தேர்தலுக்கு முன் யாப்புத் திருத்தம் தேவை

0 1,685

இது­வரை இலங்­கையில் அமையப் பெற்­றுள்ள ஒவ்­வொரு அர­சாங்­கத்­தையும் இத­யமோ மூளையோ இன்றி இயங்கும் ‘புல்­டோஸர்’ ஒன்­றுக்கு ஒப்­பி­டலாம். புல்­டோ­ஸரால் கட்­டு­மானம் ஒன்றை உடைத்து இடித்துத் தரை­மட்­ட­மாக்­கத்தான் முடியும். கட்­ட­டத்தை புன­ர­மைக்­கவோ நிர்­மா­ணிக்­கவோ அதனால் இய­லாது.

இலங்கை அர­சாங்கம் போன்றே இலங்கை மக்­களும். இவர்கள் குப்பை மலை­யடி வாரத்தில் வாழும் மக்­களைப் போன்றே வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். குப்பை மலை­ய­ருகே வாழும் மக்கள் தமது வாழ்­வுக்கு சவா­லாக அமையும் வகையில் குப்­பைகள் குவிக்­கப்­ப­டு­வதை விரும்­பு­வ­தில்லை. ஆரம்­பத்தில் தாம் வதியும் பகு­தியில் குப்­பைகள் கொட்­டப்­பட்டு அது மேடு, மலை­யாக உயரும் போது தாமும் தமது பிள்ளை குட்­டி­களும் சுகா­தார சீர்­கு­லைவை எதிர்­நோக்­கு­வ­தாக மக்கள் குப்பை குவிப்­புக்கு எதிர்ப்புத் தெரி­விப்பர். ஆனால் அந்த எதிர்ப்­புகள் எத­னையும் பொருட்­ப­டுத்­தாது குப்­பைகள் கொட்­டு­வது தொடரவே செய்கிறது. பல­வந்­த­மாக இது நடந்­தேறும் நிலையில் அதனைச் சகித்துக் கொள்­வதைத் தவிர மக்­க­ளுக்கு வேறு வழி இருக்­காது. அநா­த­ர­வான நிலைக்குத் தள்­ளப்­பட்ட இம்­மக்கள் குப்பை கூளங்கள் அழுகி வீசும் துர்­நாற்றம் ஒரு­புறம், மறு­பு­றத்தில் குப்­பை­களால் பெருகும் இளை­யான்கள் உண­வு­களில் மொய்க்கும் தொல்லை என்று அசௌ­க­ரியங்களுக்குப் பழக்­கப்­பட்டுப் போகி­றார்கள். கொலன்­னா­வை­யிலும் நடந்­தது இதுவே.

பொது­வான கண்­ணோட்­டத்­துடன் நோக்­கு­கையில் இலங்கைப் பிர­சைகள் ஒவ்­வொ­ரு­வரும் குப்­பை­மே­டு­க­ளுக்­க­ருகே வாழும் மக்கள் நிலையைப் போன்றே வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். மக்­களை எப்­போதும் இன்­னல்­க­ளுக்குள் தள்ளும் விதத்­தி­லேயே நாட்டு நடப்­புகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அரசு குப்பை கூளங்கள் விட­யத்தில் நடந்து கொள்­வது போன்றே நாட்டு மக்கள் விட­யத்­திலும் அரசு செயற்­ப­டு­கி­றது. நாட்டில் நடக்கும் எல்லா நாச­கார அநி­யா­யங்­க­ளையும் பொறுத்­துக்­கொண்டு வாழ்­வ­தற்கு நாட்டு மக்­களும் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வாறு மக்கள் குப்­பை­கூள நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் உண்­மை­யான குப்பை கூளப் பிரச்­சினை குறித்தும் நாம் கவ­னத்தைச் செலுத்­துவோம்.

குப்பைப் பிரச்­சினை

இலங்­கையில் வருடம் ஒன்­றுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­படும் குப்பை கூளங்­களின் அளவு 2.3 மில்­லியன் தொன் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவற்றுள் 60 வீத­மா­னவை மேல் மாகா­ணத்தில் சேரும் குப்­பை­க­ளாகும். பொது மக்­களின் ஒத்­து­ழைப்­புடன் இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணலாம். ஆனால் குப்பை விட­யத்தில் பொது மக்கள் தெளி­வூட்­டப்­படும் செயற்­திட்­டங்கள் எதுவும் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. குப்­பைகள் வகைப்­ப­டுத்தி பிரித்­தெ­டுத்து சம்­பந்­தப்­பட்­டோ­ரிடம் ஒப்­ப­டைக்கும் முறை­கூட முறை­யாகப் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. குப்­பை­யி­லி­ருந்து உரப்­ப­சளை, எரி­வாயு, மின்­சாரம் போன்­றன உற்­பத்தி செய்யும் முறை­மையும் இலங்­கையில் இல்லை. ஆனால் சேரும் குப்­பை­களை தேர்­ந்தெ­டுத்­துள்ள ஓரி­டத்தில் குவியச் செய்யும் காரியம் மாத்­திரம் நடந்­தேற்­றப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் சுமார் 21 மில்­லியன் மக்கள் வாழ்­கி­றார்கள். இங்கு வருடம் ஒன்­றுக்கு 2.3 மில்­லியன் தொன் குப்­பைகள் சேரு­கின்­றன. ஆனால் சுமார் 24 மில்­லியன் மக்கள் தொகையைக் கொண்ட அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஒரு வரு­டத்தில் குவியும் குப்­பையின் அளவோ 45 மில்­லியன் தொன் என மதிப்­பி­டப்­ப­டு­கி­றது. இத்­தொ­கையை இலங்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் கிட்­டத்­தட்ட 19 மடங்கு அதி­க­ரிப்­பாகும். மீள் சுழற்­சிக்­குட்­ப­டுத்­தப்­படுவதால் அவ்­வ­ளவு பெருந்­தொ­கை­யா­க­வி­ருந்தும், அந்­நாட்டால் நிலை­மையை சீராக்க முடிந்­துள்­ளது. ஆனால் இலங்­கையில் சிறு தொகை­யா­க­வி­ருந்தும் அதனை வெற்­றி­க­ர­மாக மீள்­சு­ழற்சி செய்­யவோ அல்­லது வேறு திருப்­தி­க­ர­மான முறை­களில் ஈடு­ப­டுத்­தவோ எங்கள் நாட்டால் இய­லாமல் போயுள்­ளது. எமது நாட்டு ஆட்­சி­யா­ளர்­களின் இய­லா­மையும், அறி­வின்­மையும், கவ­ன­யீ­னமும் இதன்­மூலம் புரிந்து கொள்ள முடி­கி­றது.

ஆரம்­பத்தில் இலங்­கையில் பெரிய குப்பை மலை உரு­வாக்­கப்­பட்­டது கொட்­டாஞ்­சே­னை­யி­லாகும். 2009 மார்ச் மாதம் அதில் ஏற்­பட்ட வெடிப்பு அனர்த்­தத்தைத் தொடர்ந்து இடம்­மாற்­றப்­பட்­டது. நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்­க­மைய அங்கு குப்பை சேக­ரிப்­புக்குத் தடை விதிக்­கப்­பட்­டது. அதன் விளை­வாக கொலன்­னாவைப் பகு­தியில் ஓரிடம் அதற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அங்கும் இரண்டு ஏக்கர் நிலப்­ப­ரப்பில் தற்­கா­லி­க­மாக குப்­பைகள் கொட்­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அங்கும் குப்பைக் குவியல் பன்­ம­டங்கு பெருக 2 ஏக்கர் நிலம், 21 ஏக்கர் பரப்­ப­ளவில் குப்­பைகள் குவியும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. அத்­துடன் குப்பை மலையும் 300 அடி உய­ரத்­திற்கு வளர்ந்­தது. அதன் விளை­வாக 2017 ஏப்ரல் 14 ஆம் திகதி குப்பை மலை சரிந்து பாரிய அனர்த்தம் ஒன்று விளைந்­தது. குப்பை மலை சரிந்து மக்கள் கொல்­லப்­படும் ஒரு நாடாக இலங்கை வர­லாற்றில் இடம்­பி­டித்­துக்­கொண்­டது.
கொலன்­னாவ குப்பை மலையால் எதிர்­கொண்ட பேர­னர்த்­தத்தில் கூட இலங்கை பாடம் படிக்கத் தவ­றி­விட்­டது. இதனைத் தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தைத் தான் மாற்றிக் கொண்­ட­தே­யன்றி நிரந்­தரத் தீர்­வுக்­கான வழி­வ­கை­களைக் காண­வில்லை. குப்­பைக்­காக அடுத்த இட­மாக புத்­த­ளத்தைத் தேர்ந்­தெ­டுத்துக் கொண்­டது.

கொழும்­பி­லி­ருந்து புத்­தளம் வரை­யிலும் புகை­யி­ரதம் மூலமே குப்­பைகள் எடுத்துச் செல்­லப்­ப­டு­வ­தாகவே ஆரம்­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இப்­போது ரிப்பர் வண்டி மூலமே கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது. நாள் ஒன்­றுக்கு குப்பை கொட்டும் போக்­கு­வ­ரத்­துக்­காக வண்டியொன்றில் 10 தொன் வீதம் எடுத்துச் செல்ல 30 ரிப்பர் வாக­னங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஒரு வாகனப் போக்­கு­வ­ரத்­துக்­காக 340 கிலோ மீற்றர் பயணத்­தூரம் அமை­கி­றது. இதற்­காக ஒரு ரிப்­ப­ருக்கு ஒரு இலட்சம் ரூபா செல­வி­டப்­ப­டு­கி­றது. எனவே 30 வாக­னங்­க­ளுக்கும் நகர சபை தினம் ஒன்­றுக்கு 30 இலட்சம் ரூபாவை செல­வி­டு­கி­றது. இந்த வகையில் ஒரு கிலோ குப்­பைக்கு 10 ரூபா செல­வி­டப்­ப­டு­கி­றது. அவற்றை சேக­ரிக்கும் வகையில் கிலோ­வொன்­றுக்கு 10 ரூபா வீதம் செல­வா­கி­றது. எனவே மொத்­தத்தில் ஒரு கிலோ குப்­பைக்­காக 20 ரூபாவை நக­ர­சபை செல­வி­டு­கி­றது.

இலங்கை எந்த வகை­யி­லா­வது குப்­பை­களை மீள் சுழற்­சிக்குப் பயன்­ப­டுத்தும் விட­யத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்­து­வ­தில்லை. குப்பைப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக மக்­க­ளுக்கு தெளி­வூட்­டு­வதன் முக்­கி­யத்­துவம் குறித்தும் சிந்­திப்­ப­தில்லை. இதனை தேசிய மட்­டத்தில் முன்­னெ­டுத்துச் செல்­லவும் செயலில் இறங்­க­வில்லை. இலங்­கையின் இந்த மந்­த­கதி குப்பை பிரச்­சி­னையில் மட்டும் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதர விட­யங்­க­ளிலும் இலங்கை அசட்­டை­யா­கவே நடந்து கொள்­கின்­றது.

கல்விப் பிரச்­சினை

இலங்­கையின் பொது­வான கல்வி முறை­மை­யிலும் பாரிய சிக்­கலே காணப்­ப­டு­கி­றது. பாட­சாலை முறை­மை­யிலும் வசதி படைத்­தோ­ருக்கு சிறந்த பாட­சா­லை­களும் வறிய சாதா­ரண மக்­க­ளுக்கு தரம் குறைந்த பாட­சா­லை­க­ளுமே கிடைக்கக் கூடி­ய­தொரு சூழ்­நி­லையே இங்கு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தரம் ஒன்று முதல் உயர்­தரம் வரையில் பிள்­ளைகள் பாடங்­களை மனப்­பாடம் செய்யும் கல்வி போதனா முறையே இங்கு நிலவும் மற்­றொரு குறை­பா­டாகும். எழுத்து முறை­மையோ புத்­தக முறை­மையோ அமுலில் இல்­லாத காலத்­தைய கல்வி முறைதான் அது. நாம் 21 ஆம் நூற்­றாண்­டிலே வாழ்­கிறோம் என்­பதை மறந்தே நடக்­கிறோம். இந்த மனப்­பாடக் கல்வி முறையால் பிள்­ளைகள் எந்­த­ளவு பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­பது கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. நாட்டின் எதிர்­கால மேம்­பாட்­டுக்கு கல்வி எந்­த­ளவு தூரம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தென்­பதில் கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. இதனால் நாட்டின் கல்வி பின்­தள்­ளப்­பட்டுக் கொண்டே போகி­றது. அது வெளிப் பார்­வைக்கு மெரு­கூட்­டப்­பட்டுக் கொண்டு போகி­ற­தே­யன்றி நவீன முறையில் மாற்றம் செய்­யப்­ப­டு­வ­தில்லை. இது பற்றி சம்­பந்­தப்­பட்ட எவ­ருக்கும் அக்­கறை இல்லை.

விவ­சாயப் பிரச்­சினை

இதற்­க­டுத்து இலங்­கையில் விவ­சாயத் துறையை உற்­று­நோக்­கினால் அதுவும் இன்னும் பழைய யுக முறை­யிலே நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. விவ­சா­யத்­திற்­கென பயன்­ப­டுத்­தப்­படும் பெரு­வா­ரி­யான நிலங்கள் நெற்­ப­யிர்ச்­செய்­கைக்­கென்றே ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. விவ­சா­யத்­து­றையில் மிகவும் குறைந்த வரு­மானம் தரக்­கூ­டிய பயி­ராக நெல் வேளாண்­மையே விளங்­கு­கி­றது. உதா­ர­ணத்­திற்கு தேயிலை, தென்னை, இறப்பர் பயிர்ச்­செய்­கைக்­காக 732442 ஹெக்­டேயர் நிலப்­ப­ரப்பும் இதர பயி­ரின வகை­க­ளுக்­கென்று 146181 ஹெக்­டேயர் பரப்பும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நெற்­ப­யி­ருக்­கென 922025 ஹெக்­டேயர் நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. பயிர்ச்­செய்­கையில் எத்­த­கைய பாதிப்­பு­களும் ஏற்­ப­டாத நிலையில் விவ­சாயி ஒருவர் போகம் ஒன்­றுக்கு சுமார் 40000 ரூபா அளவில் வரு­மா­ன­மாகப் பெறு­கிறார். ஈர­வ­லயப் பிர­தே­சங்­களில் உள்ள வயல் நிலங்­களில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு பகு­தி­களில் நெற்­செய்­கையோ அல்­லது வேறு பயிர்­வ­கை­களோ செய்கை பண்­ணப்­ப­டாது வெறு­மை­யாக விடப்­பட்­டுள்­ளதைக் காண­மு­டி­கி­றது. நெற்­ப­யிர்ச்­செய்­கை­யாளர் மிகவும் குறைந்த ஆதாயம் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவே உள்­ளனர்.

உலர்­வ­லய விவ­சா­யி­க­ளுக்கு தம் மேட்டு நிலங்­களில் பண்­ணப்­படும் பயிர்ச்­செய்­கை­களின் போது கிடைக்கும் வரு­மா­னத்தில் பெரும்­ப­குதி வன விலங்­கு­களால் சூறை­யா­டப்­பட்டு விடு­வதும் மற்­றொரு பாதிப்­பாகும். வன­வி­லங்­கு­களால் விவ­சா­யி­யொ­ருவர் 40 வீதம் அள­வி­லான வரு­மா­னத்தை இழக்­கிறார். ஆனால் விவ­சா­யத்­து­றைக்குப் பாரிய பாதிப்பைத் தரும் வன­வி­லங்­கு­களை ஒழித்­துக்­கட்­டு­வ­தில்லை. நீண்­ட­கா­ல­மாக இந்­நாட்டு அர­சாங்­கங்கள் மூடத்­த­ன­மாக கடைப்­பி­டித்­து­வரும் சமய ரீதி­யி­லான ஜீவ காருண்ய முறை­மையே அதற்குத் தடை­யா­க­வுள்­ளது. வேளாண்மைச் செய்­கையில் இலங்கை ஆட்­சி­யா­ளர்கள் மகா பராக்­கி­ர­ம­பாகு மன்­னனின் காலச் சிந்­த­னை­யி­லேயே உள்­ளனர். இலங்­கையில் ஒரு கிலோ அரிசி உற்­பத்­திக்­காக 600 லீட்டர் நீர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உண­வுற்­பத்­தியில் நவீன முறை­மையைப் பயன்­ப­டுத்­தாத ஒரு நாடாக இலங்கை விளங்­கு­கி­றது. இலங்கை விவ­சாயக் குடும்­பங்கள் மிகவும் கீழ் மட்­டத்­திலே தான் உழன்று கொண்­டி­ருக்­கி­ன்றன. அவர்கள் கடன் பொறி­க்குள்ளும் சிக்­குண்டு தவிப்­ப­தையும் காண­மு­டி­கி­றது. கிரா­மிய மட்ட பெண்­களும் நுண்­கடன் சிக்­க­லுக்குள் அகப்­பட்டுத் தவிக்கும் பரி­தாபம் வேறு.

தீர்க்­கப்­ப­டாத இன, மத பிரச்­சினை

இலங்­கையில் தலை­வி­ரித்­தாடிக் கொண்­டி­ருக்கும் இன, மத, குல பிரச்­சி­னை­ கூட இது­வரை தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை. இது விட­ய­மாக சீர­மைப்பு எதுவும் கைக்­கொள்­ளப்­ப­டாது, நிலைமை மேலும் சிக்­க­லுக்குள் தள்­ளப்­பட்­டுக்­கொண்டே போகி­றது. அந்­தந்த இன, மத, குலப் பிரி­வி­ன­ருக்­கு­ரிய உரி­மை­களை உரி­ய­மு­றையில் வழங்­கு­வ­திலும் இலங்கை இது வரையில் தோல்வி கண்டே வந்­துள்­ளது. சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னரும் இந்­நி­லைமை உக்­கி­ர­ம­டைந்து வந்­த­தே­யன்றி சீர­டை­ய­வில்லை.

1970, 80 களிலே சிங்­கள வாலி­பர்கள் இரு கிளர்ச்­சி­களை மேற்­கொண்­டனர். அதே போன்று தமிழ் இளை­ஞர்கள் 30 வரு­டங்கள் உள்­நாட்டுப் போரில் ஈடு­பட்­டனர். அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. இவ்­வாறு பல தசாப்­தங்­க­ளாக நாட்டில் இரத்த ஆறு பெருக்­கெ­டுத்து ஓடி­யது. இதனால் நாடு கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­வதில் தோல்­வி­யையே சந்­தித்து வந்­தது. மேற்­படி குழப்பம், கிளர்ச்சி, போராட்­டங்­க­ளை­யெல்லாம் அடக்­கி­யொ­டுக்­கு­வ­திலே அரசு தயவு தாட்­சண்­ய­மின்றிச் செயற்­பட்­டது. அவை அடக்­கப்­ப­டத்தான் வேண்டும். மாற்றுக் கருத்­தில்லை. ஆனால் அத்­த­கைய போராட்­டங்கள் ஏன் வெடிக்­கின்­றன. அதற்­கான காரணம் என்ன என்­பன போன்ற விட­யங்­களைத் தேடிப்­பார்த்து அவற்றைத் தீர்த்து வைப்­பதில் எமது அர­சாங்­கங்கள் எத்­த­கைய கரி­ச­னையும் காட்­ட­வில்லை. மேற்­கண்ட கிளர்ச்­சி­களில் இந்­நாட்டின் சிங்­கள, தமிழ் வாலி­பர்கள் பெருந்­தொ­கை­யானோர் பலி­யா­கி­யுள்­ளனர். இரா­ணு­வமும் போராட்­டக்­கா­ரர்­களும் மோதிக்­கொண்­டதால் கிட்­டத்­தட்ட மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நாட்டில் அனா­சா­ரமும் அநா­க­ரி­க­முமே மேலோங்­கி­யி­ருந்­தன. இக்­கால கட்­டங்­களில் மக்­களும் பீதி­யு­டனே காலம் கழித்து வந்­தனர். அரசும் அர­சி­யல்­வா­தி­களும் இதனை மேலும் ஊதிப் பெருப்­பித்து குளிர்­காய்­வ­தி­லேயே தம் கைவ­ரி­சையைக் காட்டி வந்­தனர்.
உள்­நாட்டுப் போராட்­டங்­களை வெற்றி கொண்ட கையோடு நாட்­டையும் சமூ­கத்­தையும் புனர்­நிர்­மாணம் செய்­வ­தி­லேயே அரசு தன் கவ­னத்தைச் செலுத்­தி­யி­ருக்க வேண்டும். மேற்­படி சிக்­க­லுக்­குள்­ளான நாடுகள் சிக்கல் முடிந்த மறு­க­ணமே நாட்டின் புனர்­நிர்­மா­ணத்­தையே தம் பணி­யாக மேற்­கொள்­வ­துதான் மரபு. ஆனால் இலங்கை அந்த இடத்­துக்குக் கூட செல்­ல­வில்லை. இதனால் பிரச்­சி­னைகள் தீர்த்து வைப்­ப­தற்­குப்­ப­தி­லாக மேலும் மேலும் உக்­கி­ர­ம­டை­யவே அது வழி செய்­தது.

இலஞ்­சமும் மோச­டியும்

இலஞ்சம், ஊழல், மோசடி அரச நிறு­வ­னங்­களில் உச்­ச­கட்­டத்­திற்கே சென்­றுள்­ளன. இவையும் நாட்டின் வளர்ச்­சியில் பாரிய அடி­யா­கவே உள்­ளன. தேசத்தின் பாது­காப்பில் கட­வுச்­சீட்டு காரி­யா­ல­யமும் தேசிய ஆள் அடை­யாள அட்டை அலு­வ­ல­கமும் பிர­தான பங்கு வகிக்­கின்­றன. இவற்றின் ஒரு கவுண்­டரில் முறை­யாக கட­வுச்­சீட்­டுக்கள் அடை­யாள அட்­டைகள் விநி­யோ­கிக்க மற்­றொரு கவுண்­டரில் பெருந்­தொகை இலஞ்சம் எடுத்­துக்­கொண்டு போலி­யான ஆவ­ணங்­களை வழங்கி வரு­கின்­றன. இவை மிகவும் நீண்ட கால­மாக இலங்­கையில் இடம்­பெற்று வரக்­கூ­டிய மோச­டி­க­ளாகும். அரசும் இவற்றை உண­ரா­ம­லில்லை.

கட­வுச்­சீட்டுக் காரி­யா­லயம் பெருந்­தொகைப் பணம் செலவு செய்து பழைய கணினி முறை­மையை மாற்றி நவீன கணினித் தொகு­தி­யொன்றை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­தது. ஆனால் புதிய முறை­மை­யிலும் பழைய விளை­யாட்­டுகள் தொட­ரவே செய்­துள்­ளன. டுபாய் நாட்­டி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட மதுஷ் பயன்­ப­டுத்­திய போலி கட­வுச்­சீட்டு குடி­வ­ரவு குடி­ய­கல்வுத் திணைக்­க­ளத்­தினால் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாகும்.

உள்­நாட்டு போரின் போது 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி கப்பம் கோரப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டனர். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்பு பட்­ட­தாக முறை­ப்பாடு முன்­வைக்­கப்­பட்­டவர் லெப்­டினன்ட் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்­டி­யா­ரச்­சி­யாவார். அப்­போது நாட்டை விட்டு வெளி­யேறி பின்னர் நாட்­டுக்குள் பிர­வே­சித்த போது கைது செய்­யப்­பட்டார். இவர் இதற்­காக பயன்­ப­டுத்­திய போலிக் கட­வுச்­சீட்டும் நவீன மயப்­ப­டுத்­தப்­பட்ட கணினி தொகு­தி­யூ­டாகப் பெறப்­பட்ட தென்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. நீதி மன்­றத்­தி­னூ­டாக கட­வுச்­சீட்டு பொறுப்­பேற்கப்பட்ட பின்னர் வெளி­நாடு செல்­வ­தற்கு தடை செய்­யப்­ப­டு­பவர் போலி கட­வுச்­சீட்டு பெற்று நாட்டை விட்டும் தப்­பிச்­செல்லும் மர்மம் கண்டு பிடிக்­க­ப்பட வேண்டும்.

ஆள் அடை­யாள அட்டைக் காரி­யா­ல­யமும் இவ்­வாறு போலி அட்­டைகள் தயா­ரித்து வழங்­கு­வ­திலும் பின் நிற்­க­வில்லை.

ஒரே குழு­வினர் இரு­பது நிறு­வ­னங்­களின் பெயரில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக வற்­வரி மோசடி ஒன்றில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர். இம் மோச­டி­யினை கணக்­காய்வுத் திணைக்­களம் 2004 ஆம் ஆண்டு இறு­தியில் கண்­ட­றிந்­துள்­ளது. அது வரையில் 3.57 பில்­லியன் ரூபா வரையில் மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கா­கவும் போலி­யாகத் தயா­ரிக்­கப்­பட்ட 13 ஆள் அடை­யாள அட்­டைகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் இப்­போலி அட்­டைகள் யாவும் ஆள் அடை­யாள அட்டை அலு­வ­ல­கத்­தி­னூ­டா­கவேதான் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.
உள்­நாட்டு போர் நடந்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே ஆள் அடை­யாள அட்டைக் காரி­யாலயத் தலை­வ­ரினால் (விஜய கே.வீ. ரண­சிங்க) புலிகள் அமைப்­புக்­குப்­போ­லி­யான பெருந்­தொகை ஆள் அடை­யாள அட்­டைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­ற­வியல் மோசடித் திணைக்­க­ளத்­தினால் கண்டு பிடிக்­கப்­பட்­டது.

சந்­தி­ரிக்கா அம்­மை­யாரின் ஆட்­சியில் அமைச்­ச­ராக இருந்த டக்ளஸ் தேவா­னந்­தவைக் கொலை செய்­வ­தற்­கான முயற்சி இடம் பெற்றது. அதற்காக வந்த தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யி­ட­மி­ருந்த ஆள் அடை­யாள அட்டை மூல­மா­கவே தான் இந்த போலி அடை­யாள அட்­டைகள் விநி­யோ­கிக்­கப்­பட்ட தக­வல்கள் அம்­ப­லத்­துக்கு வந்­தன. உடனே சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கா­ரியை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வாவுடன் இவருக்கிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக கைது செய்யப்படுவதினின்றும் தவணை பெற்றுக்கொண்டார்.

இதே போன்றே அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமையகத்தில் வைத்து கொலை செய்யும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனை முன்னெடுத்த தற்கொலை தாரியான பெண்ணிடம் இருந்த ஆள் அடையாள அட்டையும் மேற்படி புலிகளுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை ஆள் அடையாள அட்டைகளில் ஒன்று என்பதும் அப்போது கண்டறியப்பட்டது. ஆள் அடையாள அட்டை குற்றவியல் மோசடியில் ஈடுபட்ட மேற்படி உயர் அதிகாரிக்கு அப்போதிருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் கைதாவதில் தாமதம் ஏற்பட்டு காலம் கடந்தே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்றத்தில் அவருக்கெதிரான வழக்கு விசாரணை இருந்த நிலையில் அவர் மரணமானார். அத்துடன் விடயம் முற்றுப்பெற்றது.

ஆள் அடையாள அட்டை விடயத்தில் இவ்வாறெல்லாம். மோசடி நிகழ்ந்தமை கண்டறியப்பட்ட பின்னரும் அவை தொடராதிருக்க அரசு எத்தகைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை.

தவறு– குற்றம் கண்டறியப் படுமிடத்து அதனைச் சீர் செய்யாது அது தொடர்ந்தும் இடம்பெற வாய்ப்பளிக்கும் இலங்கையின் சட்ட ஒழுங்கின் இலட்சணம் இவ்வாறே இருந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு மிகவும் அவசியப்படுவது தேர்தல் ஒன்றல்ல யாப்புத் திருத்தம் ஒன்றேயாகும். யாப்புத் திருத்தத்தின் பின்பே தேர்தல் ஒன்றுக்குச் செல்லவேண்டும். பெயரளவிலான ஜனாதிபதி முறைமையொன்றுக்கான தேர்தலே நடக்கப்போகிறது. எனவே அதில் கரிசனை காட்டத் தேவையில்லை. அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றுக்கேதான் தாம் வரிந்து கட்டிக்கொண்டு காரியமாற்ற வேண்டும்.

சிங்­க­ளத்தில்:
விக்டர் ஐவன்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

நன்றி– ராவய வார இதழ்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.