நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பதை எதிர்ப்­பது சுய­ந­லத்தின் வெளிப்­பாடே

சுமந்திரன் குற்றச்சாட்டு

0 654

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான நகர்­விற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தைச் சேர்ந்­த­வர்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றமை பெரும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. இது அவர்­க­ளது உச்­ச­ள­வி­லான சுய­ந­லத்­தையும், சந்­தர்ப்­ப­வாத தன்­மை­யை­யுமே வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இது­கு­றித்து சுமந்­திரன் நேற்று தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்­ள­தா­வது , நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான நகர்­விற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்தைச் சேர்ந்­த­வர்கள் எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றமை பெரும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. இது அவர்­க­ளது உச்­ச­ள­வி­லான சுய­ந­லத்­தையும், சந்­தர்ப்­ப­வாத தன்­மை­யை­யுமே வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

சுமார் கால்­நூற்­றாண்டு கால­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­காக மக்­களால் ஆணை வழங்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், அந்த வாக்­கு­று­திகள் புறந்­தள்­ளப்­ப­டக்­கூ­டாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில், அதன் தனிப்­பட்ட அர­சி­யல்­நலன் நோக்­கங்­க­ளுக்­காக அன்றி, ஒரு கொள்கை என்ற அடிப்படையில் எத்தகைய கால அடிப்படையிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.