கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க முற்பட கூடாது

0 1,537

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான திகதி குறிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய நவம்பர் 16 ஆம் திகதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. வேட்­பு­ம­னுக்கள் ஒக்­டோபர் 7 ஆம் திகதி ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

எனினும் ஐக்­கிய தேசிய முன்­னணி சார்பில் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்ள வேட்­பாளர் யார் என்­பது அறி­விக்­கப்­பட்ட பின்­னரே தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்­கிய தேசிய முன்னணியின் வேட்­பா­ள­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை பெய­ரிட வேண்டும் எனும் அழுத்தம் கட்­சிக்கு உள்­ளேயும் வெளியேயும் பல­மாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க இசைந்து கொடுப்­ப­தாக தெரி­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மாக அக் கட்­சிக்குள் பெரும் பனிப்போர் நில­வு­கி­றது. ரணிலா? சஜித்தா? கருவா? என்ற கேள்­விக்கு விடை கிடைக்­கும்­போது அக் கட்­சிக்குள் பாரிய பிள­வொன்று ஏற்­படக் கூடும் என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் எதிர்வு கூற­லா­க­வுள்­ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அடுத்த ஓரிரு நாட்கள் பெரும் சவால்மிக்கதாக அமையப் போகின்றன.

இதற்கிடையில் சஜித்தை ஓரங்கட்டவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது தவிர்க்கும் நோக்கிலும் ரணில் விக்ரமசிங்க காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காகவே நேற்றைய தினம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனையை விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். எனினும் அது வெற்றியளிக்கவில்லை.

மறுபுறம் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அரசியல் எதிரிகளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தற்போது ஒன்றுபட்டு காய்நகர்த்துவதாகவும் அறிய முடிகிறது.
எது எப்படியிருப்பினும் சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முற்படுவது ஆரோக்கியமானதல்ல.

இத் தேர்­த­லிலும் வழ­மை­போன்று சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களே தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக விளங்கும் என்ற வகையில் தமிழ் கட்­சி­க­ளிதும் முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் நிலைப்­பா­டுகள் தற்­போது அர­சியல் அரங்கில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன.

மறு­புறம் மற்­றொரு தீர்­மா­னிக்கும் சக்­தி­யான முஸ்லிம் கட்­சிகள் இது­வரை தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வில்லை. குறிப்­பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் சகல வேட்­பா­ளர்­களும் பெய­ரி­டப்­பட்ட பின்­னரே தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தலாம் எனக் கூறி வரு­கின்­றன. எனினும் தற்போது முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை முன்வைப்பதை காண முடிகிறது.

முஸ்லிம் சமூ­கத்தின் வாக்குப் பலத்தைப் பயன்­ப­டுத்தி இந்த ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­க­ளையும் முஸ்லிம் சமூகத்திடம் காண முடி­ய­வில்லை. வழ­மை­போன்று முஸ்லிம் கட்­சிகள் சமூ­கத்தின் நல­னை­யன்றி கட்­சி­களின் நலன்­க­ளையும் எதிர்­கால பொதுத்­தேர்தல் வெற்­றி­களையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டே தீர்­மா­னங்­க­ளுக்கு வர முயற்­சிக்­கின்­றன. இது துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

ஏப்ரல் 21 இன் முன்­னரும் பின்­னரும் சமூகம் எதிர்­நோக்­கிய, எதிர்­நோக்கி வரு­கின்ற பல்­வேறு தேசிய மற்றும் பிராந்­திய மட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டி­யுள்­ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை முடக்குவதற்கான மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதையும் காண முடிகிறது.

புதிய பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளமையும் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். அவ்வாறானதொரு சட்டம் நாட்டுக்கு அவசியம் என்றபோதிலும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து முஸ்லிம் தலைமைகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்­தியா, பிரித்­தா­னியா ஆகிய நாடு­களில் அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உதா­ர­ண­மாகக் கொண்டு இந்தச் சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளதாக அறிய முடிகிறது. எனினும் அவை இலங்கைச் சூழலுக்குப் பொருத்தமானதா என்பது பற்றி தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான சிக்கலான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை தீர்க்கக் கூடிய வேட்­பா­ள­ரையே சமூகம் ஆதரிக்க வேண்டியுள்ளது.

அவ்வாறாயின் சமூகம் சார்பில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டு அவர்களது இணக்கப்பாடு எழுத்து மூலம் பெறப்பட வேண்டும். அதன் பின்னரே அவர்களுக்கு ஆதரவு வழங்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
மாறாக ஒட்டுமொத்த சமூகத்தையும் உணர்ச்சி அரசியல் அலையின் பின்னால் இழுத்துச் செல்லவோ கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கவோ முஸ்லிம் தலைமைகள் முற்படக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.