எதிரணியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர்

0 876

அர­சாங்­கத்தில் பத­விகள் வகித்தும் பங்­கா­ளி­க­ளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்­கின்ற பழைய பிரச்­சி­னை­க­ளுக்கும் புதிய நெருக்­க­டி­க­ளுக்கும் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை நீடிப்­பதால், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு போன்று எதிர்க்­கட்­சியில் அமர்ந்து அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்தும் ஆத­ர­வ­ளித்தும் செய­லாற்­று­வது குறித்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களும் முஸ்லிம் சமூ­கமும் சிந்­திக்க வேண்டும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்த்­த­ரப்பு ஆச­னத்தில் அமர்ந்து தமிழ் சமூ­கத்­திற்கு ஆற்­றி­யுள்ள சேவை­களில் ஒரு பங்­கைக்­கூட ஆளுங்­கட்சி அமைச்­சர்­க­ளாக பதவி வகித்து சமூ­கத்­திற்கு ஆற்­றி­ய­தாகத் தெரி­ய­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தற்­போ­தைய அர­சியல் நிலைமை தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, ‘நெருக்­க­டிகள் அதி­க­ரித்துச் செல்­கின்ற அதே­நேரம், இருந்­து­வரும் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­டாது தொடர்ந்து கொண்­டி­ருப்­பதும் கவலை தரும் விட­யங்­க­ளாக உள்­ளன.

இலங்கை உள் விவ­கா­ரங்­களில் முஸ்லிம் விரோத நாடு­களின் தலை­யீ­டுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து செல்­கின்­றன. குறிப்­பாக 4/21 தாக்­குதல் தொடர்­பி­லான புல­னாய்வு நட­வ­டிக்­கை­களில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வெளி­நா­டுகள் நேர­டி­யாக ஈடு­ப­டு­வதைக் காண­மு­டி­கின்­றது. ஆனால் இந்த நாடுகள் தலை­யீடு செய்த எந்­த­வொரு நாட்­டிலும் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தீர்ந்­த­தாக இல்லை. மாறாக, அந்­நா­டு­களில் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்து பூதா­க­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவர்கள் தலை­யீடு செய்த நாடுகள் பாரிய அழி­வு­க­ளுக்கும் சேதங்­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ளன. அந்­நா­டு­களின் பெண்கள், சிறு­வர்கள் உள்­ளிட்ட பெரும்­ப­கு­தி­யினர் கடல்­க­டந்து ஓடும் நிலைக்கு தள்­ளப்­பட்­டனர். இவர்­களில் எண்­ணற்றோர் இடம்­பெ­யர்ந்த பட­குகள் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­தனர். இவை சரித்­தி­ர­மல்ல துக்­க­க­ர­மான பயங்­கர சம­கால நிகழ்­வுகள்.

இங்கு இடம்­பெறும் விசா­ர­ணை­களில் வெளி­நாட்டு சக்­தி­களின் தலை­யீ­டு­களால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் அதி­க­ரிப்­பது மிகவும் தெளி­வாகத் தெரி­கின்­றது. 04/21 தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை முடி­வுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற அர­சாங்­கத்தின் உயர் மட்ட அறி­விப்பைத் தொடர்ந்து திருப்­தி­ய­டைந்த முஸ்­லிம்கள், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் நாளுக்கு நாள் முஸ்­லிம்கள் தொடர்ந்தும் கைது செய்­யப்­ப­டு­வதை சமூகம் அச்­சத்­துடன் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

உதா­ர­ண­மாக ஸ்ரீ லங்கா ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை முஸ்­லிம்­களை ஆழ்ந்த கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. தீவி­ர­வா­தத்தைக் கடு­மை­யாக எதிர்த்­தவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர். அப்­ப­டி­யி­ருக்­க­கையில் அவர் ஏன் கைது செய்­யப்­பட்டார் என்­பது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் மூலமோ அர­சாங்­கத்தின் மூலமோ இது­வ­ரையும் எந்­த­வொரு கார­ணமும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

இதுபோன்ற கைது­களின் பின்­ன­ணியில் வெளி­நாட்டு சக்­திகள் செயற்­ப­டு­கின்­றன எனப் பர­வ­லாக நம்­பப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பின்னர் முஸ்லிம் விரோத செயற்­பா­டுகள் இந்­நாட்டில் பல மடங்கு தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­டலாம் என்ற வதந்­தி­களும் முஸ்­லிம்கள் மத்­தியில் பரவிக் கொண்­டி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தம் பத­வி­களை அண்­மையில் மீண்டும் ஏற்­றுக்­கொண்­டுள்ள போதிலும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்­துள்ள பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் தீர்க்­கப்­பட்­ட­தா­கவோ குறைந்­த­தா­கவோ இல்லை. முஸ்லிம் அர­சி­யலும் சமய, சமூக அமைப்­புக்­களும் பெரிதும் பாதிப்­ப­டை­யலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இயக்க ரீதி­யாக இயங்­கு­வதும் பிரச்­சி­னை­யாகும் நிலைமை உரு­வாகும் என்ற அச்­சமும் நில­வு­கின்­றது.

வெளி­நாட்டு முஸ்லிம் விரோத சக்­திகள், எது­வித கட்­டுப்­பா­டு­களும் இன்றி இங்கு செயற்­பட அர­சாங்கம் இட­ம­ளித்­தி­ருப்­பது இவற்­றுக்கு முக்­கிய கார­ண­மாக அமையும். இது கவ­லைக்­கு­ரிய நிலை­மை­யாகும். கண்­க­ளுக்கு தென்­ப­டாத இரும்பு சங்­கி­லி­களைக் கொண்டு முஸ்­லிம்­களை சுற்றி வளைப்­பதில் சர்­வ­தேச இஸ்­லா­மிய விரோத சக்­திகள் ஈடு­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. இவற்றை அர­சி­லி­ருந்து கொண்டு தீர்க்க முடி­யாத நிலை­மையை முஸ்லிம் சமூ­கத்­தினால் காண­மு­டி­கின்­றது.

தற்­போது முக்­கிய தேர்­த­லொன்றை முன்­னோக்கி இருக்கும் நிலையில் சகல கட்­சி­க­ளு­டனும் சுதந்­தி­ர­மாகப் பேசி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­கக்­கூ­டிய வாக்­கு­று­தி­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்கி கொள்­வது மிகவும் அவ­சியத் தேவை­யாக உள்­ளது. பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னை­களின் தீர்­வுகள் இவற்றில் முக்­கி­யத்­துவம் பெறு­வது அவ­சியம். அவ­சரகாலச் ­சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள போதிலும் முஸ்லிம் பெண்­களின் ஆடை விவ­காரம் இன்னும் தீர்க்­கப்­ப­டாத ஒன்­றா­கவே உள்­ளது. மத்­ரஸா கல்வி, வட மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் தாமதம் என்­ற­படி பல­வித பிரச்­சி­னை­க­ளுக்கு முஸ்­லிம்கள் முகம் கொடுத்த வண்­ண­முள்­ளனர்.

தமிழ் சமூ­கத்­தினர் முன்னர் முகம் கொடுத்த பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னை­களில் இருந்து பெரு­ம­ளவு விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். ஆனால் முன்பு தமிழ் சமூ­கத்­தினர் முகம் கொடுத்­தது போன்ற பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னைக்கு முஸ்லிம் சமூகம் தற்­போது முகம் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளது. தமிழ் அர­சியல் தலை­மை­களின் பின்னால் இந்­தியா மற்றும் மேற்­கத்­தைய நாடுகள் மிகவும் ஆத­ர­வா­கவும் விழிப்­பா­கவும் செய­லாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் அதே சக்­திகள் உல­க­ளா­விய ரீதி­யாக முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக நோக்­கு­கின்­றன. இங்கும் எது­வித தங்­கு­த­டை­யு­மின்றி செய­லாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் நாம் எது­வுமே அறி­யாத பால­கர்கள் போன்று இருக்­கின்றோம். தமிழ் மக்­களின் பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­துள்ள போதிலும் அச்­ச­மூ­கத்­திற்­காக பாரி­ய­ளவு சேவை­களை த. தே. கூ பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது. இதனை அக்­கட்சி எவ்­வாறு செய்­கின்­றது என்­பது தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­களும் ஒரு தரம் சிந்­தித்து பார்க்க வேண்டும். இலங்­கையில் நடை­மு­றையில் இருப்­பது விகி­தா­சாரத் தேர்­த­லாகும். இத்­தேர்தல் முறை­மைப்­படி எந்­த­வொரு கட்­சியும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தனிப் பெரும்­பான்­மையைப் பெறு­வது கஷ்­ட­மான காரி­ய­மாகும். அதனால் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கும், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை, சட்ட மூலங்கள், பிரே­ர­ணைகள், விவா­தங்­களை நிறை­வேற்­று­வ­தற்கும் ஆளும் கட்­சிக்கு மேல­தி­க­மாக ஏனைய எதிர்த்­த­ரப்பு கட்­சி­களின் ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் மிகவும் அவ­சி­ய­மா­னது.

அந்த அடிப்­ப­டையில் தான் த. தே. கூட்­ட­மைப்பு அமைச்சு பத­வி­களைப் பெற்­றுக்­கொள்­ளாத நிலையில், ஒவ்­வொரு வாக்­கெ­டுப்பின் போதும் தம் சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­களை முன்­வைத்து தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் பேரம்­பே­சு­தல்­களை மேற்­கொண்டு ஆளும் தரப்­புக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து தம் சமூ­கத்தின் தேவை­களை நிறை­வேற்றி வைக்­கின்­றது. ஆனால், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சு பத­வி­களைப் பெற்­றுக்­கொண்­டதும் அதற்கு மேல­தி­க­மாக முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு எந்­த­வொரு தீர்­வை­யையும் அர­சாங்கம் செய்­யாத நிலையே நீடிக்­கின்­றது. தேர்தல் முன்­னோக்கி உள்­ளதால் பிர­தேச மட்­டத்தில் ஏதோ உத­வி­களை செய்யும் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டுள்­ளதைக் காணு­கின்றோம். ஆனால் முஸ்­லிம்­களின் தேசிய மட்­டத்­தி­லான சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. இது ஆரோக்­கி­ய­மான நிலைமை அல்ல. சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் அமைச்சு பத­வி­களைக் கொண்டு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­விட்டால் அப்­ப­த­வி­களால் சமூ­கத்­திற்கு எந்த நன்­மை­யுமே கிடைக்­கப்­போ­வ­தில்லை. ஆனால் சமூகம் ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரையும் தமது தேர்தல் தொகு­திக்­கான சேவை­களை மாத்­தி­ர­மல்­லாமல் சமூகம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தையும் எதிர்பார்த்தே பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக் கின்றனர். அதன் காரணத்தினால் த.தே.கூ. போன்று தம் சார்ந்த சமூகம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொள்ளவென எதிர்க்கட்சி அரசியல் குறித்து முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயலாற்றுவது அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.