முஸ்லிம்களை கூறுபோட்டு அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காய ஒரு சக்தி நினைக்கிறது

அஷ்ரபைபோல் அதனை எதிர்கொள்ளும் பலம் வேண்டும் என்கிறார் ஹக்கீம்

0 674

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19 ஆவது நினை­வேந்தல் நிகழ்­வுகள் கடந்த திங்­கட்­கி­ழமை குரு­நாகல், சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ “ரிச்வின்” வர­வேற்பு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்­சா­ள­ராக அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த காயல் மஹ்பூப் குழு­வினர் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் பெருந்­தி­ர­ளான கட்சி ஆத­ர­வா­ளர்­களும் இந்­த­நி­கழ்வில் கலந்து கொண்­டனர். நிகழ்­வு­களை குரு­நாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அமைப்­பா­ளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி ரிஸ்வி ஜவ­ஹர்ஷா மற்றும் குரு­நாகல் மாவட்ட முஸ்லிம் காங்­கி­ரஸின் குரு­நாகல் மாவட்ட மத்­திய குழு­வினர் ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இந்­நி­கழ்வில் அமைச்சர் ஹக்கீம் ஆற்­றிய உரை:

“மறைந்த எமது மு.கா. தலைவர் எம்.எச்.எம்.அஷ்­ரபின் இழப்­பினை வரு­டா­வ­ருடம் நாம் நினைவு கூர்­வது என்­பது அவ­ரது சக­வா­சத்தை கொண்­டா­டு­கின்ற ஒரு நிகழ்­வா­கத்தான் தொடர்ந்தும் இருந்து வந்­தி­ருக்­கி­றது. என்றும் எங்­க­ளோடு உட­னி­ருக்­கின்ற ஒரு­வ­ரா­கத்தான் அவரை நாங்கள் எல்­லோரும் பார்க்­கிறோம். மறைந்தும் மறை­யாத இந்த நாட்டு முஸ்­லிம்­களின் தனிப்­பெரும் தானைத்­த­ள­ப­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­து­கிற மிகப்­பெ­ரிய ஆளு­மை­யாக அவரை என்­றென்றும் நாங்கள் நிலை­நி­றுத்தி நினைத்துக் கொண்­டா­டு­கிறோம். அந்தக் கொண்­டாட்­டத்தின் ஒரு அம்­ச­மா­கத்தான் அவர் எங்­களை விட்டு பிரிந்த அகோர நிகழ்வின் பின்­ன­ணி­யி­லேயே 19 வரு­டங்கள் உருண்­டோ­டி­விட்­டன. இந்த 19 வரு­டங்­க­ளுக்குள் இந்­நாட்டின் அர­சியல் பல­வி­த­மான புதிய பரி­ணா­மங்­களை அடைந்­தி­ருக்­கி­றது.

இந்தக் கால எல்­லையில் முஸ்லிம் சமூகம் அவ்­வப்­போது நிறைய சவால்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது. இந்த ஒவ்­வொரு கட்­டத்­திலும் எங்­க­ளு­டைய பெருந்­த­லைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்­க­ளு­டைய வழி­காட்டல், அவ­ரு­டைய வாழ்வில் பல சந்­தர்ப்­பங்­களில் எதிர்­கொண்ட சவால்கள் என்­பன எப்­போ­தெல்லாம் நாங்கள் நெருக்­கு­வா­ரங்­களை எதிர்­நோக்­கு­கின்ற பொழு­து­களில் எங்கள் கண்­முன்னே வந்து நிழ­லா­டு­கின்ற விஷ­யங்­க­ளாகும் என்று சொன்னால் அது மிகை­யா­காது.

தலை­வ­ரு­டைய குண­வி­யல்­பு­களை அவ­ரு­டைய நினை­வேந்தல் நிகழ்ச்­சி­யிலே இரை­மீட்டிப் பார்ப்­ப­தென்­பது மாமூ­லாக எல்­லோரும் செய்­கின்ற மரி­யா­தை­யாக இருந்­து­விட்டு போகும் என்­ப­தற்­காக நாங்கள் அதனை செய்­ய­வில்லை. எந்த சந்­தர்ப்­பத்­திலும் அவ­ரு­டைய அர­சி­யலை உர­சிப்­பார்க்­கின்ற போது என்­னென்ன சந்­தர்ப்­பங்­க­ளிலே அவரை நாங்கள் நினைவு கூரு­கிறோம், அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் அவர் இருந்­தி­ருந்தால் எவ்­வாறு எதிர்­கொண்­டி­ருப்பார் என்று அத­னோடு ஒத்­துப்­பார்க்­கின்ற ஒரு விஷ­ய­மா­கத்தான் நாங்கள் அவ­ரு­டைய, வாழ்க்­கையை எங்­க­ளோடு இரண்­டறக் கலந்த ஒன்­றாக வடி­வ­மைத்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

கடந்த வருடம் சம்­மாந்­து­றை­யிலே நாங்கள் தலை­வ­ரு­டைய இந்த நினைவு நாளை கொண்­டா­டி­ய­போது அடுத்து வரு­கின்ற வரு­ஷத்­திலே என்­னென்ன சவால்­களை எதிர்­கொள்வோம் என்று யாரும் ஆரூடம் கூறக்­கூ­டிய நிலை­யிலே நாங்கள் இருக்­க­வில்லை. நினைவு நாளை கொண்­டாடி ஒரு­மாதம் கழிந்­த­வு­ட­னேயே இந்த நாட்­டிலே மிகப்­பெ­ரி­ய­தொரு அர­சியல் பிர­ளயம் தலை­யெ­டுத்­தது. பெரி­ய­தொரு அர­சியல் சதி அரங்­கே­றி­யதை நாங்கள் எல்­லோரும் பார்த்தோம். அதிலே முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் பிர­தி­நி­தி­களை வெறும் பக­டைக்­காய்­க­ளாகப் பாவித்து இந்த சது­ரங்க விளை­யாட்டில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை காவு­கொண்டு மிகப்­பெ­ரி­ய­தொரு அர­சியல் சதியை அரங்­கேற்­றி­வி­டலாம் என்று எண்­ணிக்­கொண்­டி­ருந்த சக்­தி­கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 12 பேர் எடுத்த முடி­வினால் தடு­மா­றிப்­போ­னார்கள். அதுவும் மறைந்த எங்கள் தலை­வரின் பாச­றை­யிலே கற்ற விட­யங்­கள்தான்.

சவால் என்று வரு­கின்­ற­போது உம்­ரா­வுக்கு சென்று, கஃபத்­துல்­லாஹ்வை தரி­சிக்­கின்­றமை அவ­ரது வழமை. அவற்­றைத்தான் நாங்கள் பின்­பற்­று­கிறோம். அனை­வ­ரையும் கப்­ப­லேற்றி கொண்டு போகின்ற அந்த நிகழ்வு தலைவர் அவர்கள் மறைந்த அந்த வருஷம் எல்­லோ­ருக்கும் ஞாப­க­மி­ருக்கும். அவ­ரு­டைய அந்த உம்ரா பயணம், தன்­னு­டைய இஹ்ராம் துணியை களை­யாமல் ஒன்­பது நாட்கள் தொடர்ச்­சி­யாக, இந்த நாட்டில் அடுத்த கட்­ட­மாக வரப்­போ­கின்ற தேர்­த­லுக்கு எவ்­வாறு முகம் கொடுப்­பது, அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களை செய்­வ­தற்­காக பக்கம் பக்­க­மாக அவர் ஆவ­ணங்கள் தயா­ரித்­துக்­கொண்­டி­ருந்தார். ஜித்­தா­விலே இருந்து கொண்டு தன்­னு­டைய உம்ரா கட­மையை முடிப்­ப­தற்கு முன்பு தன்­னு­டைய சமூகம் சார்ந்த அர­சி­யலை சாது­ரி­ய­மாக கையாள்­வ­தற்கு எதை­யெல்லாம் செய்­யலாம் என்று திட்டம் போட்­டுக்­கொண்டு செயற்­பட்டார்.

எனக்கு இன்று போல ஞாபகம் இருக்­கி­றது இரவு 10.30 மணிக்கு தலை­வ­ரி­ட­மி­ருந்து எனக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. சுமார் 40 நிமி­டங்கள் அவர் என்­னோடு பேசினார். தொலை­பேசி அழைப்­பி­னு­டைய நோக்கம் அன்று முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டைய பொதுச்­செ­ய­லாளர் பொறுப்­பிலே இருந்த எனக்கு முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் மரச்­சின்­னத்தை தான் அமைத்­தி­ருந்த தேசிய ஐக்­கிய முன்­னணி (நுஆ) கட்­சிக்கு நாங்கள் சின்­னத்தை மாற்­றி­யெ­டுப்போம்.

சின்­னத்தை மாற்­று­வ­தற்கு தேர்­தல்கள் சட்­டத்தின் பிர­காரம் கட்­சியின் செய­லாளர் தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் எழுத வேண்டும். ஒரு பாரா­ளு­மன்ற தேர்தல் அறி­வித்­ததன் பின்னர் இரண்டு கட்­சிகள் தாம் விரும்­பினால் தமது சின்­னங்­களை மாற்­றிக்­கொள்ள முடியும் என்ற ஷரத்­தினை மிக நுணுக்­க­மாகத் தேடிப்­பி­டித்து, முஸ்லிம் காங்­கி­ரஸை விடுத்து நாங்கள் ஒரு புதிய பொது­வான அர­சி­ய­லுக்­காகத் தயா­ராக வேண்­டு­மென்ற நோக்­கிலே அதை மாற்றி எடுப்­ப­தற்­காக இது சரியா பிழையா என்­ப­தற்­கான அந்த விஷ­யத்தில் என்னை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இது சம்­பந்­தமாகப் பேசினார்.
ஈற்­றிலே உம்ரா முடித்து வந்­த­வு­ட­னேயே எல்­லோ­ருக்கும் ஞாபகம் இருக்கும் அன்­றைய ட்ரான்ஸ் ஏசியா ஹோட்­டலில் மு.காவின் பேராளர் மாநாடு, விகா­ர­ம­கா­தேவி பூங்­கா­விலே நுஆ கட்­சியின் இன்­னொரு பேராளர் மாநாடு. அவர் என்ன செய்­யப்­போ­கிறார் என்று யாருக்கும் தெரிந்­தி­ருக்­க­வில்லை. இரு கட்­சி­க­ளி­லு­மி­ருந்து செய­லா­ளர்கள் பதவி வில­கினோம். தலை­வரின் இந்த முடி­வுகள் பற்றி அவர் யாரி­டமும் சொல்­ல­வில்லை. இரா­ஜி­னாமா கடி­தத்தை வாங்­கினார் வாங்கி அவர் செய்த அடுத்த வேலை முஸ்லிம் காங்­கிரஸ் பொதுச்­செ­ய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நான் பத­வி­யி­றக்­கப்­பட்டு, மு. காவின் செய­லாளர் பத­விக்கு இந்த குரு­நாகல் மாவட்­டத்­தி­லி­ருந்து கட்­சியின் மூத்த போரா­ளி­யான டாக்டர் ஹப்ரத் நிய­மிக்­கப்­ப­டு­கிறார். எனக்கும் ஒரு கௌரவ பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சிலே தரப்­ப­டு­கின்­றது. பிரதி தவி­சாளர் என்று நினைக்­கிறேன்.

எல்­லோரும் ஆச்­ச­ரி­யத்­துடன் பார்த்­தார்கள். முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரி­டத்தில் செய­லாளர் நம்­பிக்­கை­யி­ழந்து விட்­டாரோ, திடீ­ரென்று அவ­ரது பதவி பறிக்­கப்­பட்­டு­விட்­ட­தென்று. கட்சி தலை­மைக்கு விசு­வா­ச­மாக இருக்­க­வேண்­டிய ஒரு பத­வி­யா­கிய செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து ரவூப் ஹக்கீம் அகற்­றப்­பட்டார் என்ற விஷயம் எல்­லோ­ருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்­தியம் போல இருந்­தது. யாரும் பேச­வில்லை. தலைவர் சொன்னால் எதையும் திருப்­பிக்­கேட்­காமல் இருக்­கின்ற போரா­ளிகள் என்ற வகை­யிலே நாங்கள் இருந்தோம்.

விகா­ர­ம­கா­தேவி பூங்­கா­விலே தான் ரக­சியம் என்­ன­வென்று தெரிந்­தது. அங்கு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் (நுஆ) செய­லா­ள­ராக முன்னர் நண்பர் ஹிஸ்­புல்லாஹ் இருந்த இடத்­திற்கு நான் நிய­மிக்­கப்­ப­டு­கிறேன். ஏனென்றால் தேசிய ஐக்­கிய முன்­ன­ணிதான் தேர்­தலில் கள­மி­றங்­கப்­போ­கி­றது. அதி­லேதான் நாங்கள் தேர்தல் கேட்­கப்­போ­கிறோம். மரச்­சின்னம் அதற்கு மாற்றி எடுக்­கப்­ப­டு­கி­றது.

தேசிய ஐக்­கிய முன்­ன­ணியும், பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியும் அன்று தேர்தல் ஒப்­பந்தம் செய்து தலைவர் அம்­பாறை மாவட்­டத்­திலே பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் கதிரைச் சின்­னத்­திலே கேட்­ப­தற்­கான ஏற்­பாடு. தொப்பி மொஹிதீன், அதா­வுல்லா உட்­பட ஏனைய உறுப்­பி­னர்கள் மூன்று முஸ்லிம் உறுப்­பி­னர்கள் கேட்­பது. அதிலே கேட்­ப­தற்­காக விம­ல­வீர திஸா­நா­யக்­கவும், தேசிய பட்­டி­ய­லுக்­காக தெவ­ரப்­பெ­ரு­மவும் போடப்­ப­டு­கின்­றார்கள். இப்­ப­டி­யெல்லாம் செய்­யப்­பட்­டமை தலை­வ­ரு­டைய எதிர்­பார்ப்பு. மிகத்­தெ­ளி­வாக சொன்னார் நிச்­சய­மாக எங்­க­ளுக்கு 11 ஆச­னங்கள் வரும் என்று கணக்­குப்­போட்டு சொன்னார். தேர்தல் முடி­வுகள் வந்­த­போது தலைவர் எங்­க­ளோடு இருக்­க­வில்லை. அந்த கோர­வி­பத்தில் அவரை நாங்கள் இழந்தோம். அல்­ஹம்­து­லில்லாஹ் அவர் சொன்ன வாக்கு அப்­ப­டியே பலித்­தது.

அவர் சொன்­னது போலவே 11 ஆச­னங்­களை நாங்கள் வென்­றெ­டுத்தோம். ஏழு ஆச­னங்கள் பொது முன்­ன­ணி­யுடன் கூட்­டாக பெற்றோம். நான்கு ஆச­னங்­களை நாங்கள் நுஆ கட்­சி­யிலே வென்­றெ­டுத்தோம். அந்த நான்கில் ஒரு ஆச­னத்­திற்­கு­ரி­ய­வ­னாக நான் பாரா­ளு­மன்­றத்­திற்கு மரச்­சின்­னத்­திலே கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்டேன். எனக்கு இன்னும் ஞாப­க­மி­ருக்­கி­றது வேட்­பா­ளர்­க­ளுக்­கான அடை­யாள அட்டை வழங்கும் நிகழ்வு வெகு விமர்­சை­யாக தாருஸ்­ஸ­லாத்தில் நடை­பெற்­ற­போது அதிலே என்னை ஆரத்­த­ழுவி வட,­கி­ழக்குக்கு வெளி­யிலே நீ எனது கட்­சியின் முத­லா­வது தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வருவாய் என்று சொன்னார். அத்­தோடு இன்­னொரு விட­யத்­தையும் சொன்னார் நீங்கள் என்­னு­டைய சபா­நா­ய­க­ரா­கவும் இருப்­பீர்கள் என்றும் சொன்னார்.

அவர் அப்­படித் திட்டம் வைத்­தி­ருந்தார். அடுத்த பாரா­ளு­மன்­றத்­திலே பேரம் பேசு­கின்ற ஒரு நிலைக்குத் தன்­னு­டைய கட்­சியை கொண்டு வர­வேண்டும். அதன்­மூலம் சபா­நா­யகர் பத­வி­யையும் நாங்கள் அடைய வேண்டும். என்­பது அவ­ரது மறை­வுக்­குப்­பின்னால் பல­ருக்கு சொன்ன விட­யங்­க­ளி­லி­ருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். உண்­மையில் எங்­க­ளது 11 ஆச­னங்­கள்தான் ஆட்­சியை தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக இருந்­தது. எங்­க­ளு­டைய ஆச­னங்கள் இல்லை என்றால் சந்­தி­ரிகா அம்­மையார் ஆட்­சி­ய­மைத்­தி­ருக்க முடி­யாது. அந்த நிலை­மையை கொண்டு வரு­வ­தற்­காக அவர் தன்­னு­டைய இஹ்ராம் துணியை களை­யாமல் செய்த அந்த அர­சியல் சாக­சங்­களை இப்­போது இரை­மீட்டிப் பார்க்­கிறோம்.

என்ன சவால் வந்­தாலும் தலைவர் என்ன செய்­தி­ருப்பார், எப்­படி நடந்­தி­ருப்பார் என்­றெல்லாம் எண்­ணிப்­பார்க்­கின்ற போது, ஒரு தேர்தல் காலத்­திலே அவர் செய்­கின்ற இந்த அச­காய, சாமர்த்­தி­ய­மான அர­சியல் நகர்­வுகள் என்­கிற விஷ­யத்தில் அவ­ருக்கு நிகர் அவர்தான்.

இன்று எல்­லோரும் தடு­மா­றிப்­போ­யி­ருக்­கி­றார்கள். நாடு முழுக்க ஒரு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முகம் கொடுப்­ப­தற்கு பார்த்­துக்­கொண்டு இருக்­கிறோம். அர­சாங்­கத்­திலே இருக்­கின்ற பங்­கா­ளிக்­கட்­சிகள் எல்லாம் அர­சாங்­கத்தின் பிர­தான கட்சி என்ன முடிவு எடுக்கும் என்­ப­திலே எல்­லோரும் அடிக்­கடி சந்­தித்துப் பேசிக்­கொள்­கிறோம். கள யதார்த்­தங்­களில் ஏதோ இருக்­கத்­தக்­க­தாக தலை­மைகள் வேறு ஏதோ சிந்­த­னை­களில் இருப்­ப­தைப்­போல எங்­க­ளுக்கு தெரி­கி­றது. ஆனால் இந்தக் கள யதார்­தங்­க­ளைப்­பற்­றிய எந்த புரி­த­லு­மில்­லாமல் குடும்­பிச்­சண்டை நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

1988 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் என்­னு­டைய நினை­வுக்கு வரு­கி­றது. எங்­க­ளது கட்சி சந்­தித்த முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல். இந்த நாட்டின் அர­சி­ய­லையே தலை­கீ­ழாக புரட்­டிப்­போட்ட ஒரு தேர்தல் என்­று­கூட சொல்­லலாம். ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் ஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யோடு 77 ஆம் ஆண்டு தொடக்கம் 89 ஆம் ஆண்டு வரை ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை மக்கள் மீது திணித்து ஸ்ரீமாவோ பண்­டார நாயக்­க­வி­னது குடி­யு­ரி­மையை பறித்து, மிகப்­பெ­ரிய ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கையின் மூலம் ஒரு ஆட்சி நீடிப்பை பெற்று ஈற்­றிலே வடக்­கிலும் யுத்தம், தெற்­கிலும் யுத்தம் இரு­பு­றத்­திலும் மிகப்­பெ­ரிய அர­சியல் நெருக்­க­டிகள் மூண்­டி­ருக்­கின்ற நிலையில் அந்­தக்­கட்­டத்­திலே எங்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று நான் நினைத்­துப்­பார்க்­கிறேன்.

ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்ப வேண்டும் என்­ப­தற்­காக பெரிய எதிர்க்­கட்சி கூட்­டணி “ஜன­நா­யக மக்கள் கூட்­டணி” என்ற பெயரில் உரு­வாகிச் செயற்­பட்­டது. அதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் புரட்­சி­க­ர­மான அர­சியல் இயக்கம் இணைந்­தி­ருந்­தது. இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தில் அதி­ருப்­தி­ய­டைந்த முஸ்­லிம்கள் தங்­க­ளு­டைய அடை­யாள அர­சி­யலை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக ஆரம்­பித்த போராட்டம், நடந்து முடிந்த மாகாண சபை தேர்­தல்­க­ளிலே எங்­க­ளுக்குப் புதி­ய­தொரு அர­சியல் அறி­மு­கத்தை நாடு முழு­வ­திலும் உரு­வாக்கித் தந்­தி­ருந்­தது. வட­,கி­ழக்­கிலே நாங்கள் உத்­தி­யோ­க­பூர்வ எதிர்க்­கட்சி. வட,­கி­ழக்­குக்கு வெளியே 12 ஆச­னங்கள் மொத்தம் 29 மாகாண சபை ஆச­னங்­க­ளோடு இருந்த எங்­களை சேர்த்­துக்­கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தை வீட்­டுக்­க­னுப்ப வேண்டும் என்­பதே இந்தக் கூட்­ட­ணியின் நோக்­காக இருந்­தது.

இந்த நேரத்தில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக சில­வி­ட­யங்கள் நடந்­தே­றின. எங்­க­ளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கு­மான தேர்தல் உடன்­ப­டிக்­கையில் ஒரு முரண்­பாடு வந்­து­விட்­டது. அந்த முரண்­பாட்டின் பின்னர் இர­வோடு இர­வாக பிரே­ம­தாச எங்­களை அழைத்து பேச்­சு­வார்த்தை நடாத்­தினார்.

அதன் பய­னா­கத்தான் சகோ­தரர் ரவூப் ஸெய்ன் சொன்ன அந்த சாத­னை­களில் ஒன்று நிறை­வே­று­கி­றது. இந்த நாட்டின் அர­சியல் சாச­னமே மாற்றி அமைக்­கப்­ப­டு­கி­றது. ஆறில் ஐந்து பெரும்­பான்மை இந்த பாரா­ளு­மன்றம் கலைப்­ப­தற்கு ஒரு நாள் இருக்­கத்­தக்­க­தாக 15 வது ஷரத்து திருத்­தப்­பட்டு இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்­லாமல் சகல சிறிய கட்­சி­க­ளுக்கும், பல சிறு­பான்மை இயக்­கங்­க­ளுக்கும் ஒரு அர­சியல் அடை­யா­ளத்தை தனித்­து­வத்­தோடு அடை­யக்­கூ­டிய வாய்ப்பை ஆக்­கித்­தந்த பெரு­மைக்­கு­ரிய பாரிய சாத­னையை செய்­தது எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய சாணக்­கியம் என்றால் அது மிகை­யா­காது.

ஒரு நள்­ளி­ர­விலே அனைத்தும் நடந்து முடிந்து அடுத்­தநாள் பாரா­ளு­மன்­றத்­திலே அர­சியல் சாச­னத்­திற்கு திருத்­தமும் பிரே­ரிக்­கப்­பட்டு அது இர­வோ­டி­ர­வாக வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­பட்­டது.

அடுத்து வரு­கின்ற தேர்­தலில் இவ்­வா­றான உபா­யத்தை கையாள வேண்­டி­வ­ருமோ தெரி­யாது. 1988 ஜனா­தி­பதி தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கும் ஆத­ர­வ­ளிப்­ப­தாக நாங்கள் சொல்­ல­வில்லை. ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க எங்­க­ளுக்குத் துரோ­க­மி­ழைத்து விட்டார். அவ­ரைத்­த­விர யாருக்கும் வாக்­க­ளிக்­கலாம். இத­னைத்தான் நாங்கள் சொன்னோம். ஏனென்றால் அந்த நேரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க சொல்ல முடி­யாத நிலை. இதனை பிரே­ம­தா­சா­வுக்கும் தெளிவு படுத்­தினோம். அவர் அதனை ஏற்­றுக்­கொண்டார். இதன் விளை­வா­கதான் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யானார்.

இது எதிர்­கா­லத்தில் எங்­க­ளுக்கு இன்­னொரு உபாயம். இவ்­வா­றான மாற்­று­வ­ழி­களை எங்­க­ளுக்கு சொல்­லித்­தந்த பெருந்­த­லை­வ­ரா­கதான் அவரை என்றும் நாங்கள் நினைவு கூரு­கிறோம்.

தேர்தல் காலங்­க­ளிலே தலை­வரின் சுறு­சு­றுப்பை அரு­கி­லி­ருந்து பார்த்­த­வர்கள் இங்கு நிறை­யப்பேர் இருக்­கி­றார்கள். ஜனா­தி­பதி தேர்தல் என்றால் எப்­படி, அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஆச­னங்­களை எப்­படிக் கூட்­டிக்­கொள்ள முடியும், அத­னோடு சமூகம் சார்ந்த விட­யங்­களை எப்­படி சாதித்­துக்­கொள்­வது. என்­பதை வடி­வ­மைப்­பதில் தொடர்ந்தும் ஊணின்றி, உறக்­க­மின்றி உழைக்­கின்ற அந்த தலை­மை­யைத்தான் சமூகம் இழந்து பெரு­மூச்சு விட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. ஒரு சமூ­கத்தின் அர­சியல் தலைமை என்றால் என்ன? அத­னு­டைய ஆளு­மையின் அம்­சங்கள் என்ன? என்­ப­தற்­கான அடை­யா­ளச்­சின்னம் அவர். அந்த அடை­யாளச் சின்­னத்­தைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த தலைவனைப்போல ஒரு தலைவனை இனிமேல் நாங்கள் பார்க்க முடியாது.

தன்னுடைய சொந்தக் குடும்ப உறுப்பினராகவே கட்சியின் உறுப்பினர்களைப் பார்த்த ஒரு தலைவனைத்தான் நாம் இழந்துள்ளோம்.
பெரும் விருட்சமொன்றை எமக்கு அவர் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை தரிப்பதற்கு எத்தனை கோடாரிக்காம்புகள் வந்தாலும் அதனை தாங்கி நிற்கின்ற திராணியை போராளிகளுக்கு அவர் தந்திருக்கிறார். சமூகம் பாரிய சவால்களை சந்தித்தபோது நாங்கள் இணைந்து செயற்பட்டோம்.

அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடு எங்கிருந்து உருவெடுத்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவர்களை யார் இயக்கினார்கள்? அது செய்திருக்கின்ற விபரீதம் இன்று எங்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழகத்தை பாதித்திருக்கிறது, கேரளத்தை பாதித்திருக்கிறது, மாலை தீவையும் அது பாதிக்கலாம் என்ற ஒரு அச்சத்தை உருவாக்கி எந்த சக்தி இதில் குளிர்காய நினைக்கிறது என்பதைப்பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த இந்து சமுத்திரத்தின் தென் பிராந்தியத்திலிருக்கின்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒன்றுபடுத்தி, ஒன்றாக நின்று இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

எங்களை கூறுபோட்டு எங்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்ற சக்திகளின் மூலவித்தை நாங்கள் அடையாளம் காணவேண்டும். ஜனநாயக ரீதியாக அதெற்கெதிரான பலமான ஒரு அணியாக நாம் இருக்க வேண்டும். தலைவர் இருந்திருந்தால் இன்று அதைத்தான் செய்திருப்பார். அந்த தலைவனைப்போல அடுத்தகட்ட அரசியலை பொறுப்புணர்வோடு நாங்கள் கையாள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக சகல தரப்புக்களையும் இணைத்த பலமான ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை புடம் போடுவதற்கு புறப்படுவோம் வாருங்கள்.”

vidivelli

Leave A Reply

Your email address will not be published.