வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

அதிகரிக்கிறது ரணில் - சஜித் முரண்பாடு

0 915

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார்.

மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள். இந்­நி­லையில் மாகா­ண­சபைத் தேர்தல், பொதுத்­தேர்தல் என்­ப­ன­வற்றைப் புறந்­தள்­ளி­விட்டு ஜனா­தி­பதித் தேர்தல் முன்­னிலை பெற்­று­விட்­டது.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல், நேற்று முன்­தினம் 18 ஆம் திகதி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் வெளி­யி­டப்­பட்டு விட்­டது. 2019 09.18 ஆம் திக­தி­யிட்ட 2141/ 25 ஆம் இலக்க விசேட வர்த்­த­மானி அறி­வித்தல், ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்­தப்­படும் எனத் தெரி­விக்­கி­றது. 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனா­தி­பதி தேர்­தல்கள் சட்டம் 2 ஆம் பிரிவின் கீழான கட்­ட­ளை­யாக இந்த விசேட அறி­வித்தல் வெளி­யிடப் பட்­டுள்­ளது.

பத­வி­யி­லுள்ள ஜ-னா­தி­ப­தியின் பத­விக்­காலம் முடி­வு­று­வ­தற்கு முன்னர் ஒரு மாதத்­திற்குக் குறை­யா­மலும் இரண்டு மாதங்­க­ளுக்கு மேற்­ப­டா­த­து­மான காலப் பகு­திக்குள் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டு­மென அர­சி­ய­ல­மைப்பின் 31 ஆம் உறுப்­பு­ரையின் (3) ஆம் பந்­தி­யா­னது தேவைப் படுத்­து­கின்­ற­தாலும் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் 2020 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 7 ஆம் திகதி முடி­வு­று­கின்­ற­தாலும் தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு உரித்­தாக்கப் பட்­டுள்ள தத்­து­வங்­களின் பய­னைக்­கொண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திக­தியை தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு தின­மாக நிர்­ண­யிப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய வெளி­யிட்­டுள்ள விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்டு விட்­டது. தேர்­த­லுக்­கான கட்­டுப்­பணம் நேற்று 19 ஆம் திகதி நண்­பகல் முதல் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கி­றது. அடுத்த மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இந்­நி­லையில் ஜனா­தி­பதித் தேர்தல் களம் எவ்­வாறு அமையப் போகி­றது என்­பதில் மக்கள் குழம்­பிப்­போ­யி­ருக்­கி­றார்கள். அர­சியல் களத்தில் திடீர் மாற்­றங்கள் நிக­ழலாம். அர­சியல் கட்­சி­க­ளுக்குள் பிள­வுகள் இடம்­பெ­றலாம் எனவும் எதிர்வு கூறப்­ப­டு­கி­றது. பிர­தான இரு கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் தனது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களைத் தீர்­மா­னிப்­பதில் இழு­பறி நிலையில் இருக்­கின்­றன.

இதே­வேளை, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன, தாமரை மொட்டு சின்­னத்தில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கி­யுள்­ளது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மையில் தேசிய மக்கள் சக்தி மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே இவ்­விரு கட்­சி­களின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தங்கள் தேர்தல் பிர­சா­ரங்­களை ஆரம்­பித்­து­விட்­டனர்.

ஐ.தே. கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்புச் செய்­யப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரைப் பெய­ரி­டு­வதில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பல­வா­ரங்­க­ளாக நெருக்­கடி நிலைமை தொடர்­கி­றது. ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மூவரின் பெயர்கள் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிரதித் தலை­வ­ரான அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஆகிய மூவரின் பெயர்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்குப் பிரஸ்­தா­பிக்­கப்­பட்டு வரு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குள்ளும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்­குள்ளும் மூவ­ருக்கும் ஆத­ர­வா­ளர்கள் இருக்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது விட­யத்தில் பிரிந்து நிற்­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஒரு சாராரும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஒரு சாராரும், சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை மற்றுமொரு சாராரும் ஆத­ரிக்­கின்­றனர். இந்­நி­லை­யிலே யாரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­வது என்று அக்­கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குழம்பிப் போயி­ருக்­கிறார்.
ஜனா­தி­பதித் தேர்­தலில் தான் போட்­டி­யிட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்­கிறார். அத­னா­லேயே சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கும்­படி அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்தும் தீர்­மானம் மேற்­கொள்­வதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தாம­தப்­ப­டுத்தி வரு­கிறார்.

‘என்னால் வெற்றி பெற முடி­யு­மென்றால் அதற்­கான சாத்­தியம் இருக்­கு­மென்றால் நான் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவேன்’ என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளமை இதனை உறுதி செய்­கி­றது. ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­காரம் கார­ண­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் நெருக்­கடி நிலைமை நாளுக்கு நாள் பூதா­க­ர­மா­கி­வ­ரு­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கப்பட்­டுள்ள நிலையில் இந்­நி­லைமை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளது.

அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரான அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, தானே கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர். தன்­னையே கட்சி கள­மி­றக்க வேண்டும் என பகி­ரங்­க­மாக பொதுக்­கூட்­டங்­களில் தெரி­வித்து வரு­கிறார். ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் சஜித் ஆத­ரவு அணி­யென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழு­வொன்று செயற்­பட்டு வரு­கி­றது. அவர்கள் நாடு தழு­விய ரீதியில் மக்கள் பேர­ணி­களை நடத்தி சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு திரட்டி வரு­கின்­றார்கள்.

தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டி­ராத நிலையில் ஏற்­கெ­னவே அவர்கள் பல பேர­ணி­களை நடத்தி விட்­டார்கள். ‘சஜித் வரு­கிறார்’ என்ற தொனிப்­பொ­ருளில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்தப் பேர­ணி­களில் பெரும் திர­ளான ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்­டார்கள்’ எதிர்­கால ஜனா­தி­பதி சஜித்”, “சஜித்தே எமக்கு வேண்டும்” எனும் பதா­கை­களை அவர்கள் ஏந்­தி­யி­ருந்­தார்கள். பதுளை, மாத்­தறை, குரு­நாகல் என்று பல இடங்­களில் பேர­ணிகள் நடத்­தப்­பட்­டன. சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு பெரும் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.
சஜித் பிரே­ம­தாஸ அத்­துடன் மௌனித்து விட­வில்லை. நாட்டின் பல பிர­தே­சங்­களில் தொட­ராக வீட­மைப்புத் திட்­டங்­களைத் திறந்து வைத்து மக்­களின் ஆத­ர­வினைத் திரட்டி வந்தார். தொடர்ந்தும் இந்தச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கிறார். சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு வழங்கும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது இல்­லத்தில் சஜித் ஆத­ரவு அணி­யுடன் பல கட்டப் பேச்­சு­வார்­தை­களை நடத்தி வரு­கிறார். ஆனால் இவற்­றுக்கு கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அசைந்து கொடுக்­க­வில்லை. அவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக எவ­ரையும் பெய­ரி­ட­வில்லை. அமைதி காத்து வரு­கிறார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை உடன் பெய­ரி­டுங்கள்

இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை உட­ன­டி­யாகப் பெய­ரி­டுங்கள். தாம­திக்க வேண்டாம் என அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடிதம் ஒன்­றினை கடந்த வாரம் அனுப்­பி­வைத்தார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ளரைப் பெய­ரி­டு­வது தாம­திக்­கப்­ப­ட­மு­டி­யாது. அவ்­வாறு தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது நாட்­டுக்கும் கட்­சிக்கும் பாத­கத்­தையே ஏற்­ப­டுத்தும். இது ஜன­நா­யக விரோத செய­லாகும் என சஜித் பிரே­ம­தாஸ ரணி­லுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மேலும், எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் ஜன­நா­ய­கத்தை மதித்து செயற்­படும் நீங்கள் ஜனா­தி­பதி அபேட்­ச­கரைத் தெரிவு செய்­வதில் பிரச்­சி­னைகள் இருந்தால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழு­வையும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழு­வையும் கூட்டி அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்­ளுங்கள் எனவும் வேண்­டி­யுள்ளார்.

பங்­காளிக் கட்­சிகள் இணக்கம்

அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கு­மாறு அவ­ருக்கு ஆத­ர­வான தரப்­பினர் தொடர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வலி­யு­றுத்தி வந்த நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­ளும்­பட்­சத்தில் வேட்­பாளர் தெரிவு பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண முடியும் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் கடந்த 14 ஆம் திகதி இரவு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். இச்­சந்­திப்பு இடம்­பெ­று­வ­தற்கு முன்பு அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் இல்­லத்தில் ஒன்றுகூடி கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்­றுக்கு வந்­ததன் பின்பே அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவைச் சந்­தித்­தனர்.

இச்­சந்­திப்பில் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், மனோ கணேசன், பழனி திகாம்­பரம், சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் கலந்து கொண்­ட­துடன் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, பாலித ரங்கே பண்­டார, கபீர் ஹாசிம் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இச் ­சந்­திப்பின் போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான பேச்­சு­வார்த்தை மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தற்­போது வரையில் உள்ள நிலைப்­பா­டுகள் குறித்து பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ மற்றும் அவ­ரது தரப்பு அமைச்­சர்கள் கருத்­து­களை முன்­வைத்­தனர். பங்­காளிக் கட்­சி­களின் ஆத­ரவு இருந்தால் அடுத்த கட்­ட­மாக எம்மால் தேர்தல் நகர்­வு­களை முன்­னெ­டுக்க முடியும். எனவே அதற்­கான உங்­களின் ஆத­ரவை எதிர்­பார்க்­கிறேன் என சஜித் பிரே­ம­தாஸ வேண்­டிக்­கொண்டார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் தங்­க­ளது கருத்­துகள் மற்றும் நிலைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.

முஸ்லிம் சமூ­கத்தின் மீதான தற்­கால அடக்­கு­மு­றைகள் குறித்தும் அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் கருத்­து­களை முன்­வைத்­தனர்.
அத்­தோடு மலை­யக மக்­களின் நாளாந்தப் பிரச்­சி­னைகள், சம்­பள விவ­கா­ரங்கள் மற்றும் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னைகள் குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­லி­ருந்து வெற்­றி­பெறும் வேட்­பாளர் ஒரு­வரே கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்­பதில் தாம் உறு­தி­யாக இருப்­ப­தாகக் கூறிய பங்­காளிக் கட்­சிகள், பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ கள­மி­றங்­கினால் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்­தனர்.

சபா­நா­ய­கரும் களத்தில்-?

கட்­சியின் பிர­தித்­த­லைவர் கட்சி யாப்­பி­னையும் மீறி தானே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தாகத் தெரி­வித்து களத்தில் குதித்­துள்­ளமை ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பிரச்­சி­னை­க­ளையும் பிள­வு­க­ளையும் உரு­வாக்­கி­யுள்ள நிலையில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வும்தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடத் தயா­ராக உள்­ள­தாக அதி­ர­டி­யாகத் தெரி­வித்­துள்ளார். கட்­சியின் தலைவர், பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவைக் கள­மி­றக்­கு­வதை விட சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவை கள­மி­றக்­கு­வ­தையே எதிர்­பார்த்தார். அதுவும் தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்பு தனக்கு நழு­விப்­போகும் நிலை­யேற்­பட்­டாலே சபா­நா­ய­கரைக் கள­மி­றக்க ரணில் எதிர்­பார்த்­துள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

சில நிபந்­த­னை­களின் கீழ் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்­ப­தாக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தைப் பிர­தா­ன­மாகக் கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளு­டனும் 19 ஆவது திருத்­தத்தை உறு­திப்­ப­டுத்­து­ப­வர்­க­ளு­டனும் இணைந்தே என்னால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க முடியும். அத்­தோடு இதற்கு ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­களின் ஆசிர்­வாதம் கிடைக்­க­வேண்டும் என சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.
மேலும் அவ­ரது அறிக்கை இவ்­வாறு தெரி­விக்­கி­றது;

பல முக்­கிய கார­ணங்­களை முன்­வைத்து இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராக இருக்­கு­மாறு கடந்த சில வாரங்­க­ளாக மக­நா­யக்க தேரர்கள் மற்றும் வேறு மதத் தலை­வர்கள் பல்­வே­று­பட்ட சிவில் சமூக அமைப்­புகள், பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், பல்­வேறு துறை­களைச் சேர்ந்த புத்­தி­ஜீ­விகள், இளைஞர் அமைப்­புகள் மற்றும் அர­சியல் செயற்­பாட்­டா­ளர்கள் என்னை வந்து சந்­தித்­தார்கள்.

மேலும் சிலர் தனிப்­பட்ட ரீதியில் என்னைச் சந்­தித்­த­துடன் தொலை­பே­சி­யூ­டா­கவும் தொடர்பு கொண்டு என்னை ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மிங்­கு­மாறு வேண்டிக் கொண்­டார்கள். ஊடக மாநா­டு­களை நடத்­தியும் வேண்­டிக்­கொண்­டார்கள். இவர்கள் அனை­வரும் என்­னிடம் முன்­வைத்த பொது­வான விடயம் என்­ன­வெனில் நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்கும், தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் பிரச்­சி­னையைத் தீர்த்து ஒழுக்­க­முள்ள ஆட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நம்­பிக்­கை­யான தலை­மைத்­துவம் நாட்­டுக்குத் தேவை என்­ப­தாகும். அதற்­கா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­குங்கள் என்று அவர்கள் தெரி­வித்­தார்கள்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­மாறு தெரி­வித்து கிடைக்கப் பெற்­றி­ருக்கும் எந்தக் கோரிக்­கை­யா­னாலும் 1995 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாங்கள் தொடர்ந்­தி­ருக்கும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் அர­சியல் சக்­தி­க­ளுடன் இணைந்தும் அதே போன்று 17 ஆம் திருத்தம் ஊடாக முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் 19 ஆவது திருத்தம் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் ஜன­நா­யக மறு­சீ­ர­மைப்­புக்­காக தொடர்ந்து செயற்­ப­டு­ப­வர்­க­ளுடன் இணைந்­துமே செயற்­ப­டுவேன் எனவும் அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

பௌத்த பிக்­குகள் கோரிக்கை

இதே­வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வையே நிய­மிக்க வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கையில் சந்­தித்த பௌத்த தேரர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாமற் செய்யும் யோச­னையை முன்­வைத்து சபா­நா­ய­கரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கும்­ப­டியும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தேர்தல் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவர்கள் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். மாத்­தளை தம்ம குசல அனு­நா­யக்க தேரர் தலை­மையில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றது. இவ்­வாறு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்­கும்­ப­டியும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை நிய­மிக்­கும்­ப­டியும் தினமும் கோரிக்­கைகள் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வந்­த­டை­கின்­றன.
இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழு­வையோ தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையோ கலந்­து­ரை­யா­டாது கட்­சியின் அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொள்­ளாது தான் நினைத்­த­வாறு தானே ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று பிர­க­ட­னப்­ப­டுத்தி பிர­சா­ரங்­களில் ஈடு­படும் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வை­விட கட்சி ஓர் தீர்­மானம் எடுக்கும் வரை அமை­தி­காக்கும் சபா­ந­பா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவே ஜனா­தி­பதி வேட்­பாளர் பத­விக்கும் பொருத்­த­மா­னவர் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கரு­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது என்­றாலும் தனக்குக் கள­மி­றங்க வாய்ப்பு இல்­லாத சந்­தர்ப்­பத்­திலே அவர் இந்தத் தீர்­மா­னத்தை எட்­டுவார் என நம்­பலாம்.

ஜாதிக ஹெல உறு­மய கோரிக்கை

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பெரும்­பான்­மை­யி­னரின் விருப்­பத்­துக்கு அமை­யவே தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய கட்சி (பங்­காளிக் கட்சி) யின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஐக்­கிய தேசிய முன்­ணியில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் இரு­வரில் ஒருவர் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டே தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் தொடர்ந்தும் கால தாம­தத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

தொடர்ந்தும் கால­தா­ம­தப்­ப­டுத்­து­வது மேலும் சவால்­களை ஏற்­ப­டுத்தும் எனவும் தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய தேசிய முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே இர­க­சிய வாக்­கெ­டுப்­பினை நடத்தி வேட்­பா­ள­ரைத்­தெ­ரிவு செய்­யும்­படி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கோரி­யுள்­ளது.

தொடர்ந்தும் தாமதம் ஏற­பட்டால் தனது கட்சி தீர்­மா­ன­மொன்­றினை எடுக்க வேண்­டி­யேற்­படும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். அமைச்சர் சம்­பிக்­கவின் கருத்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் தனது கட்சி தொடர்ந்தும் அங்கம் வகிப்­பதா இல்­லையா? என்று தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது என்ற வகையில் அமைந்­துள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இது­வரை தேர்ந்­தெ­டுக்­காமை அக்­கட்­சிக்குள் இவ்­வி­வ­காரம் தொடர்பில் நிலவும் உட்­பூ­சல்­களை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி வேட்­பா­ள­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாஸ மற்றும் கரு­ஜ­ய­சூ­ரிய ஆகி­யோரில் ஒருவர் கள­மி­றக்­கப்­ப­டுவர். என்­றாலும் அதன் பின்பும் அக்­கட்சி பல சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சஜித் பிரே­ம­தாஸ கள­மி­றக்­கப்­படாவிட்டால் அவர் தனித்துக் கள­மி­றங்­குவார் எனத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எனவே ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை பெய­ரிட்­டதன் பின்பும் பெரும் நெருக்­கடி நிலைக்குள் தள்­ளப்­ப­டலாம் என எதிர்வு கூறலாம்.

அறிக்கை கிடைத்த பின்பே வேட்­பாளர் தெரிவு

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு தொடர்பில் சில தினங்­க­ளுக்கு முன்பு கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் இடையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது பிர­தித்­த­லைவர் சஜித் தனக்கே ஜனா­தி­பதி வேட்­பாளர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று அழுத்­த­மாகத் தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குழு­வொன்­றினை நிய­மித்தார்.

இக்­கு­ழுவில் அமைச்­சர்கள் ராஜித சேனா­ரத்ன, ரஞ்சித் மத்­தும பண்­டார, கபீர் ஹாசீம், மலிக்­ச­ம­ர­விக்­ரம மற்றும் பிர­த­மரின் ஆலோ­சகர் தினேஷ் வீரக்­கொடி ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர். இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்­கப்­பெற்­றதன் பின்பு ஜனா­தி­பதி வேட்­பாளர் யாரென அறி­விப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதே­வேளை, அமைச்­சர்­களின் கன­வு­களை விட கட்சி ஆத­ர­வா­ளர்­களின் கன­வு­க­ளுக்கே முத­லிடம் வழங்க வேண்­டு­மெனத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் நளின் பண்டார தொடர்ந்தும் இவ்விவகாரம் தீர்மானமொன்று எட்டப்படாது இழுபறியில் இருந்தால் இந்தத் தாமதத்திற்குக் காரணம் யாரென மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

செயற்குழுவே தீர்மானிக்கும்

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சந்தித்த சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்துள்ள அனைவரும் வெற்றி பெறக்கூடிய கொள்கைத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அனைத்துக் காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்பே ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் என அவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றமையை உறுதி செய்ய முடிகிறது.

ஐ.தே.க. செயலாளர்

‘ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவார காலத்துக்குள் அறிவிக்கப்படுவார்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ள திகதி உத்தியோகபூர்வமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் பிரசாரங்களில் இறங்கியுள்ள கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளர்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் சவால்கள் ஏற்பட்டால் சபாநாயகர் கருஜயசூரியவே ரணில் விக்கிரமசிங்கவினால் களமிறக்கப்படலாம். ஏனென்றால் கட்சியின் யாப்பினை மீறி ஜனாதிபதி வேட்பாளர் தானே எனக்கூறி பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவரை விட கட்சியின் யாப்பினை மீறாது கட்டுக்கோப்பாக செயற்படும் ஒருவரையே ரணில் விக்கிரமசிங்க விரும்புவார். அதனால் ஜனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கே இருக்கிறது என எதிர்வு கூறலாம்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.