கெஹெலிய முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் நளின்

0 1,557

தான் சஹ்ரான் என்று குறிப்­பிட்­டது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல ஊடக மாநா­டொன்றில் தெரி­வித்த கருத்­துகள் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் அகௌ­ர­வப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் அவர் முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்­புக்­கோ­ர­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார வேண்­டுகோள் விடுத்தார். 

நேற்று அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தானும், கெஹெ­லிய ரம்­புக்­வெல்­லவும் கலந்­து­கொண்ட தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் அடிப்­ப­டை­வாதி சஹ்­ரா­னுக்கும், பொட்டு அம்­மா­னுக்கும் சம்­பளம் வழங்­கி­ய­தை ஏற்­றுக்­கொண்டார் எனத் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து உரையாற்றியபோதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசு­கையில், தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் கலந்து கொண்ட மறு­தினம் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல ஊடக மாநா­டொன்­றினை நடத்­தினார். அவர் சஹ்ரான் தொடர்பில் தெரி­வித்த கருத்­து­க­ளுக்கு கோத்­தா­பய கோபப்­பட்­டி­ருக்க வேண்டும். நான் உளவு தகவல் வழங்­கு­வ­து சஹ்ரான் எனக் குறிப்­பிட்­டது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் என்று குறிப்­பிட்டு முஸ்லிம் சமூ­கத்தை அவ­மா­னப்­ப­டுத்­தி­விட்டார்.

சஹ்ரான் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் நடாத்தி 250 கத்­தோ­லிக்­கர்­களை பலி­யெ­டுத்­தவர். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்­தவர். ஹோட்­டல்­க­ளையும், ஆல­யங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யவர். இவ்­வா­றான ஒரு­வரை முழு முஸ்லிம் சமூ­கத்துடன் ஒப்­பிட்­டமை முஸ்­லிம்­க­ளுக்கு அகௌ­ர­வ­மாகும். கெஹ­லிய ரம்­புக்­வெல்ல பொது­ஜன பெர­மு­னவின் ஊடகப் பேச்­சா­ள­ராவார். ஒரு சிலர் செய்த பயங்­க­ர­வா­தத்தை முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பொறுப்­புக்­கூற முடி­யாது.

சஹ்­ரானின் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு அழைக்கப்படவேண்டும். இது தொடர்பில் சி.ஐ.டி.யில் நான் முறைப்பாடு செய்யவுள்ளேன் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.