ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் : தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இன்றைய தினம் ஆராய்வு

0 1,388

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு இன்று கூடி இறு­தி­ய­றிக்கை குறித்து ஆராயவுள்ளது. தெரி­வுக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முதலாம் வாரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது. ஈஸ்டர் தாக்­குதல் குறித்து ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த மூவர்­கொண்ட குழுவின் அறிக்­கை­யையும் தெரி­வுக்­குழு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட தெரி­வுக்­குழு தமது விசா­ர­ணை­களை முடித்­துள்ள நிலையில் இன்று தெரி­வுக்­குழு கூடி அவர்­களின் இறுதி அறிக்­கையை சமர்ப்­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளது. தெரி­வுக்­குழுவின் தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் இன்று பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் இந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. இது­வரை கால­மாக தாம் மேற்­கொண்ட விசா­ரணை நட­வ­டிக்­கைகள் மற்றும் பெற்­றுக்­கொண்ட சாட்­சி­யங்கள் அனைத்­தையும் கொண்டு இறுதி அறிக்­கையை தயா­ரிக்­கவும் அந்த அறிக்­கையை அடுத்த மாதம் (ஒக்­டோபர் ) முதல் வாரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­குழுவின் தலைவர் ஆனந்த குமா­ர­சிறி உறு­திப்­ப­டுத்­தினார்.
அத்­துடன் இறு­தி­யாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த தெரி­வுக்­குழு பல கார­ணி­களை பதிவு செய்­துள்­ள­துடன், இந்த தாக்­குதல் குறித்து ஜனா­தி­பதி நிய­மித்த மூவர் கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கை­யையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இந்த அறிக்­கையின் பரிந்­து­ரை­க­ளையும் தெரி­வுக்­குழு முன்­வைக்க தயா­ரித்­துள்ள பரிந்­து­ரை­க­ளையும் உள்­ள­டக்­கிய முழு­மை­யாக அறிக்­கை­யாக தமது அறிக்கை உரு­வாக்­கப்­படும் என கூறினார்.

அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வுகள் எதிர்­வரும் 8 ஆம் திகதி நடைபெற­வுள்ள நிலையில் அந்த அமர்­வு­களின் போது அறிக்கை சமர்­பிக்­கப்­படும் வாய்ப்­புக்கள் அதி­க­மாக இருப்­ப­தாக நம்பப்படுகின்றது. எனினும், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒருமாத காலம் நீடித்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் தெரிவிகுழுவுக்கான கால எல்லை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.