ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கட்டாரில் கைது

0 1,284

ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணிய இலங்­கை­யர்­களின் வலை­ய­மைப்பின் பிர­தான நப­ராகக் கரு­தப்­படும் ஒரு­வரை, 4/21உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைது செய்து தொடர்ந்தும் தடுத்­து­வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் குறித்த சந்­தேக நபர் கட்டார் பொலிஸ் நிலை­ய­மொன்றால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்­கிய உறுப்­பினர் பஸ்ஹுல் சஹ்­ரானும் குறித்த சந்­தேக நபரும் கட்­டா­ரி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திப் பேணி­யுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (சி.ஐ.டி.) கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

கட்­டாரில் தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்­சா­புடன் தங்­கி­யி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்­பவர் கட்டார் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு இரண்­டரை மாதம் தடுப்புக் காவல் விசா­ர­ணை­களின் பின்னர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்ளார். கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்­தப்­பட்­டுள்ள குறித்த நபரை சி.ஐ.டி., விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்து தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

இது­கு­றித்த தக­வல்­களை கிங்ஸ்­பரி ஹோட்டல் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணைப் பிரிவு அறை இலக்கம் 4 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கீர்த்­தி­சிங்க நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு விஷேட விசா­ரணை அறிக்கை ஒன்­றூ­டாக சமர்ப்­பித்தார்.

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்­பொன்­றூ­டாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­படும் தடை­செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பினர் அஹ­மது முஹ­மது அர்ஷாத் எனும் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த நபரை இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு கைது செய்­தி­ருந்­தது.

தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்­கிய உறுப்­பினர், மாத்­த­ளையைச் சேர்ந்த பஸ்ஹுல் சஹ்ரான் என அறி­ய­ப்படும் மொஹமட் சஹ்ரான் பஸ்ஹுல் ரஹ்மான் எனும் சந்­தேக நப­ரிடம் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் பிர­கா­ரமே அர்­ஷாதின் கைது இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் சி.ஐ.டி. முன்­னெ­டுத்­துள்ள விசேட விசா­ர­ணை­களில் பஸ்ஹுல் சஹ்­ரானின் சகோ­தரி ஒருவர் மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் நபரைத் திரு­மணம் முடித்­துள்ளார். இந்த மொஹமட் அன்வர் மொஹமட் இன்­சா­புடன் பஸ்ஹுல் சஹ்­ரானும் கட்­டாரில் இருந்­த­போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­களைப் பேணி­யுள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே கடந்த 4/21 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் கட்டார் பொலிஸ் நிலை­ய­மொன்றால் கைது செய்­யப்­பட்டு அங்கு தடுத்து வைத்து விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். அத்­துடன், இதன்­போது அவ­ருடன் தங்­கி­யி­ருந்த மாவ­னெல்­லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் எனும் இலங்­கை­ய­ரையும் கைது செய்­தி­ருந்த கட்டார், அவரை இரண்­டரை மாத தடுப்­புக்­காவல் விசா­ர­ணையின் பின்னர் இலங்­கைக்கு நாடு கடத்­தி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து தற்­போது தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றனர்.

குறிப்­பாக சமத் மொஹம்மட் ரியாஸ், சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சொத்து சேர்த்­துள்­ளாரா என்­பது குறித்து இந்த விசா­ர­ணை­களில் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி.யினர் நீதி­வா­னுக்கு கொடுத்­துள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதன்­படி சமத் மொஹமட் றியாஸ், அவ­ரது குடு­ம்ப உறுப்­பி­னர்­க­ளான மொஹமட் நியாஸ் பாத்­திமா நிஸ்லா, மொஹமட் பெளஸ் சித்தி நிஜாரா ஆகி­யோ­ருக்கு சொந்­த­மான வங்­கிக்­க­ணக்­குகள் மற்றும் அதன் விப­ரங்­களை சி.ஐ.டி.க்கு வழங்க 19 வங்­கி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி அது­கு­றித்த மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் மேற்பார்வை ஆலோசனைக்கமைய விசேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 4 பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திசிங்க தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.