைந்த பட்சம் மூன்று திறமைச் சித்­தி­க­ளுடன் போதனா மொழி அல்­லது கணிதம் உட்­பட 5 கட்­டாயப் பாடங்­களில் சித்தி பெற்­றி­ருத்தல் வேண்டும்.

(ஆ) க.பொ.த. (சா/த) பரீட்­சையில் குறைந்­த­பட்சம் மூன்று திறமைச் சித்­தி­க­ளுடன் போதனா மொழி அல்­லது கணிதம் உட்­பட 5 கட்­டாயப் பாடங்­களில் சித்தி பெற்ற பெறு­பேற்றுச் சான்­றிதழ் ஒன்­றினைச் சமர்ப்­பிக்கும் மாண­வ­ரொ­ரு­வ­ருக்கு அதற்­க­டுத்து நடை­பெறும் க.பொ.த. (சா/த) பரீட்­சை­யி­லேயே குறித்த தகை­மை­களைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிபந்­த­னையின் பேரில் தற்­கா­லி­க­மாக க.பொ.த. (உ/த) வகுப்­புக்கு அனு­மதி வழங்க முடியும். அவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்ட மாண­வ­ரொ­ருவர் மேற்­கு­றிப்­பிட்ட தகை­மையை அதற்­க­டுத்து நடை­பெறும் க.பொ.த. (சா/த) பரீட்­சை­யி­லேயே பெற்றுக் கொள்­ளா­விடின் பாட­சா­லை­யி­லி­ருந்து விலக்­கப்­ப­டுதல் வேண்டும். எவ்­வா­றா­யினும் பெறு­பேற்­றினை மறு­ப­ரி­சீ­ல­னைக்கு அனுப்­பி­யி­ருப்பின் அம்மீள் பரி­சீ­லனை பெறு­பேறு வரும்­வரை மாத்­திரம் பாட­சா­லையில் தங்கி இருக்க முடியும்.

(இ) மேற்­கு­றிப்­பிட்­ட­வை­க­ளுக்கு மேல­தி­க­மாக, க.பொ.த. (சா/த) பரீட்­சையில், 03 பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் 06 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­ப­தோடு, கணித பாடத்தில் சித்தி பெறாத மாண­வர்கள் அடுத்து வரும் இரு வரு­டங்­க­ளுக்குள் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் கணித பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும் எனும் நிபந்­த­னையின் பேரில் உயர்­தர கலைப்­பி­ரி­வுக்கு அல்­லது உயிர்த் தொகுதித் தொழில் நுட்­ப­வியல் துறைக்கு அனு­ம­திக்க தகைமை பெறுவர்.

(28.07.2014 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 26/2014 இலக்க சுற்று நிரு­பத்தின் 03 ஆவது பிரி­வின்­படி மேற்­படி ‘இ’ பகுதி சேர்க்­கப்­ப­டு­கின்­றது)
மேற்­கு­றிப்­பிட்ட சுற்று நிரு­பங்­க­ளி­னதும், அவற்றின் திருத்­தங்­க­ளி­னதும் அடிப்­ப­டையில் க.பொ.த.(சா/த) பரீட்­சையில் ஒரு மாணவன் சித்­தி­ய­டைந்து உயர்­தர வகுப்­புக்கு தகைமை பெறு­வ­தெனில்,

முத­லா­வது நிபந்­தனை: க.பொ.த. (சா/த) பரீட்­சையில் போதனா மொழியும் கணி­தமும் உள்­ள­டங்­கிய ஏதா­வது 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S சித்தி அல்­லது அதை­விட உயர்ந்த சித்­தியைப் பெற்­றி­ருத்தல் வேண்டும். இத்­த­கையோர் உயர்­த­ரத்தில் அனு­மதி பெற வேறு நிபந்­த­னைகள் விதிக்­கப்­ப­ட­வில்லை.

இரண்­டா­வது நிபந்­தனை: க.பொ.த. (சா/த) பரீட்­சையில், இத்­த­கை­மை­யினை இரு அமர்­வு­க­ளிலும் பெற்­றுக்­கொள்ள முடியும். அவ்­வாறு இரு அமர்­வு­களில் இத்­த­கை­மை­களைப் பெற்றுக் கொள்ளும் மாண­வ­ரொ­ருவர் சமர்ப்­பிக்கும் க.பொ.த. (சா/த) பெறு­பேற்றுச் சான்­றிதழ் இரண்டில், முதல் பெறு­பேற்றுச் சான்­றி­தழில் குறைந்­த­பட்சம் போதனா மொழி அல்­லது கணிதம் உட்­பட கட்­டாய பாடங்கள் 05 இல் குறைந்­தது 3C, 2S சித்தி பெற்­றி­ருத்தல் வேண்டும்.எனினும் அதற்­க­டுத்து நடை­பெறும் க.பொ.த. (சா/த) பரீட்­சை­யி­லேயே மேற்­கு­றித்த தகை­மை­களைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிபந்­த­னையின் பேரில் தற்­கா­லி­க­மாக க.பொ.த. (உ/த) வகுப்­புக்கு அனு­மதி வழங்க முடியும். எனவே அடுத்­த­டுத்து வரும் இரு அமர்­வு­களில் குறைந்­தது 3C, 3S சித்தி பெறுதல் வேண்டும் எனும் நிபந்­த­னை­யுடன் முதல் அமர்வில் 05 கட்­டாயப் பாடங்­களில் (Core Subjects) குறைந்­தது 3C, 2S சித்தி பெறுதல் வேண்டும் என்­பது முக்­கிய நிபந்­த­னை­யாகும். 

மூன்­றா­வது நிபந்­தனை: க.பொ.த. (சா/த) பரீட்­சையில், போதனா மொழியை உள்­ள­டக்­கிய, 06 பாடங்­களில் குறந்­தது 3C 3S சித்­தி­யுடன், கணித பாடத்தில் சித்தி பெறாத மாண­வர்கள் அடுத்து வரும் இரு­வ­ரு­டங்­க­ளுக்குள் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் கணித பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும். எவ்­வா­றா­யினும், கணித பாடத்தில் இரு வரு­டங்­க­ளுக்குள் சித்­தி­ய­டை­யாத ஒரு மாணவன் தனது தற்­கா­லிக அனு­மதி வழங்­கப்­பட்ட உயர்­தர வகுப்புக் கல்­வியைத் தொடர முடி­யாது என்­ப­துடன் க.பொ.த. (உ/த) பரீட்­சைக்கு பாட­சாலைப் பரீட்­சாத்­தி­யா­கவும் விண்­ணப்­பிக்க முடி­யாது.

மேற்­காட்­டிய மூன்று நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில்: மேற்­படி நிபந்­த­னைகள் அனைத்­தையும் ஒருங்­கி­ணைத்துப் பார்க்­கையில், க.பொ.த. (சா/த) பரீட்­சையில் ஒரே அமர்வில் போதனா மொழியும் கணி­தமும் உள்­ள­டங்­கிய ஏதா­வது 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S சித்தி பெறுதல் வேண்டும் அல்­லது இரு அமர்­வு­களில் எனில் முதல் அமர்வில் போதனா மொழி அல்­லது கணிதம் உட்­பட கட்­டாயப் பாடங்கள் 05 இல் குறைந்­தது 3C 2S சித்­தி­யுடன் அடுத்து வரும் இரண்­டா­வது அமர்வில் 06 பாடங்­களில் குறைந்­தது 3C 3S சித்தி எனும் பெறு­பேற்­றினைப் பூர்த்தி செய்தல் வேண்டும் அல்­லது போதனா மொழி­யுடன் 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S சித்­தி­யுடன் கணித பாடத்தில் சித்தி பெறாத மாண­வர்கள் அடுத்து வரும் இரு­வ­ரு­டங்­க­ளுக்குள் கணித பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும்.

மேலும், முத­லா­வது நிபந்­த­னையில் போதனா மொழியும் கணி­தமும் சித்­தி­ய­டைதல் வேண்டும் எனவும், இரண்­டா­வது நிபந்­த­னையில் போதனா மொழி அல்­லது கணிதம் சித்­தி­ய­டைய வேண்டும் எனவும், மூன்­றா­வது நிபந்­த­னையில் கணிதம் சித்­தி­ய­டை­யா­விட்டால் அடுத்து வரும் இரு வரு­டங்­க­ளுக்குள் சித்­தி­ய­டைய வேண்டும் எனவும் விதிக்­கப்­ப­டு­கின்­றது. மூன்­றா­வது நிபந்­த­னையில் கணித பாடத்தில் சித்­தி­ய­டை­யாத ஒருவர் இரண்­டா­வது நிபந்­த­னை­யின்­படி கட்­டாயம் போதனா மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். எனவே உயர்­தர வகுப்­புக்குத் தகைமை பெறும் ஒருவர் இறு­தியில் சகல நிபந்­த­னை­க­ளையும் பூர்த்தி செய்து போதனா மொழியும் கணி­தமும் உட்­பட 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S பெறு­பேற்­றுடன் தனது உயர் கல்­வியைத் தொடர முடியும்.

3) கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்­பாளர் கூறும் க.பொ.த.(சா/த) சித்­தியில், தாய் மொழி அல்­லது கணிதம் உட்­பட ஏதா­வது 5 பாடங்­களில் 3C, 2S எடுக்கும் மாண­வனின் நிலை

கிழக்கு மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் தனது புதிய திட்­டத்தின் அடிப்­ப­டையில், ஏதா­வது 5 பாடங்­களில் 3C, 2S எடுக்கும் ஒரு மாணவன் க.பொ.த.(சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வ­ராகக் கரு­தப்­ப­டுவார் என, இது­வரை கல்வி அமைச்­சினால் வெளி­யி­டப்­ப­டாத ஒரு புதிய உயர்­தர வகுப்பு அனு­ம­திக்­கான தகுதி விதி­யினை வெளி­யிட்­டுள்ளார். அதிலும், தேவைப்­படும் 3C சித்­தி­யினை தெரி­வுப்­பா­டங்­களில் அதா­வது தொகுதிப் பாடங்­களில் (Basket Subjects) பெற்றுக் கொண்டால் போது­மா­னது எனவும் குறிப்­பிட்­டுள்­ள­துடன், க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைதல் என்­ற­வொரு புதிய கருத்­தையும் வெளி­யிட்­டுள்ளார்.

க.பொ.த.(சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைதல் என்­பது, எங்கும் எதிலும் குறிப்­பி­டப்­ப­டாத ஒரு விட­ய­மாகும். க.பொ.த. (சா/த) பரீட்­சையில் ஒருவர் குறிப்­பிட்ட குறைந்த பட்ச தகை­மை­களைப் பூர்த்தி செய்தால், அவர் உயர்­தர வகுப்­புக்குத் தகைமை பெறுவார் என்­பதே அர்த்­த­மாகும். க.பொ.த.(சா/த) பரீட்­சையில் உயர்­தர வகுப்­புக்குத் தகைமை பெறுதல் எனும் எண்­ணக்­க­ருவும், பரீட்­சையில் சித்­தி­ய­டைதல் எனும் எண்­ணக்­க­ருவும் இரு வேறு விட­யங்­க­ளல்ல. ஆனால் சித்­தி­ய­டைதல் எனும் பதம் இப்­ப­ரீட்சை முடி­வு­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. பயன்­ப­டுத்­து­வதும் பொருத்­த­மா­ன­தல்ல.
எனவே, தாய் மொழி அல்­லது கணிதம் உட்­பட ஏதா­வது 5 பாடங்­களில் 3C, 2S எடுத்தால் க.பொ.த.(சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டை­யலாம் என்ற கருத்து மறு­வ­கையில் க.பொ.த. (உ/த) வகுப்­புக்கு அனு­மதி பெறலாம் என்­ப­தையே குறிக்­கின்­றது. எனவே க.பொ.த.(சா/த) பரீட்­சையில் சித்தி எனும் புதிய யுக்தி முற்­றிலும் தவ­றா­னதோர் வழி­காட்­ட­லாகும்.

ஏனெனில், ஒரு மாணவன் க.பொ.த. (உ/த) வகுப்­புக்கு அனு­ம­திக்­கு­ரிய தகைமை பெற வேண்­டு­மெனில்,

கல்வி அமைச்சின் 2008/17 மற்றும் 2008/17 (I) ஆகிய இலக்க
சுற்­று­நி­ரு­பங்­களின் 2.1 (ஆ) பிரி­வின்­படி,

1) க.பொ.த. (சா/த) பரீட்­சையில் ஒரே அமர்வில் போதனா மொழியும் கணி­தமும் உள்­ள­டங்­கிய ஏதா­வது 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S சித்தி பெறுதல் வேண்டும்,

2) இரு அமர்­வுகள் எனில் முதல் அமர்வில் போதனா மொழி அல்­லது கணிதம் உட்­பட கட்­டாய பாடங்கள் 05 இல் குறைந்­தது 3C, 2S சித்­தி­யுடன் அடுத்து வரும் இரண்­டா­வது அமர்வில் 06 பாடங்­களில் குறைந்­தது 3C, 3S சித்தி எனும் பெறு­பேற்­றினைப் பூர்த்தி செய்தல் வேண்டும்,

26/2014 எனும் சுற்று நிரு­பத்தின் 03 ஆம் பிரிவின் படி,

3) குறைந்­தது 3C, 3S சித்­தி­யுடன் 06 பாடங்­களில் சித்­தி­ய­டை­வ­துடன், கணித பாடத்தில் சித்தி பெறாத மாண­வர்கள் அடுத்து வரும் இரு வரு­டங்­க­ளுக்குள் கணித பாடத்தில் சித்தி பெறுதல் வேண்டும் என மிகத் தெளி­வாக வரை­யறை செய்­கின்­றது. மேற் தரப்­பட்ட விதி முறை­களைப் பூர்த்தி செய்­யாத ஒரு­ மா­ணவன் வேறு எந்­த­வொரு வகை­யிலும், உயர்­தர வகுப்­புக்குத் தகைமை பெற­மாட்டார். ‘க.பொ.த. (சா/த) பரீட்­சையில் தாய்மொழி அல்­லது கணிதம் உட்­பட ஏதா­வது 5 பாடங்­களில் 3C, 2S பெற்றால் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்தி.’ எனும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பா­ளரின் கொள்­கையின் படி, பெறு­பேற்­றினைப் பெறும் ஒரு மாணவன், தற்­கா­லி­க­மா­க­வேனும் உயர்­தர வகுப்­புக்கு அனு­மதி பெறும் தகை­மையைக் கொண்­டி­ருக்­க­மாட்டார். அத்­துடன் இரு அமர்­வு­க­ளுக்­கான தகை­மைக்­காக சமர்ப்­பிக்­கப்­படும் முதல் பெறு­பேற்று சான்­றி­த­ழுக்­காகக் கூட இந்தப் பெறு­பேற்றைப் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­துடன் O/L தகைமை கோரப்­படும் எந்­த­வொரு அரச தொழில் பெறு­வ­தற்கும் கூட பயன்­ப­டுத்த முடி­யாது.

ஏனெனில், இவ்­வா­றான முதல் பெறு­பேற்றுச் சான்­றி­த­ழா­னது தாய் மொழி அல்­லது கணித பாடத்­துடன் கட்­டாய பாடங்கள் 05 இல் குறைந்­தது 3C, 2S சித்தி பெற்­றி­ருத்தல் வேண்டும் என சுற்று நிரு­பங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன. அத்­துடன் 3C, 2S எனும் 05 பாடங்­க­ளுக்­கான தகைமை பற்றி சுற்­று­நி­ரு­பங்கள் கூறும்­போ­தெல்லாம், அத்­த­கைய தகைமை பெறும் ஒருவர் போதனா மொழி, கணிதம், விஞ்­ஞானம், ஆங்­கிலம், வர­லாறு, சமயம் ஆகிய 06 கட்­டாய பாடங்­களில் ஏதா­வது 05 கட்­டாய பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும் என்றும், ஆனால் அதில் போதனா மொழி அல்­லது கணிதம் உள்­ள­டங்­கி­யி­ருத்தல் வேண்டும் என்றும், 3C, 3S எனும் 06 பாடங்­க­ளுக்­கான தகைமை பற்றி சுற்­று­நி­ரு­பங்கள் கூறும்­போ­தெல்லாம், அத்­த­கைய தகைமை போதனா மொழி மற்றும் கணிதம் உள்­ள­டங்­கிய ஏதா­வது 06 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும் என்றும், மிகத் தெளி­வாக வலி­யு­றுத்­து­கின்­றன. அதா­வது, ஏதா­வது 06 பாடங்­களில் சித்­தி­ய­டைதல் என்­பது 09 பாடங்­க­ளி­லி­ருந்தும், 05 பாடங்­களில் சித்­தி­ய­டைதல் என்­பது 06 கட்­டாய பாடங்­க­ளி­லி­ருந்தும் பெற­ப்­படல் வேண்டும்.

ஆனால், கிழக்கு மாகா­ணத்தில் இந் நிபந்­த­னைகள் இரண்­டையும் புறக்­க­ணித்து, 3C, 2S எனும் 05 பாடங்­க­ளி­லான சித்­தி­யினை கட்­டாய பாடங்­களில் அன்றி ஏதா­வது பாடங்­களில் பெற்றால் போது­மா­னது என்றும், 3C சித்­தி­யினை தொகுதிப் பாடங்­களில் – Basket Subjects இல் பெற்றுக் கொள்­ளலாம் என்றும், அதனால் பிர­தான பாடங்­களை விடுத்து தொகுதிப் பாடங்­களில் – Basket Subjects இல் கூடிய கவனம் செலுத்­துங்கள் என்றும் மாண­வர்­க­ளுக்கு ஒரு தவ­றான பாதை­யைக்­காட்டி, அவர்­க­ளது எதிர்­கால வாழ்க்­கையை சூனிய நிலைக்குக் கொண்டு செல்­கின்­றனர்.

ஏதா­வது 05 பாடங்­களில் 3C, 2S சித்­தி­ய­டை­பவர் ஒரு­போதும் க.பொ.த. (சா/த) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­த­வ­ராகக் கரு­தப்­ப­ட­மாட்டார், க.பொ.த. (உ/த) வகுப்பு அனு­ம­திக்­கான தகை­மை­யி­னையும் பெற­மாட்டார், ஒரு தொழில் பெறு­வ­தற்­கான அடிப்­படைத் தகைமை­யி­னையும் அடை­ய­மாட்டார், மாறாக ஒரு மாணவன் தனது எதிர்­கால கல்வி வாழ்க்­கையை சீர­ழிப்­ப­தற்­கான அல்­லது படு­கு­ழியில் போட்டுப் புதைப்­ப­தற்­கான செயற்­பா­டா­கவே அது கரு­தப்­படும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.