அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீதான விசாரணையை விரைவுபடுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டுமெனும் பிரேரணை கிண்ணியா நகரசபையில்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் இத்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 2019.09.19 வியாழக்கிழமை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் தலைமையில் கூடிய 19 ஆவது சபை அமர்விலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி முன்வைத்த இப்பிரேரணைக்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் தலைமைத்துவப் பண்புகள், தீவிரவாதத்திற்கு எதிரான அவரது நிலைப்பாடு மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகள் குறித்து பிரேரணை முன்வைத்த உறுப்பினர் எம்.எம்.மஹ்தி சபை உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளித்தார்.
vidivelli