இராஜாங்க அமைச்சின் செயலாளராக அமீர்

0 627

தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கார இரா­ஜாங்க அமைச்சின் செய­லா­ள­ராக இலங்கை நிர்­வாக சேவையின் விஷேட தரத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யான எம்.ஐ.அமீர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நிர்­வாக சேவையில் சுமார் 32 வரு­ட­கால அனு­ப­வத்தைக் கொண்ட சிரேஷ்ட அதி­கா­ரி­யான இவர், ஆரம்­பத்தில் அம்­பாறை மாவட்ட காணி அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றினார். 

பின்னர் சம்­மாந்­துறை, கல்­முனை பிர­தேச செய­ல­கங்­களின் பிர­தேச செய­லா­ள­ரா­கவும், அம்­பாறை மாவட்ட மேல­திக அர­சாங்க அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து தொலைத்­தொ­டர்­புகள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் விளை­யாட்டு அமைச்சின் மேல­திக செய­லா­ள­ராக கட­மை­யாற்றி வந்த நிலை­யி­லேயே எம்.ஐ.எம். அமீர், மேற்­படி இரா­ஜாங்க அமைச்சின் செய­லா­ள­ராக பத­வி­யு­யர்வு பெற்­றி­ருக்­கின்றார்.

சம்­மாந்­து­றையை சேர்ந்த இவர், ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.நிப்றாஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.