பாலமுனையில் ஆயுதம் வெடிபொருட்கள் மீட்பு

0 1,391

அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில், பால­முனைப் பிர­தே­சங்­களில் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­த­லின்­போது காணி­யொன்றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளையும் குண்­டுகள் தயா­ரிக்கும் வெடி­பொ­ருட்­க­ளையும் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் கல்­முனைப் பகுதி இணைப்­பா­ள­ராக செயற்­பட்டு வந்த குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கல்­முனை சியா­மி­ட­மி­ருந்து பெறப்­பட்ட தக­வலை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நேற்­றைய தினம் குறித்த ஆயு­தங்­களும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

புல­னாய்வுத் துறை­யி­ன­ருக்கு கிடைத்த தக­வலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அம்­பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் தலை­மை­யி­லான பொலிஸ் அதி­கா­ரிகள் மேற்­கொண்ட தேடு­தலின் போது இவை கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.
தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் அம்­பாறை மாவட்ட பிர­தம செயற்­பாட்­டா­ள­ரான சியாம் என்­ப­வரின் உற­வி­னரின் காணி அமைந்­துள்ள பால­முனை 06, உது­மா­புரம் என்னும் பகு­தியில் இருந்தே இப்­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.
இக்­கா­ணியில் உள்ள வாழைத்­தோட்டம் அமைந்­துள்ள பகு­தியில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் சியா­மினால் மறைத்து வைக்­கப்­பட்­ட­தாகக் கரு­தப்­படும் பெருந்­தொ­கை­யான இறு­வட்­டுகள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. குறித்த இடத்­திற்கு அண்­மையில் உள்ள பகு­தி­யி­லேயே நேற்­றைய தினம் மண்ணில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இந்த வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

பொலி­ஸாரின் இத்­தே­டுதல் நட­வ­டிக்­கை­யின்­போது ரி-56 ரக துப்­பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் மெக் ஒன்றும், 30 துப்­பாக்கி ரவை­களும் கைப்­பற்­றப்­பட்­டன. அத்­தோடு, டெட்­ட­னேற்­றர்கள்- 07, வோட்டர் ஜெல், வயர்கோர்ட்- 02, பெற்­றரி- 04, டைமர்- 02, யூரியா மற்றும் அமோ­னியா அடங்­கிய தூள் பொதிகள், சலோரேப் -02, மெழு­கு­திரி- 02, இரும்புக் குழாய்கள், வெடி­பொ­ருட்கள் தயா­ரிக்கும் உப­க­ர­ணங்கள் என்­பன இதன்­போது பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

தேசிய உள­வுத்­து­றையின் தக­வ­லினை மையப்­ப­டுத்தி அம்­பாறை வலய சிறப்பு பொலிஸ் குழு­வினர், அம்­பாறை தட­ய­வியல் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அக்­க­ரைப்­பற்று பொலிஸார் இணைந்து இந்த தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர்.

இதே­வேளை, கன­ரக வாக­னத்தின் துணை­கொண்டு இக்­கா­ணியின் முழுப் பரப்பும் தோண்­டப்­பட்டு மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள மேல­திக பொருட்­களை தேடும் பணியில் பொலிஸார் ஈடு­பட்­டனர்.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகா­வான சியாமின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் கடந்த மே மாதம் 28, 29ஆம் திக­தி­களில் 15 இலட்சம் ரூபா பணம் மீட்­கப்­பட்­ட­துடன், மே மாதம் 31 ஆம் திகதி பாமுனைப் பிரதேசத்திலிருந்து மேலும் 35 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அத்துடன் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியிலிருந்து பயங்கரவாதி சஹ்ரானின் மடிக் கணினியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.