விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10

அச்சுறுத்தும் பூதமாக காட்டப்படும் ஷரீஆ

0 1,436

இலங்­கையின் அண்­மைக்­கால விவா­தங்­களில் சிங்­கள இனத்­து­வே­ஷி­களின் பேசு­பொ­ருள்­களில் ஒன்று ஷரீஆ. மட்­டக்­க­ளப்பு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் என்று தொடங்கி நாட்டில் சில முஸ்லிம் கிரா­மங்­களில் ஷரீஆ சட்டம் நடை­மு­றை­யி­லுள்­ளது என்றும் முழு­நாட்­டை­யுமே ஷரீ­ஆவின் கீழ் கொண்­டு­வர முஸ்­லிம்கள் முயற்­சிக்­கி­றார்கள் என்றும் கடும்­போக்­கு­வா­திகள் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர்.

ஷரீ­ஆவைப் பற்­றிய இந்தப் பூச்­சாண்டி இன்று நேற்­றல்ல, வர­லாற்றின் சில கால­கட்­டங்­களில் இது­போன்ற புர­ளியைக் கிளப்­பி­ய­வர்கள் இருந்தே வந்­துள்­ளனர். 2001 செப்­டெம்பர் தாக்­கு­தலின் பின்னர் மேற்கு நாடு­களில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக அந்­நா­டு­களில் தோன்­றிய தீவிர வல­து­சாரிக் கட்­சிகள் (Radical Right Wing Parties), அவர்­களைச் சார்ந்து நின்ற இன­வா­திகள் எல்­லோரும் இத்­த­கைய “பயங்­காட்டும்” போலிப் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டனர்.

“ஷரீஆ என்­பது ஒரு காட்­டு­மி­ராண்டிச் சட்டம். அதை முஸ்­லிம்கள் முஸ்­லி­மல்­லாதோர் மீது திணிக்க முயல்­கின்­றனர். வன்­மு­றையை அதற்­கான ஆயு­த­மாகக் கொள்­கின்­றனர். ஷரீஆ சட்டம் மிகவும் கொடூ­ர­மா­னது. விப­சாரம் செய்­த­வனை கட்டி வைத்து கல்­லெ­றி­வது, கொலை செய்­த­வனின் கழுத்­தையும் திரு­டி­ய­வனின் கையையும் துண்­டிப்­பது, பழிக்குப் பழி­வாங்­கலை ஊக்­கு­விப்­பது. குற்­ற­மி­ழைத்­த­வ­னுக்கு திருந்தி நடப்­ப­தற்கு சந்­தர்ப்­ப­ம­ளிக்­கா­தது. இன்று அரே­பிய பாலை­நி­லத்தில் அர­சாளும் ஆட்சி பீடங்கள் இத­னைத்தான் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றன. ஐரோப்பா, அமெ­ரிக்கா ஆகி­ய­வற்­றி­லுள்ள சிறு­பான்மை முஸ்­லிம்­களும் தமது அனைத்து மதப்­ப­ணிகள் மூலமும் இறு­தி­யாக அடைய எண்­ணு­வது இதைத்தான்”.

இதுவே ஷரீஆ குறித்த தீவிர வலது சாரி­களின் படிமம். இந்தப் படி­மத்தைப் பிர­தி­ப­லிக்கும் கட்­டு­ரைகள், கார்­டூன்கள், திரைப்­ப­டங்கள், பெட்­டக நிகழ்ச்­சிகள் என்று ஏரா­ள­மான ஊடக வெளிப்­பா­டுகள் அன்­றாடம் வெளி­வந்த வண்­ண­முள்­ளன. பிரிட்­டனின் பிர­பல ஊட­க­வியல் ஆய்­வாளர் Elizabath Poole என்­பவர் அந்­நாட்டில் இஸ்­லா­மிய வெறுப்பை விதைக்கும் பத்­தி­ரி­கைகள் எவ்­வாறு ஷரீஆ பீதியை உரு­வாக்­கு­கின்­றன. முஸ்­லிம்­களை எவ்­வாறு முத்­திரை குத்­து­கின்­றன என்­பதைப் பின்­வ­ரு­மாறு விளக்­கு­கின்றார்.

‘’Muslims are evils, Savage, People without Soul, Terrorists who want to conquer the west and bring the world under the Sharia Law’’ (Ameen Izzadeen)

சில காலங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் பிர­பல சிங்­களத் திரைப்­பட நடி­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சன் ராம­நா­யக்க இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது. உயிர்ப்­பலி எடுக்­கக்­கூ­டி­யது என்று கடு­மை­யான விமர்­ச­ன­மொன்றை ஊட­கங்­களில் வெளிப்­ப­டுத்தியிருந்தார். அதற்கு அப்­போ­தைய அர­சி­யல்­வாதி ஏ.எச்.எம்.அஸ்வர் தகுந்த பதி­ல­டி­யொன்றை வழங்­கி­யமை நினை­வுக்கு வரு­கின்­றது.

22.08.2019 அன்று கெலி­ஓயா ஊடாக கம்­ப­ளைக்கு சென்­ற­போது கெலி­ஓயா பஸ்­த­ரிப்பு நிலை­யத்தில், 4/21 தாக்­குதல், வத பெதி, ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் இவற்றை சிங்­கள மக்கள் மறக்­கக்­கூ­டாது எனும் தொனியில் சிங்­கள மொழியில், காயப்­பட்டு முகத்தால் இரத்தம் சிந்திக் கொண்­டி­ருக்கும் ஒரு பெண்ணின் புகைப்­ப­டத்­துடன் ஒரு டிஜிட்டல் பதாகை காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததைக் கண்­ணுற்று அதிர்ச்­சி­ய­டைந்தேன். மீளவும் செப்­டெம்பர் முதலாம் திகதி அவ்­வ­ழியால் சென்­ற­போது அந்­தப்­ப­தாகை நீக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வி­டத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ஆகி­யோரின் புகைப்­படம் தாங்­கிய பதா­கைகள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றை­யெல்லாம் நான் நினைவு கூர்­வ­தற்குக் காரணம் உள்­ளது. “ஷரீஆ” என்­பது இன்று சிங்­கள சகோ­தர மக்­க­ளி­டையே ஒரு மறைந்­தி­ருக்கும் பூத­மா­கவே பயங்­காட்­டப்­ப­டு­கின்­றது. அதன்கீழ் இலங்­கையைக் கொண்­டு­வர முஸ்­லிம்கள் முயற்­சிக்­கி­றார்கள். குறிப்­பாக, இந்­நாட்டில் செயற்­படும் இஸ்­லா­மிய ஆன்­மிக இயக்­கங்கள் இவ்­வா­றான நீண்­ட­காலக் குறிக்­கோ­ளு­டன்தான் இயங்­கு­வ­தான ஒரு புர­ளியை இன­வா­திகள் கிளப்பி வரு­கின்­றனர். ஷரீஆ என்றால் என்ன? என்ற தெளிவு இந்தப் பிர­சா­ரத்தில் இறங்­கி­யுள்ள எவ­ருக்கும் இல்லை என்­பது மட்டும் தெளிவு.

சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்­றி­வரும் இலங்கை சிங்­கள சகோ­த­ரிகள் சிலரும் முஸ்­லிம்கள் சிலரும் கடந்த ஒரு பத்­தாண்­டு­கால இடை­வெ­ளியில் எதிர்­கொண்ட மரண தண்­ட­னையை, குறிப்­பாக றிஸானா நபீக் மீது மரண தண்­டனைத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­மையை அடுத்து ஷரீஆ குறித்து பயத்தை உரு­வாக்க எண்­ணிய சக்­தி­க­ளுக்கு வாய்ப்புக் கிடைத்­தது.
இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­தி­லேயே இலங்­கையில் ஷரீஆ சட்­டத்தைத் தடை செய்ய வேண்­டு­மென்று சிலர் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும் இந்தக் கூக்­குரல் இன்றும் உயர்ந்து ஒலிக்­க­லா­மென எதிர்­பார்க்­கலாம். இந்தக் கோஷமும் கூக்­கு­ரலும் இல்­லாத பூத­மொன்றை நினைத்து மருட்சி கொள்­வ­தற்கு சம­மா­னது.

ஷரீஆ என்­பது இஸ்­லாத்தில் மூலா­தா­ரங்­க­ளான அல்­குர்ஆன், சுன்­னாவும் அவை இரண்­டி­னதும் போத­னை­க­ளுமே. அவற்றில் நம்­பிக்கைக் கோட்­பா­டுகள், ஒழுக்­கப்­போ­த­னைகள், வர­லாறு, அல்லாஹ் பற்­றிய எடுத்­தி­யம்­பல்கள், வணக்க வழி­பா­டுகள் உள்­ளிட்டு சட்டம் என்ற ஒரு பரி­மா­ணமும் அடங்­கு­கின்­றது. இச்­சட்­டத்தில் வழி­பா­டுகள் குறித்த சட்டம், குடும்ப வாழ்வு பற்­றிய சட்டம், பொரு­ளா­தாரக் கொடுக்கல் வாங்கல் பற்­றிய சட்டம், வாரி­சு­ரி­மைச்­சட்டம், சர்­வ­தேச சட்டம் என்­ப­வற்­றோடு குற்­ற­வியல் சட்­டங்­களும் அடங்­கு­கின்­றன.

இலங்கை அர­சாங்கம் 1951 ஆம் ஆண்­டி­லி­ருந்து திருத்­தங்­க­ளுடன் அங்­கீ­க­ரித்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து தொடர்­பான சட்டம் மட்­டுமே இங்கு நடை­மு­றை­யி­லுள்­ளது. வக்பு சட்டம் கூட பூர­ண­மாக நடை­மு­றையில் இல்லை. ஷரீஆ சட்டம் இந்­த­ளவு விரி­வாக இருக்­கின்­ற­போதும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் மட்­டுமே அமுலில் உள்­ளது. அதுவும் முழு­மை­யாக இஸ்­லா­மிய ஷரீ­ஆவைத் தழு­வி­ய­தன்று. மாறாக இந்­தோ­னே­சி­யாவின் “பெற்­றா­வியா” பிராந்­திய மலாய் முஸ்­லிம்­களின் வழக்­கா­று­க­ளையும் ஷாபி மத்­ஹபை அடி­யொற்­றிய சில பிக்ஹு அபிப்­பி­ரா­யங்­களின் தொகுப்­பா­க­வுமே அது இருந்து வரு­கின்­றது.

ஆக, ஷரீஆ சட்டம் என்று சொல்­வ­தற்கு இலங்­கையில் எதுவும் இல்லை. ஷரீ­ஆவை கொண்­டு­வ­ரு­வதே எங்கள் இலக்கு என்று போராடும் தனி­ம­னி­தனோ இயக்­கமோ இங்கு எவ­ரு­மில்லை. அது குறித்து ஏதேனும் தீர்­மானம் ஒன்­றும்­கூட இங்கு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஒழுக்க, ஆன்­மிகப் பண்­பா­டு­களால் முஸ்லிம் மக்­களைப் புடம்­போட்டு சமூ­கத்­திற்கும் நாட்­டுக்கும் நல்ல மனி­தர்­களை வெளிக்­கொ­ணர வேண்டும் என்­ப­துதான் இங்கு இயங்கும் அனைத்து ஆன்­மிக இயக்­கங்­க­ளி­னதும் ஒரே எதிர்­பார்ப்­பாகும்.

பெரும்­பாலும் முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் இஸ்­லாத்தின் விமர்­ச­கர்­களும் அதிலும் குறிப்­பாக இன, மதக் குரோ­தத்தை வளர்க்க நினைப்­ப­வர்­களும் ஷரீஆ என்ற மாத்­தி­ரத்­தி­லேயே இஸ்­லாத்தின் குற்­ற­வியல் சட்­டங்­க­ளையும் தண்­ட­னை­க­ளை­யுமே மனதில் கொண்டு வரு­கின்­றனர். சவூதி அரே­பியா தண்­டனைச் சட்­டங்­க­ளுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை இத்­த­கையோர் பிழை­யாகப் புரிந்து கொண்­டுள்­ளனர். ஷரீஆ என்­றாலே கழுத்தை வெட்­டு­வதும், கையை வெட்­டு­வ­தும்தான் என்று கற்­பனை செய்­கி­றார்கள். மரண தண்­டனை தவிர்க்க முடி­யாத ஒரு தீமை என்­பதை அவர்கள் ஏற்க மறுக்­கின்­றனர். சம­கால இஸ்­லா­மிய உலகில் ஆயுதம் ஏந்திப் போராடும் அத்­தனை குழுக்­களும் அமெ­ரிக்கத் தயா­ரிப்பு என்­பதை அறி­யாத இவர்கள், அத்­த­கைய அமைப்­புகள் இந்தக் “கொடூ­ர­மான” ஷரீ­ஆவின் கீழ் உலகைக் கொண்­டு­வ­ரவே போரா­டு­கின்­றனர் என கற்­பனை செய்­து­கொண்டு இஸ்­லாத்தின் மீதும் முஸ்­லிம்கள் மீதும் சேறு பூசு­கின்­றனர்.

தாரிக் ரமழான் சொல்­வது போன்று இது அறி­யாமை மற்றும் மெத்­தனம் தொடர்­பா­னது மட்­டு­மல்ல, இந்தப் பொய்ப்­பி­ர­சாரம் அர­சியல் இலா­பங்­க­ளுக்­கா­கவே பெரிதும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஷரீஆ சட்­டங்­களை எங்­கேனும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தனால் அதற்­கென்று பல நிபந்­த­னைகள் உள்­ளன. முதலில் அப்­பி­ராந்­தியம் இஸ்­லா­மிய ஆட்­சி­யா­ளர்­களின் கீழ் இருக்க வேண்டும். முஸ்­லிம்கள் அங்கு பெரும்­பான்­மை­யாக இருக்க வேண்டும். அந்த சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே அமு­லாகும். அந்த ஆட்­சியின் கீழ் வாழும் முஸ்லிம் அல்­லாத சிறு­பான்மை மக்­க­ளுக்கு அவர்கள் தமது தனித்­து­வ­மான சட்­டங்­களைப் பின்­பற்றும் அதி­காரம் அளிக்­கப்­படும்.

முஸ்­லிம்கள் கூட ஷரீஆ சட்­டங்­களை விரும்பி ஏற்றுக் கொள்­ளா­த­போது அவர்கள் மீது அந்த சட்டம் திணிக்­கப்­ப­ட­மாட்­டாது. மலே­சியா, இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­களில் ஷரீஆ நீதி­மன்­றங்கள் இயங்கும் அதே­வேளை சிவில் நீதி­மன்­றங்­களும் உள்­ளன. இஸ்­லாத்தை அரச சம­ய­மாக ஏற்றுக் கொண்ட அர­சுகள் அதி­கா­ர­பூர்­வ­மாக ஷரீ­ஆவின் சட்­டங்­களை அமுல்­ப­டுத்த முடியும் என்­ற­போதும் மக்­களின் விருப்­பத்­தேர்­வுக்கு எதி­ராக ஆட்­சி­யா­ளர்கள் எத­னையும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது.

மிக நீண்­ட­கா­ல­மாக மதச்­சார்­பற்ற ஆட்­சி­முறை நில­விய தூனி­சி­யாவில் 2011 அரபு வசந்­தத்தை அடுத்து இஸ்­ஸா­மிய செயற்­பாட்­டா­ளர்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­த­போது எடுத்த எடுப்­பி­லேயே அவர்கள் மத­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பை மாற்ற முயற்­சிக்­க­வில்லை. அந்­நாட்டின் தலை­சி­றந்த இஸ்­லா­மிய அர­சியல் சிந்­த­னை­யாளர் ஷெய்க் றாஷித் அல்­க­னூஷி இது குறித்து வெளி­யிட்ட கருத்து பிர­பல்­ய­மா­னது. “மக்கள் மீது ஷரீ­ஆவைத் திணிக்க நாம் விரும்­ப­வில்லை. மக்கள் விரும்­பினால் நாம் ஷரீஆ அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை (Constitution) மாற்­றி­ய­மைப்போம்” என்றார் அவர்.

இந்தக் கருத்தை ஜீர­ணித்­துக்­கொள்ள திரா­ணி­யற்ற சிலர் கனூ­ஷியைக் கடு­மை­யாக விமர்­சித்த போதும் அவர் சொன்­ன­துதான் உண்மை. அதே­வேளை ஷரீஆ சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதன் அடிப்­படை நோக்­கங்­களை அவர் புரிந்து வைத்­தி­ருந்தார். ஷரீஆ மனித நலன்­க­ளையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. மனி­தனின் மார்க்கம், பரம்­பரை, சொத்து, அறிவு, மானம், உயிர் ஆகிய ஆறு விட­யங்­க­ளையும் பேணிப்­பா­து­காப்­பதே ஷரீஆ சட்­டங்­களின் அடிப்­படைக் குறிக்­கோ­ளாகும். இவற்றை அடை­வ­தற்கு ஷரீஆ ஒரு­போதும் தடை­யாக இருக்க முடி­யாது. ஆகவே ஷரீஆ மனி­த­னுக்­கான ஓர் அருள். அல்­லாஹ்வின் கிருபை. அதனை மக்கள் விரும்பி எதிர்­பார்த்து ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இது தான் அல்­லாஹ்வின் எதிர்­பார்ப்பு. “சிந்­திக்­கின்ற சமூ­கத்­திற்கு மிக அழ­கான சட்­டத்தை இயற்றித் தரு­பவன் அல்­லாஹ்வை அன்றி வேறு யார் இருக்­கின்றான்” என இந்த உண்­மை­யையே குர்ஆன் பறை­சாற்­று­கின்­றது.
நுபுவ்­வத்தின் ஆட்சி நில­விய 23 ஆண்­டுகளின் பின்னர் நேர்­வழி நடந்த குல­பாஉர் ராஷி­தீன்­களின் ஆட்­சிக்­காலம் வரையே இஸ்­லா­மிய ஷரீஆ முழு நிறை­வாக நடை­மு­றை­யி­லி­ருந்­தது. அதற்குப் பிந்­திய யுகங்­களில் இஸ்­லா­மிய ஆட்சிப் பிராந்­தி­யங்­களில் இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் பூர­ண­மாக எங்­குமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நவீ­ன­கால மன்­ன­ராட்­சி­யிலோ, மத­சார்­பற்ற இரா­ணுவ ஆட்சி பீடங்­க­ளிலோ ஷரீஆ சட்டம் முழு­மை­யாக அமுலில் இல்லை. இன்று உல­கி­லுள்ள 193 தேச அர­சு­களில் (Nation States) 56 முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட நாடுகள் உள்­ளன. இதில் ஒன்­றி­லேனும் இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் பூர­ண­மாக அமுலில் இல்லை.

பெரும்­பான்மை முஸ்லிம் நாடுகள் நிலையே இப்­ப­டி­யி­ருக்க முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்­டிய தேவை என்ன? அதி­காரம் இல்­லாத ஒரு சமூகம் குற்­ற­வியல் சட்­டங்­க­ளையோ (ஜினாயாத்) அல்­லது ஏனைய சட்­டங்­க­ளையோ அமுல்­ந­டத்த அவ­சி­ய­மில்லை என்­பதே இஸ்­லா­மிய சட்­ட­வல்­லு­நர்­களின் நிலைப்­பா­டாகும். பெரும்­பான்மை நாடு­களே ஷரீஆ சட்­டத்தைப் புறக்­க­ணித்து மேலைத்­தேய சட்­டங்­களை இறக்­கு­மதி செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதன் அர்த்தம் ஷரீஆ முஸ்லிம் பெரும்­பான்மை நாடொன்­றுக்கே பொருத்­த­மா­ன­தல்ல என்­பதைக் குறிக்­க­வில்லை. மாறாக, அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­க­ளுக்கு அதை அமு­லாக்கும் ஆர்வம், அக்­கறை இல்லை.

இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் உலகில் 137 நாடு­களில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்­லிம்கள் முஸ்லிம் அல்­லாத பெரும்­பான்மை நாடொன்றில் ஷரீஆ சட்டம் பற்­றிய பேசு­வ­தற்கு எந்தத் தேவை­யு­மில்லை. அப்­படி எவரும் இங்கு பேச­வு­மில்லை. ஷரீஆ குறித்து காட்­டுக்­கூச்சல் போடு­கின்­ற­வர்கள் அநா­வ­சி­ய­மாகப் புரளி கிளப்பி கல­வரம் மூட்ட முனை­கி­றார்­களே ஒழிய ஷரீ­ஆ­வுக்கும் இலங்­கைக்கும் எந்தத் தொடர்­பு­மில்லை.

மிக நீண்ட கால­மாக முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஒரு­சில இடங்­களில் குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தில் விப­சாரம் செய்பவர்களுக்கு கசையடி கொடுக்கும் ஒரு வழக்கம் இருந்து வந்தது. இது அப்பிரதேச பள்ளிவாசல்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அது பெரும்பாலான ஊர்களில் மறைந்து போயுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் எந்தவொரு நாட்டிலும் இஸ்லாமியக் குற்றவியலின் எந்தவொரு தண்டனையையும் அமுல்நடாத்துவது முஸ்லிம்களுக்குக் கடமை இல்லை என்பதே இஸ்லாமிய சட்ட வல்லுநர்களின் ஆணித்தரமான கருத்தாகும். அந்த வகையில் இலங்கையில் விபசாரம் செய்பவர்களுக்கு கசையடி வழங்குவதோ, கல்லடிப்பதோ, மதம் மாறியவர்களுக்கு “முர்தத்” என்று பகிரங்க தீர்ப்பளித்து அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என “பத்வா” கொடுப்பதோ இலங்கைச் சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாத விடயங்களாகும்.

முஸ்லிம்களிடம் அதிகாரம் இல்லாத நாட்டில், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் தனியார் சட்டத்தைப் பின்பற்றுவதும் ஏனைய சட்டங்களைப் பொறுத்தவரை நாட்டின் பொதுச்சட்டங்களை அனுசரித்து நடப்பதுமே இஸ்லாம் எம்மிடம் எதிர்பார்க்கும் விடயமாகும். ஷரீஆ சட்டங்களின் காலப் பொருத்தப்பாடு. அதன் பயனுறுதி வாய்ந்த விளைபலன்கள் குறித்து புலமை மட்டத்தில் நாம் விவாதிப்போம், கலந்துரையாடுவோம். ஆனால் அதிலுள்ள குற்றவியல் சட்டத்தையோ தண்டனைகளையோ பற்றி இங்கு நாம் பேசவேண்டியதில்லை. ஏனெனில் அவற்றையெல்லாம் அமுலாக்குவதற்கான வாய்ப்பும் இல்லை; தேவையும் இல்லை.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.