நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ரணிலின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு

சஜித்தை ஓரங்கட்டுவதற்கான நகர்வு என்றும் குற்றச்சாட்டு

0 791

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் நேற்­றைய தினம் அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­க­ாளிக் கட்­சி­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­களும் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்து குறித்த யோசனை கைவி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான திகதி குறிக்­கப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்ட பின்னர் அவ­சர அவ­ச­ர­மாக இவ்­வாறு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்க முற்­ப­டு­வதன் பின்­னணி என்ன என்றும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது பல அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

நேற்று பிற்­பகல் 3.30 மணிக்கு இடம்­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது குறித்த விடயம் கலந்­து­ரை­யா­ட­லுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. எனினும் இந்த யோச­னைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவும் அவர் சார்ந்த அமைச்­சர்­களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் உள்­ளிட்ட பலர் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர்.

” தேர்தல் ஒன்று அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் இவ்­வா­றான ஒரு யோச­னையை முன்­வைப்­பது எம்மைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். தேர்­த­லுக்குச் செல்­வதே இப்­போ­தைக்­குள்ள தெரி­வாகும். தகு­தி­யான ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்யும் பொறுப்பை மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் ” என அமைச்சர் ஹக்கீம் இதன்­போது குறிப்­பிட்டார்.

”நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்க வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. எனினும் அதனைச் செய்­வ­தற்­கான தருணம் இது­வல்ல. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டு­விட்ட நிலையில் இதனைச் செய்ய முடி­யாது. முதலில் தேர்­த­லுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் இது­கு­றித்து ஆராய முடியும் என தாம் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்­ட­தாக அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ளரைப் பெய­ரிடும் விட­யத்தில் கருத்து முரண்­பா­டுகள் நீடிக்­கின்ற நிலையில், சஜித் பிரே­ம­தா­சவை வேட்­பா­ள­ராக நிய­மிக்கும் யோச­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இந்த நகர்வை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அக் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. பிர­த­மரின் இந்த யோச­னைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவும் ஆதரவு தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகள் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்த நிலையில் ரணிலின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.