கோப் குழு முன் ஆஜராகுமாறு ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அவரின் மகன் ஹிராஸுக்கும் அழைப்பு

0 1,340

கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் ஆளு­நரும் பற்­றி­கலோ கெம்­பசின் தலை­வ­ரு­மான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வையும் அவரின் மக­னையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி அரச நிறு­வ­னங்கள் தொடர்­பான விசா­ர­ணைக்­கு­ழு­வான கோப் குழுவின் முன் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. கோப் குழுவின் முன் ஆஜ­ரா­கு­மாறு முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ், மகன் ஹிராஸ் ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோ­ருக்கு நேற்று முன்­தினம் ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவர்கள் இரு­வரும் வெளி­நாடு சென்­றி­ருப்­பதால் கோப் குழுவின் முன்னால் ஆஜ­ரா­க­வில்லை. இது­கு­றித்து ஏற்­க­னவே அவர்கள் கோப் குழு­விற்கு அறி­வித்­தி­ருந்­தனர். 

நேற்று முன்­தினம் (செவ்­வாய்க்­கி­ழமை) கூடிய கோப்­குழு அவ்­வி­ரு­வ­ரையும் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 9 ஆம் திகதி ஆஜ­ரா­கு­மாறு கோப் குழுவின் தலை­வரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்தல் விடுத்துள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.